டீச்சர் விளையாட்டு!
இன்றைய காலகட்டத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் சிறுபிள்ளைகள், காலையில் எழுந்து, அவசர அவசரமாக கிளம்பி, அரைகுறையாக சாப்பிட்டு பேருந்து / ஆட்டோ அல்லது வேன் பிடித்து பள்ளிக்குச் சென்று அப்பப்பா… கல்வி கற்க படும்பாடு அந்த பிஞ்சுகளுக்கு மட்டுமே தெரியும். நல்ல கல்வி(!?) என்பதற்காக பல கிலோமீட்டர் தூரம் கூட பயணம் செய்கிறார்கள். பாவம், பள்ளி முடிந்து வீடு திரும்பவும் இதே கதிதான்.
வீட்டிற்கு வந்தவுடன் ‘டியூஷன்’ என்று அடுத்த ஆரம்பம், அதிக மார்க் எடுத்து தன் பிள்ளை வெற்றி(!) பெற அம்மாவின் ஆசை.
அதே அம்மாவிற்கு பிள்ளைகள், பள்ளியில் என்ன படித்தார்கள்? டியூஷனில் என்ன அறிந்தார்கள்? தெரிந்து கொள்ள ஆசைதான்- என்ன செய்ய ‘சீரியல்’ கோபித்துக்கொள்ளும்! தூங்கிப்போகும் அந்த மொட்டு அடுத்த நாள் போராட்டத்திற்காக அசதியில்.
இந்த வயதில் அந்த பிஞ்சுகளுக்கு இத்தனை சுமை தேவையா?
பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவது, சிந்திக்கும் திறன் வளர்க்கத்தானே? மாறாக சிரமப்படுத்துகின்றோமே! எப்படி கற்கிறார்கள்? எப்படி கற்றுக்கொடுக்கப்படுகிறது? எதுவுமறியாமல்தானே மதிப்பெண் பட்டியலைப் பார்த்துதான் தன் பிள்ளையையே மதிப்பிடுகிற அவலநிலை இன்றைக்கு.
“உன் பிள்ளை மக்கு, படிப்பு என்பதே வராது, இவனை பள்ளியில் பயிற்றுவிக்க முடியாது” என்று சொன்ன ஆசிரியருக்கு முன் சவால் விடுத்து, ” பார் என பிள்ளைக்கு நானே ஆசிரியராய் இருந்து அவனை உருவாக்குகிறேன்” என்று சவால் விட்ட தாய், சொன்ன படி உருவாக்கினாள். ஆம் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கப்பட்டார் ஓர் உன்னதமான தாயினால்!
என் பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற நாள் முதல் நான் அவர்களை ‘டியுஷன்’ அனுப்பியதில்லை. எனக்கு அதில் நம்பிக்கையுமில்லை ஏனெனில் பணத்திற்காக, பிள்ளைகளின் மனமறியாது, யாரோ ஒருவர் ஆடு மாடு போல் மேய்த்துக் கொண்டிருப்பதில் என்ன கற்றுக்கொள்ள முடியும்? – குழந்தைகள் என்பவர்கள் அல்லது குழந்தைப் பருவம் என்பது விளையடுவதற்குரிய பருவம் – பாரதி சொல்வது போல ‘மாலை முழுதும் விளையாட்டு’ என்று வழமைப்படுத்தசொல்வேன்.
மதிப்பெண் பட்டியல் பார்க்கும் உலகமல்லவா? பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு, “very Poor , Sir !, counseling needed for your daughter – Please come Tomorrow and meet counselor “. கண்டிப்புடன் வகுப்பாசிரியை சொன்னார். அடுத்தட நாள் counselor, பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனார்.
“how about your relationship with your wife ? Are you a quarreling type?
இது போன்ற, குழந்தைகளின் மனதினைப் பாதிக்கின்ற விஷயங்கள் பற்றி கேட்ட போது, ” இது போன்ற நிகழ்வுகள் என் வீட்டில் நடைபெறாது” என்றும் “வீட்டில் நடைபெறா விட்டாலும் வீட்டில் இப்படித்தான் நடக்கும் என்று கூக்குரலும், அழுகையும், வஞ்சமும், வன்முறையும் சீரியலில் தத்ரூபமாகக் காட்டும் தொலைக்காட்சிப்பெட்டி கூட என் வீட்டில் இல்லை” என்று சொன்ன மாத்திரத்தில், “ஆங்………..எப்படி சார்??? நானும் முயற்சிக்கிறேன் ஆனா………” என அவரின் வார்த்தைகள் முடியும் முன் எழுந்து ” I will try my level best Ma’m, certainly she will show some improvement than this in her next class tests, but without tution” என்று சொல்லி விடைபெற்றேன்.
மறுநாள் மாலை, முதல்நாள் சொன்ன வாக்குறுதி பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, என் மகள் வழக்கம் போல தோழியுடன் விளையாடிக் கொண்டுதான் இருந்தாள் – ‘டீச்சர் விளையாட்டு’ ! மின்னலடித்தது மனதிற்குள் – கண்டுபிடித்து விட்டேன்.
அன்றாடம் வகுப்பில் நடக்கும் பாடங்களை இந்த முறையிலேயே கண்காணிக்கலாம் என்று தோன்றியது. “பாப்பா!, இனிமேல் நீதான் ‘டீச்சர்’ நானும் அம்மாவும் உன்னோட
students, வகுப்பறையில் சொல்லித்தரும் பாடங்களை நீ எங்களுக்கு சொல்லிக்கொடு!” என்றவுடன், அவளுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, “அப்பா என்னோட ஸ்டுடென்ட், தெரியுமா?” என எல்லோரிடமும் சொல்லி சந்தோசப்பட்டாள்விளையாட்டு ஆரம்பித்த முதல் நாளே “
Rafeeq, do your home work ” என்று நோட்டு புத்தகத்தை தூக்கி எறிந்தாள், “look at the board ” என அவள் தோழி மீது duster ஐ வீசினாள். “இப்படிஎல்லாம் செய்யக்கூடாது” என்றவுடன், “Ma ‘m என்றல் இப்படியெல்லாம் செய்யணும், student பேசக்கூடாது”பாருங்கள், இந்த இளம் வயதில் டீச்சர் எப்படி இவளுள் வளர்ந்திருக்கிறார் என்று!
தான் அடிமைப்படுத்திய நாட்டில் தமது அடிமைகள் தம்மிடம் உரையாட மட்டும் கற்றால் போதுமென்ற அடிப்படையில் வழங்கப்பட்ட கல்வி முறை சுதந்திர இந்தியாவிலும் பாவம் அடிமையாய் வாழ்கிறது!.
பிறகு அவளை என்னால் திருத்த முடிந்தது, அவள் கற்றலில் உள்ள குறைகளை அறிந்து சொல்லித்ததர முடிந்தது. (அவளது டீச்சரையும் திருத்த வாய்ப்பும் கிடைத்தது, அவர்களை சந்தித்து இவற்றை சொல்லியபிறகு, டீச்சர் யார் மீதும் நோட்டையோ, டஸ்டரையோ எறிவதில்லை என மகளே சான்று சொன்னாள்!)
டியூஷன் இல்லாமல் இவளையே டீச்சர் ஆக்கி விட்டதனால், வகுப்பறையில் கவனம் அதிகரித்தது முன் எப்போதையும் விட, காரணம் வீட்டில் வந்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதால். அடுத்த சந்திப்பில் வகுப்பாசிரியை சொன்னார், ‘முன்பைவிட நன்கு கவனிக்கிறாள், சந்தேகம் கேட்கிறாள், பரவாயில்லை’ என்று…. இரகசியம் தெரியாமல்.
“வெற்றி” என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்
இவள் செய்வதைப் பார்த்து இவள் தங்கையும் “டீச்சராய்” மாறிவிட்டாள் சொல்லாமலே!
நீங்களும் முயற்சிக்கலாமே இல்லை விளையாடலாமே இந்த “டீச்சர் விளையாட்டு”
வாழ்த்துக்கள்!!
Rafeeq புதுசுரபி
source: www.nidurseasons.blogspot.com