நாவை பேணிக்கொள்வோம்
முதியவர் ஒருவர் தனது பக்கத்து விட்டு வாலிபனை திருடன் என்று வதந்திகளை பரப்பி வந்தார் ஊரில் திருடுகள் நடைபெற்று கொண்டிருக்க திருடுகள் முழுவதும் அந்த வாலிபன் மேல் விழுத்தது முதியவரின் பேச்சை கேட்டு பாகத்து விட்டு வாலிபனை திருடன் என்ன கருதி கைது செய்தனர். சிறிது காலம் கழித்து அந்த வாலிபர் குற்றமற்றவர் நிரபராதி என குறி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பின் வாலிபன்முதியவரின் மீது வழக்கு சுமத்தினார். தன்னை பொய்யான திருடன் என்ன குற்றம் சுமத்தியதற்கு!
முதியவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார் நீதிபதிகளின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்… ”நான் அந்த வாலிபரை பற்றிகூறியது என்னுடைய கருத்துகள்தான் அவை யாருக்கும் தீங்கை ஏற்படுத்திவிடாதே” என்று கூறினர்.
நீதிபதி தீர்ப்பை மறுநாள் ஒத்தி வைத்தார். இன்று முதியவர் விடுக்கு செல்லடும் இந்த வழகிற்கான தீர்ப்பை நாளை ஒத்தி வைக்கிறேன் என்று கூறி முதியவருக்கு ஒரே ஒரு நிபந்தனையை விதித்தார் இவர் அந்த வாலிபரை பற்றி கூறிய அவதுறுகள் அன்னைதையும் ஒரு ஒரு தாளில் எழுதி போகும் வழியில் போட்டுவிட்டு செல்லட்டும் நாளை உங்களுக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறி விட்டார்.
மறுநாள் நீதிமன்றம் கூடியது தீர்ப்பை கேட்பதற்கு அனைவரும் ஆவலாக இருதனர் நீதிபதி தீர்ப்பை வழகும் முன் நேற்று நீங்கள் வழியில் போட்ட தாள்களை எடுத்து கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
கேட்டவுடன் முதியவருக்கு அதிர்ச்சி அது எப்படி முடியும் காற்று அவைகளை ஊரெங்கும் பரப்பி இருக்கும் அவைகள் இப்போது எனக்கே கிடக்கும் என்று எனக்கு தெரியாது என்று பதிலுரைத்தார். இவ்வாறுதான் நம் ஒருவரை பற்றி கூறும் பொய்யான செய்திகள் ஊரெங்கும் பரவிவிடும்.
நீங்கள் அந்த வாலிபன் மீது சுமத்திய பழி இன்று ஊரெங்கும் பரவி விட்டது அதை திரும்ப பெறுவது எளிதான காரியம் அல்ல என்று நீதிபதிகள் கூறினர்.
எனவே நாம் வார்தைகளுக்கு எஜமான்களாக இருப்போம் இல்லாத செய்தியை கூறி வார்த்தைகளுக்கு அடிமைபட்டு பிறரின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.
இதை தான் இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் கூறுகிறான்.
33:70. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
22:30. இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இரு தாடைகளுக்கு
(நாவை) இடையே உள்ளதை பேணிக்கொள்ளுகள்.
நாமும் நாவை பேணி ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.
அல்லாஹ் நமக்கு நாவை பேணி கொள்ளும் ஆற்றலை தந்தருள்வானாக .
நன்றி: விடியல் வெள்ளி