Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!

Posted on December 30, 2012 by admin

 

ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!

மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட கள்ளநரி ஊடக கூட்டங்கள் முஸ்லிம்களை பற்றிய பொய்யான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள், அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள சகோதரர்கள் உண்மை நிலையை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,

தாங்கள் உண்மை நிலையை விளக்கிய பிறகு தான் மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட குள்ளநரி கூட்டத்திற்கு மரண சாசனம் எழுத நீதிமன்ற படியை மிதிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகிறோம்,

இறைவனின் மாபெரும் கிருபையினால் கிறித்தவ நாடான ஜெர்மனியில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை நாம் கண்டு வருகிறோம், அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கிறித்தவ சகோதரர்கள் ஆண்களும், பெண்களும் இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள், அந்த வகையில் ஒரு சிலரின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…

1) கான்சர்ச்கி (Ganczarski)

2) குத்து சண்டை வீரர் பியர் வோகல் (Pierre Vogel a german Boxer)

3) யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes)

இப்படி பல சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக அலைகடலென சத்திய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் 3000 க்கும் அதிகமான சகோதரர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகை தந்துள்ளார்கள்,

இவ்வாறு ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் காவிவெறி பிடித்த பத்திரிக்கையான மாலைமலர் ஜெர்மனியில் உள்ள ஒரு இந்தியர் ரோட்டில் நடந்து செல்லும்போது திடீரென இரண்டு தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு மாறுமாறு மிரட்டினார்களாம்,

அந்த இந்தியர் இஸ்லாத்திற்கு வரமறுத்துவிட்டாராம், ஆகையால் அவருடைய நாக்கை தீவிரவாதிகள் அறுத்து விட்டார்கள் என பொய்யான செய்தியை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்தை விதைத்துள்ளது மாலைமலர்,

மாலைமலர் எடுத்த அதே வாந்தியை ஒன் இந்தியா தளமும், விகடன் செய்திகள் தளமும் அதே செய்தியை வெளியிட்டு தானும் ஒரு காவிக்கூட்டம் என்பதை தெளிவாகவே நிரூபித்து இருந்தது,

இந்த செய்தியை முகநூலிலுள்ள சுவாமி வித்தியானந்தா என்பவர் வெளியிட்டு ஒன்றும் அறியாத மக்களுக்கு மேலும் விஷக்கருத்தை பாய்ச்சுகிறார்,

ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து வெளியிடும் காவிக்கூட்டங்களே….

1) இந்தியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே, அந்த இந்தியரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

2) ஜெர்மனியில் ஒரு இந்தியருக்கு பாதிப்பு என்றால் இந்திய அரசு இதுவரை ஜெர்மனி அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

3) பாதிக்கப்பட்ட இந்தியர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார், அவரை எந்த மருத்துவமனையில் வைத்து மருத்துவம் செய்யப்படுகிறது,

4) இந்தியரின் நாக்கை ஜெர்மனியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் துண்டித்தார்கள் என பொய்யை விதைக்கிறாயேஸ. அந்த முஸ்லிம் இயக்கத்தின் பெயர் என்ன? அந்த இயக்கத்தினரை ஜெர்மனி காவல்துறை கைது செய்ததா?

5) மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற அந்த சம்பவம் BBC, Gulf News, Yahoo News உள்ளிட்ட உலகளாவிய ஊடகங்களில் வெளிவராத செய்தி எப்படி மாலைமலர், ஒன் இந்தியா, ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் வந்தது எப்படி? உங்களுக்கு செய்தி சொன்ன செய்தியாளர் யார்?இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் உங்களால் பதில் சொல்லமுடியாது, ஏனென்றால் உன்னிடம் உண்மை இல்லை என்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதோ தெரியும் ஆனால் உங்களையும் நல்லவர்களாக நினைத்து கொண்டிருக்கும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உண்மை நிலையை புரியவைக்காமல் விடமாட்டோம்,

ஜெர்மனியில் இஸ்லாத்திற்கு வராவிட்டால் நாக்கை அறுப்பதாக இருந்தால் ஜெர்மனியில் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா? ஆனால் அங்கு உள்ள நிலை என்ன ? கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்,

இஸ்லாத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை என்பதை உலக மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இப்படி பட்ட உன் நச்சுக்கருத்தை விதைத்தால் மக்களுக்கு எடுபடும் என நினைக்கிறாயோ?

இதிலிருந்தே மாலைமலர், ஒன் இந்தியா, விகடன் செய்திகள் உள்ளிட்ட குள்ளநரி கூட்டங்கள் உண்மைக்கு மாறான நச்சுக்கருத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது திட்டவட்டமாக புரிகிறது,

அப்படி நீங்கள் சொல்வது போல் உண்மையாக இருந்தால்ஸ அதாவது ஒரு இந்தியர் இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புருத்தப்பட்டு அவர் மாற மறுத்த காரணத்தினால் தீவிரவாத இயக்கத்தினர் அவருடைய நாக்கை துண்டித்து இருப்பார்களேயானால்,

அந்த கேவலத்தை நீ மக்களுக்கு கொண்டு சென்றதை விட நாங்கள் கொண்டு செல்கிறோம், நாங்களும் இந்தியர்கள் தான், எங்கள் சக இந்தியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை,

இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!

நன்றி: சங்கை ரிதுவான்

source: www.niduri.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

77 + = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb