Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா?

Posted on December 29, 2012 by admin

o  திருமண அழைப்பிதழ் வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?

o  திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா?

o  ‘முத்ஆ’ நிக்காஹ் – இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கேள்வி:  திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?”

பதில்:  திருமண அழைப்பிதழ் அச்சடித்து அதன் மூலம் உறவினர்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் அழைப்புக் கொடுப்பது நபிவழியுமல்ல; பித்அத்துமல்ல. பழக்கத்திலுள்ளது. அச்சு எந்திரம் இல்லாத அந்தக் காலத்தில் வாய் வழியாக சொல்லப்பட்டதை இன்று எழுத்து வடிவில் கொடுக்கிறோம். அன்று ஹதீஸ்கள் வாய்வழியாகத்தான் அறிவிக்கப்பட்டன. இன்று அச்சடித்த நூல்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். இதை “பித்அத்” என்று சொல்ல முடியுமா? முடியாது.

விஞ்ஞான வளர்ச்சி மூலம் அடையும் அனுகூலங்களை மனிதன் முறைப்படி அனுபவிப்பது “பித்அத்” அல்ல. எனவே திருமண அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுப்பதும், வாழ்த்துச் செய்திகள் கடித மூலமோ, தந்தி மூலமோ அனுப்புவதும் “பித்அத்” அல்ல என்பதை விளங்கவும்.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி மூலம் மட்டுமே பெறப்பட்டு மார்க்கமாக அறிவிக்கப்பட்ட விஷயங்களில் அவற்றின் லாப – நஷ்டங்களை மறுமையில் மரணத்திற்குப் பின்னரே நாம் சந்திக்கும் நிலையிலிருக்கும் விஷயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத விஷயங்களை (அமல்களை) நுழைப்பதே பித்அத்தாகும்.

 

கேள்வி:  திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா?

பதில்:  நபிவழியில் திருமண விருந்து என்று ஒன்று இல்லை. மணமகன் தரும் வலீமா விருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித் தந்த விருந்தாகும். பெரும்பாலும் நபித்தோழர்களிடையே திருமணம் நடந்திருப்பதை அவர்கள் தரும் வலீமா விருந்து மூலமே அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இத் கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப் படுத்துவதைக் காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனாவில் பெரும் செல்வந்தராக இருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபிதோழர், ஒரு அன்சாரி பெண்ணை மண முடித்தார்கள். அத்திருமணத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட வில்லை. மறுநாள் காலை அப்துர்ராஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்கு வந்தார்கள். அவரது உடையில் மஞ்சள் நிற வாசனை பொருளின் கறை இருப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன விசேஷம்? என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது. தான் ஒரு மதீனத்துப் (அன்சாரிப்) பெண்ணை மணம் முடித்தேன் என பதிலளித்தார்கள்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘எவ்வளவு மஹர் கொடுத்தாய்?’

இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு: ‘ஒரு பேரீத்தம் பழ அளவு தங்கம்!’

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா விருந்து வைப்பீராக’ என்றார்கள்.

இந்நபி மொழியின் மூலம் திருமணங்கள் விருந்து வைத்து நடத்தப்பட்டதாகக் காண முடியவில்லை. ஆனால் திருமணம் முடித்த மணமகன் வலீமா விருந்து கொடுக்க ரசூல்(ஸல்)வலியுறுத்தியிருப் பதைக் காணலாம். இந்நபிமொழியை முஅத்தா மாலிக்(1108), புகாரி(3/264, 7/10, 83,85,96,97,100;8/105,395) முஸ்லிம்)2/3319- 3322), அபூதாவூது, திர்மிதீ, தாரமீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னது அஹ்மத் போன்றவைகளில் காணலாம்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல திருமணங்களை முடித்தார்கள். எந்த திருமணத்திற்கும் அவர்கள் திருமண விருந்து கொடுத்ததாக ஆதாரமில்லை. ஆனால் ஒவ்வொரு திருமணத்திற்கும் வலீமா விருந்து கொடுத்ததாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மதீனாவில் ஏறத்தாழ 10 வருடங்கள் பணிபுரிந்த அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த “வலீமா விருந்துகளில் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது.

இந்நபிமொழி புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, பைஹகீ, அஹ்மத் போன்ற நூல்களில் காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களில் இருமுத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாகக் கொடுத்தார்கள். இங்கு இரு முத்துக்கள் என்பது 15 கிலோ ஆகம். இதனை சபிய்யா பின்து ஷைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, புகாரி, (7/101) முஸ்லிம், அஹமது போன்ற நூல்களில் பதிவாகி உள்ளதைக் காணலாம்.

இவ்விளக்கம் கொடுக்கக் காரணம், இன்று முஸ்லிம்களிடையே திருமண விருந்து என பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் வீணாவதைக் காண்கிறோம். அதுவும் பெண் வீட்டார் தலையில் சுமத்தப்படுவதையும் காண்கிறோம். ஒரு சிலர் பெருமனதுடன் இருவீட்டாரும் சேர்ந்து பெரும் விருந்துகள் கொடுப்பதையும் காண்கிறோம். இவையனைத்தும் நபிவழி அற்ற முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல்களாகும்.

நபிவழியின்படி மணமகன் கொடுக்கும் வலீமா விருந்தே சிறப்பானதாகும். அதுவும் படாடோபமின்றி கொடுக்கப்பட வேண்டுமென்பதை மேற்கண்ட நபி மொழிகள் நமக்கு தெளிவாக்குகின்றன.

 

கேள்வி: ‘முத்ஆ’ நிக்காஹ் – இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

பதில்: ஆரம்ப காலத்தில் அது அனுமதிக்கப்பட்டிருந்தது பின்னர் அது ஹராமாக்கப்பட்டு விட்டது. மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் ‘முஆத்’ வுக்கு அனுமதி கொடுத்து விட்டுப் பின்னர் அதை ஹராமாக்கி விட்டனர். – (முஸ்லிம்)

மனிதர்களே! உங்களுக்கு ‘முத்ஆ’ நிக்காஹை நான் அனுமதித்திருந்தேன். அல்லாஹ் கியாம நாள் வரைக்கும் அதை ஹராமாக்கி விட்டான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினர் (இப்னுமாஜா)

– அந்நஜாத்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb