Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்களா இப்படி…?!!!

Posted on December 11, 2012 by admin

பெண்களா இப்படி…?!!!

தலை குனியுங்கள் பெண்டிரே(!)

படித்தவளாம்(!) ஆசிரியையாம்(?)

எதை படித்தாள்?

எதை பயிற்றுவிக்க?

வெறி தணிக்க

தேவை ஒரு பிஞ்சு குழந்தை

பென்சிலை வைத்தும்

பேனாவை கொண்டும்

ச்சே! நினைக்க அருவருப்பான ஒன்றை

நிகழ்த்தி ரசித்த அரக்கிகளே…

 

உன் வயிற்றிலும் ஏதும் பிறந்ததா?

நன்றாக இருக்கிறதா?

இல்லை உன் வெறிக்கு பலியாகி

மூலையில் கூனி குறுகி கிடக்கிறதா?

உன் வீட்டு ஆண்

உன்னை அடக்க(?)மாட்டாமல்

அடங்கி கிடக்கிறானா?

செத்த உடலுடன்

உறவுகொண்டான் சிங்களவன்…

அவனுக்கு எந்த விதத்திலும்

குறைந்தவளில்லையடி நீ!

 

வரிந்து கட்டிக்கொண்டு

பொங்கும் பெண்ணுரிமை வாதிகளே

எங்கே போனீர்கள்?

இளம் தளிரை சிதைத்த கொடூரம்

கொதிக்கவில்லையா மனம்

ஏந்தி போராடிக்

கிழித்தெறிய வேண்டாமா

இவர்களின் முகமூடியை…

எங்கே எம் சகோதரர்கள்

வெட்டி வீசுங்கள் உருண்டோடட்டும்

நரகறிக்கு அலையும் அரக்கிகள் தலை

நிமிரட்டும் தாய்மார்களின் குனிந்த தலை!!

 

மாபாதகம் புரிந்தவர்களுக்கு

பரிந்து கொண்டு வரும்

நாக்குகளை அறுத்தெறிய

வேண்டும் ஒரு கூர்வாள்…

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377

இவ்வழக்கில் பொருந்தாதாம்

முன்ஜாமீன் கொடுத்துவிட்டது

நம் சட்டம்…?!

மாற்றவேண்டுமோ

ஒரு சட்டத்தை…

ஸ்கேனில் எந்த குழந்தை

தெரிந்து கொள்ள தடை இல்லை என…!?

 

பெண் குழந்தை பிறந்து பிஞ்சில்

பாதகர் கையில் வதைபடுவதா?

கருவில் மாள்வதா ?

எது உத்தமம் !!?

(விரிவான விவரங்கள் இங்கே )

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை(குழந்தையை) பாலியல் வன்கொடுமை செய்த பிரின்சிபல் போஸ்கோ, ஆசிரியை போசியா இருவரின் கொடுமையான செயலை படித்தபின் ஏற்பட்ட எனது கோபத்தின் வெளிப்பாடு மேலே உள்ள வரிகள். சில ஆண்களால் பெண்மைக்கு பாதுகாப்பின்மை ஒருபக்கம் என்றால் பெண்களாலும் பாலியல் வன்கொடுமை என்பதை ஒரு பெண்ணாக ஜீரணிக்க இயலவில்லை. தாய்மைக்கு ஈடு இணை உலகில் வேறில்லை என்ற எண்ணத்தில் மண் அள்ளி போடுவதை போன்ற இவர்களின் செயல் தாய்மார்களை தலை குனிய வைக்கிறது. இக்கொடும் செயல் புரிந்த சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் என் கண்டனங்கள்.

ஏதோ இருவர் செய்ததிற்காக பெண்கள் நாம் ஏன் தலை குனிய வேண்டும் என்று மாறுபட்டு தயவு செய்து எண்ணாதீர்கள். இதை மீடியாக்கள் பெரிது பண்ணாமல் விட்டது எண்ணி சிறிது நிம்மதியாகவே இருக்கிறது…!? படிக்கவே அச்சுறுத்த கூடிய இப்பாதகம் நம் குழந்தைகளுக்கு நேர்ந்தால் அவர்களின் மன நிலை, எதிர்காலம் பற்றி யோசிக்கவே நடுக்கமாக இருக்கிறது.

மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக இப்பிரச்சனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதுள்ளது, இவர்கள் விசாரித்து விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். விரைவில் விசாரணை முடிவு தெரியவரும். இந்த அளவிற்கு சென்றபின்னும் இது போன்ற ஒன்று நடைபெறவில்லை என்ற சமாளிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதின் மூலம் மேலும் இச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் கடும் தண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும். பத்திரிகைகள், மகளிர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், பெற்றோர் நல சங்கங்கள் இன்னும் பிறவும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

இது போன்றவை எப்போதோ, எங்கோ ஒன்று இரண்டு ஏற்படுவது தானே இதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தெருவிற்கு ஒன்று, ஏன் வீட்டிற்கு ஒன்று கூட இந்த நிமிடம் நடந்துகொண்டிருக்கலாம் எப்படி தெரியும் உங்களுக்கு…குழந்தைகள் தானாக வெளியே சொல்லாதவரை யாருக்கும் தெரியபோவதில்லை…! அவர்கள் சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இவை அரங்கேறுகின்றன…?!

இது ஒருநாளில் முடிந்துவிட கூடிய விஷயம் இல்லை, பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலை காலத்துக்கும் சரியாகாது. மற்றொரு செய்தி ஒன்று, பத்து வயது சிறுமி ஒரு கொடூரனால் சிதைக்கப்பட்டு உதிர போக்கு ஏற்பட்டு சிறுமி பிழைக்க வேண்டும் என்றால் அவளது கர்ப்பபை எடுத்தாக வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட, இப்போது எடுக்கப்பட்டுவிட்டது. இனி அவளது எதிர்காலம்…???

உங்கள் வீட்டு குழந்தைகளை மெதுவாய் விசாரித்து பாருங்கள்…நெருங்கிய உறவினர்கள் தொடங்கி பள்ளியின் ஆசிரியர்கள்(ஆசிரியைகள் !?) பள்ளி வாகன ஓட்டுனர்கள், வாட்ச்மேன்,பக்கத்து வீட்டு நபர்கள் மூலம் தவறான தொடுதல் ஏதும் இதுவரை நடந்திருக்கிறதா என பக்குவமாக கேளுங்கள். பெண் குழந்தை என்று மட்டும் இல்லை ஆண் குழந்தைகளும் மிக அதிகமாக இத்தகைய வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். உங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக அறிவுறுத்துங்கள், நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்று…இன்னும் சொல்ல போனால் அடுத்தவர் எதற்கு தொடவேண்டும்…?!! பிறரை தொடாமல் பழகு என்றே சொல்லி பழக்கினால் என்ன என்று தோன்றுகிறது.

இன்றைய காலகட்டத்தில் தான் இவை நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது…! மனிதமனம் அன்றில் இருந்து இன்று வரை அப்படியேதான் இருக்கிறது, என்னவொன்று இப்போது திரைமறைவில் நடப்பவை (சிறிது தாமதம் என்றாலும்) வெளியே வந்துவிடுகிறது…! முன்பு சிறுகுழந்தைகள் தங்களுக்குள் புதைத்துக் கொண்டார்கள். இன்று சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்…

ஒரு சிலரின் இன்றைய குடும்ப வாழ்க்கை(தாம்பத்தியம்) புரியாத புதிராக இருப்பதற்கு அவர்களின் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்!! சொல்லபோனால் அடிக்கடி தேவையின்றி கோபபடுவது, சந்தேகம் கொள்வது, அடிப்பது, வசைமொழிகளை வாரி இறைப்பது, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, உடலில் சிறிய பெரிய குறைபாடுகள் இப்படி பல…?!! இவை எல்லாம் ஏற்பட அதிக அளவில் கொடுமை அனுபவித்து இருக்கவேண்டும் என்பதில்லை சிறிய அளவிலான தவறான தொடுதல் கூட மனதில் காயத்தை உண்டுபண்ணி நிரந்தர மன ஊனத்தை குடும்ப வாழ்வில் ஏற்படுத்திவிடுகிறது.

இதுக்கு என்ன தீர்வு என்றால் பெற்றோர்கள் தான் மிக மிக கவனமாக தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளவேண்டும். வேறு வழியில்லை…?!!

பிள்ளைகளை பெற்றெடுப்பதும் , சீராட்டி வளர்ப்பதும் பெரிய காரியம் அல்ல அதைவிட இதுபோன்ற கயவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் இன்று பெற்றோருக்கு முன் இருக்கும் முக்கியமான பொறுப்பு !!

-டாக்டர் கவ்சல்யா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 71 = 74

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb