இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் சில காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறைபாட்டிற்கு காரணம்
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.
விந்தணு வீழ்ச்சி
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைக்கு எதிரான நிலை
தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
தூக்கக்குறையாடு ஆண்மையை பாதிக்கும் – ஆய்வில் தகவல்
ஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.
குறையும் உயிரணுக்கள்
இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.
இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.
டிரான்ஸ் பேட் கொழுப்பு
தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.