Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குடும்பம் என்ற நிறுவனமும், பெண் வகிக்கும் பாத்திரமும் (2)

Posted on November 26, 2012 by admin

குடும்பம்என்ற நிறுவனமும், பெண்வகிக்கும் பாத்திரமும் (2)

  குடும்ப வாழ்வோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி அறிவு பெறல் 

குடும்பம், திருமண வாழ்வோடு சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் ஓரளவு விரிவானவை. தொழுகையோடு சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் சமூகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. பல நூல்கள், கையேடுகள், இயக்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கும், பொதுவாகவும் விளக்கும் வகையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் என அது பரவலாக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணமும் குடும்ப வாழ்வும் தனிப்பட்ட ஒவ்வொரு மனித னோடும் சம்பந்தப்படும் விடயம். எனவே அதன் சட்டங்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

அந்தவகையில் மிக இலகு படுத்தப்பட்டு சமூகத்தில் எல்லோருக்கும் செல்லும் வகையில் அது பரவலாக்கப்பட வேண்டும். ஆனால் சமூகத்தில் அந்நிலைமை காணப்படவில்லை.

சமூகத்தில் பரவலாக தொழுதல், நோன்பு பிடித்தலின் பொதுவான சட்டங்கள் தெரியும். அவ்வாறான நிலையே இங்கும் காணப்பட வேண்டும். ஆனால் யாரும் அதில் பெரிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. குறிப்பிடப்பட்ட விடயத்தின் பாரதூரம் கருதி கீழே குடும்ப சட்டங்கள் அடங்கும் விடய தானங்களைத் தந்து இப்பிரச்சினையை விளங்க சில உதாரணங்களையும் தருகிறோம்.

  1. திருமண ஒப்பந்தம் :   

1. அடிப்படைக் கொள்கைகள்.

2. திருமணம் பேசல், சட்டங்களும் விளைவுகளும்.

3. திருமணமும் அதன் விளைவுகளும்

அ. திருமணத்தின் சட்டங்கள்

ஆ. திருமணத்தின் விளைவுகள்.

1. மஹர்

2. குடும்பச் செலவு

3. குடும்பத்திற்கான வீடு

  2. விவாக முறிவு :  

1. விவாக முறிவுக்கான அடிப்படைக் கொள்கைகள்

2. விவாகரத்துக்கான ஷர்த்துகள்.

3. விவாக முறிவில் பெண்ணின் பங்கு

4. விவாக முறிவில் நீதிமன்றத்தின் பங்கு

  3. தாய், தந்தையர், பிள்ளைகளது உரிமைகளும், கடமைகளும்  

1. வயிற்றிலுள்ள சிசுவைப் பாதுகாத்தலும், பராமரித்தலும்.

2. பிறந்ததன் பின்னர் பிள்ளையின் உரிமைகள்.

அ. உறவு

ஆ. பால் கொடுத்தல்.

இ. வளர்த்தல்.

  4. உறவினர்களது உரிமைகள்.  

அ. செலவழித்தலுக்கு கடமையாதல் பற்றிய பொதுக் கொள்கைகள்.

ஆ. செலவழித்தல் சட்டங்கள்.

  5. வாரிசுரிமை    

  6. வஸிய்யத் செய்தல்  

இவையே திருமணம், குடும்பவாழ்வு சம்பந்தமாக இஸ்லாம் சட்ட மாக்கியுள்ள தலைப்புகள். இவை பற்றிய அறிவு முஸ்லிம் சமூக அங்கத்தவர்களுக்கு மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளது. அது வும் குடும்ப வாழ்வின் சிதைவுக்கு இன்னுமொரு முக்கிய காரணம். இங்கு சில உதாரணங்களைத் தருவோம்.

விவாகரத்து ஹராமான ஒன்றல்ல. வாழ்க்கை மிகவும் சிக்கலாகி விடும்போது அது அனுமதிக்கப்படுகிறது. எனினும் மீள் பரிசீலனை செய்ய மீள்அழைக்கும் தலாக் என்ற ஒரு சட்ட ஒழுங்கை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அதற்கான கால இடைவெளிகளையும் ஆக்கி ஒரே முறையில் 3 தலாக்கையும் சொல்லக் கூடாதெனவும் ஆக்கியுள்ளது. முதல், இரண்டாம் முறை தலாக்குகளின் போது கணவனின் வீட்டைவிட்டு மனைவி வெளியேறக் கூடாது எனவும் விளக்கியுள்ளது. இவை அனைத்தும் தலாக் சொன்னதன் பின்னரும் மீள் பரிசீலனை செய்ய இஸ்லாம் கொடுத்துள்ள சந்தர்ப்பங்களாகும். எனினும் இச்சட்டங்கள் குறித்த நல்ல தெளிவு மிகப் பெரும்பாலும் சமூகத்தில் காணப்படாதபடியால் பெரும் குறைபாடுகள், குளறு படிகள் இங்கு நிகழ்கின்றன.

விவாகரத்து பெரும் பிளவு, கோபதாபம் பகையை ஏற்படுத்தக் கூடாது என்பது இஸ்லாத்தின் கருத்து. எனவேதான் விவாகரத்து செய்பவர் மதாஉ என அழைக்கப்படும் ஒரு தொகைப் பணத்தையோ பொருளையோ மனைவிக்குக் கொடுக்க வேண்டுமென அல் குர்ஆன் கூறுகிறது. ஆனால் எமது சமூகத்தில் விவாகரத்து சுமுகமாக நடப்பதில்லை. பெரும்பகையையும் முழுமையான உறவு முறிவை யுமே இது ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் இருந்தால் அவர்களைத் தந்தை பார்க்கக் கூட அனுமதிக்காத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் மனைவியே இறுதிவரையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் நிலைமையும் உள்ளது.

வாரிசுரிமைச் சட்டம் குடும்பக் கட்டுமானத்தைப் பாதுகாக்கும் ஒரு சட்ட ஒழுங்காகும். ஆனால் எமது சமூகத்தில் அறியாமை காரண மாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சட்டமாக அது காணப்படுகிறது.

செலவழித்தல் கடமைப்படுதல் என்ற சட்டம் குடும்ப கூட்டுப் பொறுப்பை உணர்த்தும் சட்ட ஒழுங்கு, ஓர் ஆண் யாருக்கெல்லாம் செலவழிக்கக் கடமைப்படுகிறான் என்ற சட்டத்தை அது விரிவாக விளக்குகிறது. இச்சட்டம் பற்றிய அறிவு சமூகத்தில் இல்லை எமது முஸ்லிம் தனியார் சட்டம் இது பற்றி எதுவும் சொல்ல வில்லை எனவே சட்ட ரீதியான எந்த ஒழுங்கும் எமது தனியார் சட்ட நீதிமன்றங்களில் அது பற்றிக் காணப்படவில்லை.

இவ்வாறு பல உதாரணங்களை இங்கே முன்வைக்க முடியும். தொழுகை பற்றிய விளக்கத்தில் கவனம் செலுத்துகிறோம். ஸகாத் பற்றி பல கூட்டங்கள், மகாநாடுகள், சபைகள், நிறுவனங்கள் என நடாத்துகிறோம். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமாக அமையும் குடும்ப வாழ்வு பற்றிய அறிவை மக்களுக்கு மத்தியில் மிகப் பரவலாகக் கொண்டுவருவதில் நாம் ஈடுபாடு காட்டவில்லை.

  குடும்பம் சீரமைவதற்கான தீர்வுகள்  

  குடும்ப வாழ்வில் பெண்ணின் பங்கு :  

குடும்ப வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி சிந்திக்கும் போது பெண்ணின் பாத்திரம் பற்றி சிந்தித்தல் முதன்மை யானது. சிறந்த தாயும், தந்தையுமே நல்ல சிறந்த சந்ததியினரை உருவாக்குவர். ஆனால் அந்த சிறந்த தாயும் தந்தையும் உருவாதல் நல்ல கணவன், மனைவி ஊடாகவே சாத்தியமாகும். இப்பின்னணி யில் குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு அடிப்படையானது. முதன்மையானது. இக் கருத்தை ஓரளவு விளக்கமாக நோக்குவோம்.

  மனைவியாக :   

இஸ்லாமிய பயிற்றுவித்தலின் இலக்கு ஒர் உண்மை முஃமினை, முதிர்ச்சிமிக்க பூமியின் பிரதிநிதியை பொறுப்புக்களை ஏற்று நடக்கும் நாணயமிக்க பலமான மனிதனை உருவாக்கலாகும். நம்பிக்கை ஈமானியப் பலம், நான் பூமியின் பிரதிநிதி என்ற பொறுப்புணர்வு, நாணயம், வேலைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் ஆற்றல், திறன் என்ற பண்புகளை உருவாக்கி விடலின் ஊடாகவே இது சாத்தியமாகும். இப்பண்புகள் சிறுபராயத்திலேயே உருவாக்கப்பட வேண்டும். மனித உணர்வுகள் வடிவமையத் துவங்கியதன் ஆரம்ப கட்டங்களிலேயே இவை ஆக்கப்பட வேண்டும். இது ஒரு சீரான குடும்பத்தில் பிரச்சினைகள் அற்ற அழகான குடும்ப அமைப்பிலேயே சாத்தியமாகும். மனிதக் குழந்தையின் முதல் வளர்ப்பிடம், பாடசாலை, குடும்பமே. மனிதக் குழந்தை பௌதீக ரீதியாகவோ, மன ரீதியாகவோ தன்னை வளர்த்துக் கொள்ளும் சுய சக்தியற்றதாகவே பிறக்கிறது. எனவே அது கவனிக்கவும், வளர்க்கப் படவும் வேண்டும். இப் பின்னணியில் குடும்பம் சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது. இவ்வாறு மனிதக் குடும்பம் சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது. இவ்வாறு மனிதக் குழந்தையை வளர்த்தெடுக்கும் திறன் அதனிடம் காணப்பட வேண்டும்.

இக் குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தவர்கள், அதனை ஆரம்பித்து வைப்பவர்களே கணவன், மனைவி எனப்படும் ஆணும், பெண்ணும், குடும்பம் பரஸ்பர அன்பு, இரக்க மனப்பாங்கின் மீது அமைகிறது. உணர்வுகளின் பரிமாற்றமே அன்பு. பொறுப்புக்களை சுமத்தும் போது இரக்கம் அடிப்படையாகிறது. கணவனோ, மனை வியோ ஒருவர் மீது ஒருவர் பொறுப்பை சுமத்தும் போது இந்த இரக்க உணர்வோடு நோக்க வேண்டும். இவ்விரு உணர்வுகள் மீதும் எழாத குடும்பம் அர்த்தமற்றதாகிறது. அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சீரான வளர்ச்சியைப் பெறமாட்டார்கள். வெறுப் புணர்வோடும், எப்போதும் முரண்பாட்டோடும், சண்டை சச்சரவோடும் வாழும் ஒரு கணவன் மனைவியருக்கிடையே வாழும் பிள்ளைகள் எவ்வாறு சீராக அமைய முடியும்.

இப்பின்னணியில் ஆண்,பெண்,கணவன் மனைவி இருவரது நிலையையும் நோக்குவோம். முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம் குடும்பத்தில் பெண்ணின் பங்கு மிக அடிப்படை யானது. மனைவி அதன் அத்திவாரம், தலைமை ஆணின் கையில் இருந்தாலும் பெண்ணே குடும்பத்தில் பிரதான பாத்திரமாக அதனை இயக்குகிறாள் என்ற உண்மையை விளக்கவே இங்கு முயல்கிறோம்.

  மன அமைதியைக் கொடுப்பவளாக  

அல் குர்ஆன் ஆண், பெண் படைப்பமைப்பின் நோக்கமாகவே இக் கருத்தை விளக்குகிறது. அல்குர்ஆன் கூறுகிறது. “உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்” (ஸூரா-ரூம் 21)

ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட மனித ஆண்-பெண் இனக்கவர்ச்சி மிகுந்த வீரியம் கொண்டது. ஆண் காம உணர்வு வகையில் பலவீனமானவன். பெண்ணின் தோற்றம், வெறுமனே அவளைக் கற்பனை செய்வதுவே அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பலவீனமே அவனைப் பெண்ணின் பின்னால் ஓட வைக்கிறது. பெண்ணின் மென்மை. அவளது பேச்சு, உறவாடல் அனைத்தும் அவனுக்கு மன அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கிறது.

ஆண் அவனது தோற்றம், பலம் வன்மை என்பவற்றால் உழைக் கவும், போராடவுமே படைக்கப்பட்டுள்ளான். உழைத்து, களைத்து, முட்டி, மோதி மனமும், உடலுமே தாக்குண்டு வீடு வரும் ஆணுக்கு பெண்ணின் குளிர்ச்சியான பார்வையும், மென்மையான பேச்சும், ஸ்பரிசமும் அமைதியையும் ஆறுதலையும் கொடுக்கும். வாழ்வின் வெயிலுக்கான நிழலே பெண். ஆணுக்கு இந்த இடம் தவறும் போதுதான் அவன் மன உளைச்சல் கொண்டவனாகவும், வெறுப்பும், விரக்தியும் கொண்டவனாகவும், சில போது வெறி பிடித்தவனாகவும் மாறிப்போகிறான்.

இவ்வாறு ஓர் ஆணைச் செய்பவளே பெண்தான். அவனை உள ஆரோக்கியம் கொண்டவனாக வைத்து சமூகத்தின் சிறந்த நற்பயன் தரும் சக்தியாக வைத்திருப்பது அவளது கையிலேயே உள்ளது. இக் கருத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கீழ்வருமாறு மிகவும் அழகாகச் சொல்கிறார்கள். “யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின் றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (நூல்கள்: தபரானி, பைஹகி, ஹாகிம்)

இவ்வாறு பெண் இருக்கவேண்டுமானால் அவள் தன்னில் உருவாக் கிக் கொள்ள வேண்டிய அம்சங்கலென்ன என்பது பற்றி இங்கு மிகவும் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டல் அவசியம்.

  ஆணின் மனோநிலையைப் புரிந்திருத்தல்  

கணவன், மனைவி உறவாடல் என்பதன் பொருள் ஒர் ஆணோடு ஒரு பெண் உறவாடுவதாகும். இந்த உறவாடல் மிகச் சரியாக அமைய வேண்டுமானால் இரு அம்சங்கள் மிக முக்கியமானதாகும்.

முதலாவது அம்சம் தெரிவு, இருவரும் சில மணித்தியாலங்களில் முடியும் பிரயாணத் தோழர்களல்ல, ஓரிரு நாட்கள் மட்டும் உறவாடக்கூடியவர்களல்ல. வாழ்நாள் முழுக்க வாழப்போகும் வாழ்கைத் தோழர்கள். இங்கு எந்த நிர்ப்பந்தமும் ஆணோ, பெண்ணோ எத்தரப்பார் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இருவரதும் ஆன்ம ஒருமைப்பாடு ஆன்ம உடன்பாடு மிகவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அத்தோடு பண, அறிவு, சமூகத்தரப் பொருத்தப்பாடும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப் பின்னணியில் தான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.

ஒரு நபித்தோழர் தான் திருமணம் பேசி இருப்பதாகக் கூறியபோது “நீ அவளைப் பார்த்தாயா, அவளைப் பார், அப்போது உங்களி டையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்க அது மிகப் பொருத்தமாக அமையும்.” எனக் கூறினார்கள்.

இது பற்றிய ஹதீஸ்களை திரட்டி நன்கு ஆராயும் போது ஒருவரை ஒருவர் பார்த்தல் பேசிப்பார்த்தல் என்பவற்றை இவை உணர்த்து கின்றன என நவீன இஸ்லாமிய அறிஞர்கள் விளக்குகின்றனர். இயல்பாகவே சிலரோடு ஒத்துப்போக முடிவதில்லை. சிலரின் பேச்சையும், சில நடவடிக்கைகளையும் பார்க்கும்போது வெறுப்புணர்வு தோன்றி விடுவதுண்டு இந்த மன உடன்பாடு மிகவும் அத்தியவசியமானது.

தான் விரும்பாத ஓர் ஆணுடன் எப்படி ஒரு பெண் வாழ முடியும்? எவ்வாறு அவள் அவனுக்கு மன அமைதியைக் கொடுக்க முடியும்? இந்நிலையில் இருவருமே மன அமைதியை இழந்து தவிப்பர். உறவாடலின் முதல் அடிப்படையே இங்கு இல்லாமல் போகின்றது.

அடுத்த அம்சம் மனதத்துவத்தைப் புரிந்திருத்தலாகும். திருமணத் தின் ஆரம்பத்தில் இனக்கவர்ச்சியின் வேகத்தால் இருவரும் மிகவும் சுமுகமாக உறவாட முடியும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அக் கவர்ச்சி குறையத்துவங்கும். இப்போது ஆணின் மனத்தத்துவம் புரியாத ஒரு பெண் பல தவறுகளை அப்பகுதியில் இழைத்து முரண் பாடுகளை உருவாக்கி விடுவாள்.

கணவனுக்குக் கட்டுப்படல், அவனுக்கு நன்றி செலுத்தல், போன்ற பல விடயங்களை இப்பகுதியில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும் பத்திரும்ப வலியுறுத்தியதன் பின்னணி இதுவேயாகும். கீழே சில ஹதீஸ்களை இக்கருத்தை விளங்குவதற்காகத் தருகிறோம்.

“தனது கணவனுக்கு நன்றி செலுத்தாத ஒரு பெண்ணை அல்லாஹ் பார்ப்பதில்லை. அவனது தேவை இன்றி அவள் இருக்கவும் முடியாது. (-அல் முஸ்தத்ரக், நூல்: அல் ஹாகிம்)

”எப்பெண்ணாவது மரணிக்கும் போது கணவன் திருப்திப்பட்ட நிலையில் மரணித்தால் சுவர்க்கத்தில் நுழைவாள்” (நூல்கள்: இப்னுமாஜா, அல்ஹாகிம்)

ஒரு பெண் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்தாள். தன் தேவையை முடித்துக் கொண்ட போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளைப் பார்த்து உனக்கு கணவன் இருக்கிறானா? எனக் கேட்டார் ஆம் என அப்பெண் கூறிய போது அவனைப் பொருத்த வரையில் உனது நிலை என்ன? என இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். சிலவேளை இயலாமல் போவது தவிர என்னால் முடிந்தளவு நான் அவனது கடமைகளை நிறைவேற்றுகிறேன் என அப்பெண் கூறினாள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனைப் பொறுத்தவரையில் நீ எங்கே இருக்கிறாய் எனப் பார்த்துக்கொள். ஏனெனில் அவனே உனது சுவர்க்கமும், நரகமும் என்றார்கள். (நூல்கள்: முஸ்னத் அஹமத், ஸூன் நஸாயி, முஸ்தரக் அல்-ஹாகிம்)

கணவனுக்குக் கட்டுப்படல், அவனுக்கு நன்றி செலுத்தல் அவனுக்கான கடமைகளைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனமாக இருத்தல் என்ற இந்த அம்சங்களை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறக் காரணம் உறவாடலின் அடிப்படையான அம்சம் இது என்ற வகையிலாகும் இப்போது சில மனோதத்துவ உண்மைகளை இங்கே மேலோட்டமாகவாவது சுட்டிக்காட்டல் இக்கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

கலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷித் இக்கருத்தை விளக்க ஆண் பெண் வேறுபாடுகள் என்றதொரு நூலை எழுதியுள்ளார். அந் நூல் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் படிக்க வேண்டிய மிக அருமையான நூலாகும். அதில் வரும் சிறியதொரு பகுதியைக் கீழே தருகிறோம்.

  ஆண், பெண் இருவரதும் முதன்மையான தேவைகள்  

1. நம்பிக்கை வைத்தல்

2. ஏற்றல்

3. மதிப்பளித்தல்

4. மெச்சுதல்

5. அங்கீகாரம் வழங்குதல்

6. உற்சாகப் படுத்தல், தைரியமூட்டல்

  பெண்ணின் முதன்மையான தேவைகள்  

1. அக்கறை செலுத்தல்

2. புரிதல்

3. மரியாதை கொடுத்தல்

4. முதன்மைப்ப படுத்தல்

5. உறுதிசெய்தல்

6. மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தல்

ஆண், பெண் இரு சாராரதும் முதன்மையான மனோநிலைத் தேவைகள் இவை. அவை நிறைவேற்றப்படாதபோது கணவன் மனைவியர் தொடர்பில் விரிசல் ஏற்படுவது இயல்பு. எனவே இத்தேவைகள் குறித்து சிறந்த அறிவும் புரிதலும் இருவருக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக பெண் ஆணுக்கு அமைதியைக் கொடுக்க வேண்டுமானால் ஆணின் இந்த மனோநிலைத் தேவை களைப் புரிந்து அதற்கேற்பத் தனது நடத்தைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

61 − 58 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb