தவறைச் சுட்டிக்காண்பிக்காமல் இருக்க முடியாது..
முகநூலிலிலும், மற்ற இடங்களிலும் சக நட்பிடத்தில் தவறுகள் காணப்பட்டால்….
ஒரு சிலரைத் தவிர… பெரும்பாலோர் சுட்டிக் காட்டுவதில்லை…
காரணம்..
நமக்கேன் வம்பு…? என்றுதான் பலர் ஒதுங்குவதற்கு அடிப்படைக் காரணம்..
உண்மையில் ஒரு முஸ்லிம் அப்படி இருக்கலாமா..?
தவறைக் கண்டும், அதைச் சுட்டிக் காட்டாமல் ஒதுங்குவது ஒரு உண்மை முஸ்லிமுக்கு அழகாக இல்லை.
தவறைச் சுட்டிக் காட்டினால்..நட்பு தவறாக நினைக்குமே…? என்று நினைக்கிறீர்களா…?
அப்படிப்பட்ட நட்பு நமக்குத் தேவையில்லை
என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு…
يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ
3:114.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
9:112.
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் – இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
ஏக இறைத்தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின் இறுதிநிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 78)