Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இது பொன்மொழியல்ல… புன்னகை மொழி (1)

Posted on November 20, 2012 by admin

   இது பொன்மொழியல்ல…  புன்னகை மொழி (1)   

o  நல்ல மனைவி அமைந்தவனின் வாழ்க்கை சொர்க்கம். நல்ல கணவன் அமையாத மனைவியின் வாழ்க்கை நரகம்.

o  குழந்தையை அன்புடன் கண்டிக்கும் அழகிய வித்தையை பெண்ணைப்போல் ஆணால் சுலபமாக கற்றுக்கொள்ள முடியாது.

o  ஆண்களின் கோபத்தை பெண்கள் சட்டை செய்வதில்லை, ஆனால் பெண்ணின் மவுனம் ஆண்களை பாடாய்ப்படுத்துகிறது, பயப்படுத்துகிறது,

o  அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை.

o  எல்லோரிடமும் வெற்றி அடைந்து தன் ஆளுமையை நிரூபிக்கும் ஆண் தன் குழந்தையிடம் மட்டும் தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைகிறான்.

o  பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப் பார்ப்பான். பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள்.

o  ஆண்மையின் அடையாளமாக பெண்கள் நினைப்பது அவன் மீசையும், கம்பீரமும். பெண்மையின் அடையாளமாக ஆண்கள் நினைப்பது அவள் வெட்கமும், நளினமும்.

o  நம் உள்ளங்கைகள் ஒன்று சேரும்போது நம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்த மாதிரியே இருக்கிறது.

o சிரிக்கச் சிரிக்க பேசும் பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள். சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்.

o  ஆணின் மனதை 1000 பெண்கள் எளிதாக சலனப்படுத்தி விடுவர். ஆனால், பெண்ணின் மனதை 100-இல் ஒரு ஆண் தான் வசீகரிக்க முடியும்.

o  ஆண் – கலெக்ஷன் ஆஃப் விக்டரி. பெண் கலெக்ஷன் ஆஃப் சொக்குபொடி.

o  காலம் காலமாக கண்ணுக்கு மை வைத்து வைத்தோ என்னவோ ஆணின் முகத்தில் கரி பூசுவது பெண்ணுக்கு கை வந்த கலை ஆகிறது.

o  பெண்ணின் அன்புக்கு ஆண் ஏங்குகிறான், ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள நாணுகிறான்.

o  தன்னைவிட வயதில் குறைந்த யாராவது “டேய்” என அழைத்தால் கோபமடைபவன் தன் குழந்தை அப்படி கூப்பிட்டால் மட்டும் குதூகலம் அடைகிறான்.

o  காதலி, மனைவி, தாய், சகோதரி இப்படி எந்த லேபிளும் இல்லாத ஒரு பெண்ணின் அன்பு கூட ஆணின் மனதை வீழ்த்தி விடும்.o

o  ஆண் முரட்டுத்தனமாக வெளியில் காண்பித்துக் கொண்டாலும் பெண்ணின் பலத்தின் முன் அவன் பலவீனன் தான்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb