நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றி…
O “இந்த சமூகத்தின் மீது நான் அதிகமாக பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்” (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: பைஹகீ)
(நயவஞ்சகர்கள் என்பதன் பொருள் முனாஃபிக் என்பதாகும்.)
O “கியாமத் நாளில் முத்திரையிடப்பட்ட பட்டோலைகள் கொண்டுவரப்பட்டு, அல்லாஹு(த்)தஆலாவின் முன்னிலையில் சமப்பிக்கப்படும். சிலரின் பட்டோலைகளை, “ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றும், இன்னும் சிலரின் பட்டோலைகளை “வீசி எறியுங்கள்” என்றும் அல்லாஹு(த்)தஆலா கூறுவான். “உன்னுடைய கண்ணியம், கம்பீரத்தின் மீது சத்தியமாக! நாங்கள் இந்தப் பட்டோலைகளில் நன்மையைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லையே?” என்று மலக்குகள் கூறுவார்கள். “அந்தச் செயல்கள் எனக்காகச் செய்யப்படவில்லை. இன்றைய தினம் நான் எனது பொருத்தத்திற்காகச் செய்யப்பட்ட அமலையே ஏற்றுக்கொள்வேன்” என்று அல்லாஹு(த்)தஆலா கூறுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“உனது கண்ணியத்தின்மீது சத்தியமாக! நாங்கள் அவர் செய்தவற்றைத் தான் எழுதினோம்” (அந்த அமல்கள் எல்லாம் நல்லவையாகத் தான் இருந்தன) என்று மலக்குகள் கூறுவர். “மலக்குகளே! நீங்கள் உண்மையையே கூறினீர்கள்! (ஆனால்) அவனுடைய அமல்கள் என்னுடைய பொருத்தத்திற்காக அல்லாமல் வேறு நோக்கத்திற்காகச் செய்யப்பட்டவை” என்று அல்லாஹு(த்)தஆலா பதில் கூறுவான் என்று மற்றுமோர் அறிவிப்பில் வந்துள்ளது. (நூல்கள்: தப்ரானீ, பஸ்ஸார், மஜ்மஸ்ஸவாயித்)
O “எவர் பிரபல்யம் எனும் ஆடையை உலகில் அணிவாரோ, கியாமத் நாளன்று அல்லாஹுத்தஆலா அவருக்கு கேவலம் என்னும் ஆடையை அணிவித்து, அதற்கு நெருப்பை மூட்டிவிடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா)
O “மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தொழுதாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் நோன்பு நோற்றாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தர்மம் செய்தாரோ, அவர் நிச்சயமாக இணைவைத்துவிட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கல் கூறியதை தாம் கேட்டதாக ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)
O “உங்களில் எவரும் தன்னைத்தானே தாழ்வாகக் கருத வேண்டாம்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னபோது, “தன்னைத்தானே தாழ்வாகக் கருதுவது என்றால் என்ன?” என்று ஸஹாபாக்கள் (ரளியல்லாஹு அன்ஹும்) கேட்டனர். அல்லாஹு(த்)தஆலாவின் புறத்திலிருந்து சீர்திருத்தம் செய்யும் பொறுப்பு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டு, அதுபற்றி அவர் ஏதும் சீர் திருத்தம் செய்யாமல் இருந்து அல்லாஹு(த்)தஆலா கியாமத் நாளில், “இன்ன இன்ன காரியங்களில் சீர்திருத்தம் செய்யவிடாமல் உன்னை தடை செய்தது எது?” என்று அவரிடம் கேட்பான். “மக்கள் எனக்குத் தீங்கு விளைவிப்பார்கள் என்று பயந்து சீர்திருத்தம் செய்யாமல் இருந்துவிட்டேன்” என்று அவர் பதில் சொல்வார். “நீ என்னையல்லவா பயப்பட வேண்டும்? பயப்படுவதற்கு நான் தான் அதிகத் தகுதி பெற்றவன்” என்று அல்லாஹு(த்)தஆலா கூறுவான்” என்ற ஹதீஸை அபூஸஈத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா)
(கருத்து: தீமையை விட்டும் மக்களைத் தடுக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்டு மக்களின் பேச்சுக்கு பயந்து தீமையைத் தடுக்கும் காரியத்தை விடுவது, தன்னைத் தானே தாழ்வாக கருதுவதாகும்)
O “அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் முஷ்ரிக்குகள் மீது சாபம் இடும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. “நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, ரஹ்மத்தாக (இரக்கம் காட்டுபவனாக)வே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
O “செயல்களை எளிதாக்கிக் காட்டுங்கள், கடினமானதாக ஆக்காதீர்கள். மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சிக்குரிய வழியை ஏற்பத்துங்கள்., வெறுப்பை உண்டாக்காதீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
O “இந்த சமூகத்தின் மீது நான் அதிகமாக பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்” (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: பைஹகீ)
O “இந்த சமூகத்தின் மீது நான் அதிகமாக பயப்படுவது, நாவளவில் அறிஞராக இருக்கும் நயவஞ்சகர்களைப் பற்றித்தான்” (தன்னுடைய ஈமான் மற்றும் அமல் பற்றி கவலைப்படாமல் மார்க்க ஞானங்களைப் பேசுபவன்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: பைஹகீ)