ஹாலந்து நாட்டில் “ஹலால் ஹோம்ஸ்”-ஆதரவும் எதிர்ப்பும்!
ஹாலந்து நாட்டின் “ஆம்ஸ்டர்டாம்” நகரில் “ஹலால் ஹோம்ஸ்” என்ற பெயரில், 180 “அடுக்குமாடி குடியிருப்பு” கட்டிடங்களுக்கான அனுமதியும், பழைய அப்பார்ட்மெண்டுகளில் மாற்றங்கள் செய்துகொள்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.
அதேநேரம் “ஹலால் ஹோம்ஸ்” குறித்த சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது.
ஹாலந்து நாட்டில், அடுக்கு மாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்க்கான “விதிமுறைகள்” முழுமையாக பின்பற்றவேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, நீச்சல்குளம், கிளப் உள்ளிட்ட கேளிக்கைக்கான இடம், மது அருந்துவதற்கான “பார்”, ஆண்-பெண் பேதமின்றி உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொதுப்பயன்பாட்டுக்கான, பல அம்சங்களும் இடம் பெற்றால் தான் கட்டிட அனுமதி கிடைக்கும்.
ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதையடுத்து, முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரப்படி வாழ்வதற்கு இது போன்ற குடியிருப்புக்கள், பெரிதும் இடையூறாக உள்ளன.
மேற்கண்ட வசதிகளுக்கும் சேர்த்தே தான், விலை கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே, பொதுப்பயன்பாடுகளுக்கு விட வேண்டிய சதவிகிதப்படி, ஆண்-பெண் கலப்பின்றி தனித்தனி நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கலந்துரையாடல் அரங்கங்கள், தொழுகைக்கான இடங்கள் மற்றும் வீட்டின் உள்-அமைப்பு”க்களில் “பர்தா” அடிப்படையில் சமையல் கட்டுகள், பெண்களுக்கான “அவசர கால தனி வழிகள்” ஆண்-பெண் கலப்பின்றி “லிப்ட்” பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பயனுள்ள பல அம்சங்கள் இணைக்கப்பட்டு “ஹலால் ஹோம்ஸ்” என்ற பெயர்களில் 180 குடியிருப்புக்கள் உருவாகிவிட்டன.
இது தவிர, பழைய குடியிருப்புக்களை விலைக்கு வாங்கி, அதிலும் மாற்றங்களுக்கான அனுமதிகள் பெறப்பட்டு வேகமாக வேலைகள் நடந்து வருகிறது.
இது போன்ற “ஹலால் ஹோம்ஸ்”களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி பல சமூக மக்கள் மத்தியிலும் “பெரும் வரவேற்பு” உள்ளது.
எனினும், ஹாலந்திலும் “பா.ஜ.க” கட்சியை போன்றே “பிரீடம் பார்ட்டி” என்ற கட்சியும், அதன் தலைவராக உள்ள “கேர்ட் வால்ட்ர்ஸ்” போன்றவர்களும் இதற்கு, கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
விரும்பியவர்களோடு உறவு வைத்துக்கொள்வதையும், சந்தோஷங்களை பகிர்ந்துக்கொள்ளும் உரிமையிலும் ஆண்-பெண், என பிரித்துப்பார்ப்பதை ஏற்க முடியாது.
அப்படி வாழ நினைப்பவர்கள் அரேபிய கண்டங்களுக்கு செல்ல வேண்டும், என கருத்து தெரிவித்துள்ளார், கேர்ட் வால்ட்ர்ஸ்.