பணத்திற்காக சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை விற்கும் ஆண் ஜாதியே …. நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம் பேரம் பேசி வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண் மகனா??? அவமானம்…அவமானம்…. கேவலம்….. கேவலம்… உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும் நீ மட்டும் எந்த வர்க்கம்….. வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம் செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம்…
Day: December 6, 2012
பொய்யர்கள் அழிவார்கள்
பொய் பேசுவது அழிவுக்கு வழி வகுக்கும்! இன்று நம்மில் பலர் பொய் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர்! பொய் பேசுவதனால் ஏற்படும் இம்மை, மறுமை இழப்புகளை அறிந்திருந்தால் பொய் பேசுவதை விபரீதமான காரியம் என்று எடுத்துக் கொள்வார்கள். உலக வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்காக பல நிலைகளில் பொய் பேசுவர் அவைகளில் சில: பொய் பேசுவது வணிகத்தில் ஓர் அங்கம் போல் கருதி சிலர் பொய் பேசி வியாபாரம் செய்வர், பிறர் தன்னை உயர்வாக கருத வேண்டும் என்பதற்காக…
கொஞ்சம் முரட்டுத்தனம்… கொஞ்சம் மென்மை…!
கொஞ்சம் முரட்டுத்தனம்… கொஞ்சம் மென்மை…! [ பெண்களைப் பொறுத்தவரை உறவின்போது அதை அனுபவிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். மற்றபடி எப்படி இயங்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது ஆணுடைய ட்யூட்டி! பெண்களை சரியாக புரிந்து கொண்டு செம்மையாக செயல்பட வேண்டிய கடமை ஆண்களுக்குத்தான்.].
பெண்கள் தலைமுடியை வெட்டலாமா?
பெண்கள் தலைமுடியை வெட்டலாமா? பதில் : பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதென’ கருதுகிறோம். பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது….
அல்லாஹ்வை நம்புவது எப்படி? (1)
அல்லாஹ்வை நம்புவது எப்படி? (1) பி.ஜெய்னுல் ஆபிதீன் அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம். ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு…
அல்லாஹ்வை நம்புவது எப்படி? (2)
அல்லாஹ்வை நம்புவது எப்படி? (2) பி.ஜெய்னுல் ஆபிதீன் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களிடம் நம் தேவையைக் கேட்டால் அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை யாரும் கேட்பதில்லை. அவர்கள் அந்த அளவுக்குத் தரமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வைப் பற்றியும் நமது நிலை இப்படித்தான் இருக்கின்றது. பணக்காரன் எப்படி பெருந்தொகையை தரமாட்டானோ அதை போன்று தான் அல்லாஹ்வும் தரமாட்டான் என்று நினைக்கின்றோம். நமது பார்வையிலும் கணிப்பிலும் மனிதர்கள் தான் தர மாட்டார்கள். அல்லாஹ் நினைத்தால் அவன் நமக்கு உதவி…
மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் “10 ல் 1 பங்கு” பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை!
நலத்திட்டங்களின் “சராசரி” செலவிலும் பாரபட்சம் : முஸ்லிம் ரூ.138/-, எஸ்.சி.ரூ.1280/-, எஸ்.டி.ரூ.1400/-. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் “10 ல் 1 பங்கு” பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற வேதனையான உண்மை தெரியவந்துள்ளது. மஜ்லிஸ் கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, மத்திய சிறுபான்மை நல…