Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வரம்பு மீறும் திரைப்படத்துரையினருக்கு….

Posted on November 18, 2012 by admin

வரம்பு மீறும் திரைப்படத்துரையினருக்கு….

“உங்களுக்கு உயிர்மூச்சு கொடுத்த ஒருவன் உங்களை கண்கானித்துக் கொண்டிருக்கிறான்”

எந்த ஒரு சமூகத்தையும் தவறாக சித்தரித்து படம் எடுக்காதீர்கள்.

முஸ்லிம் சமூகத்தை மட்டுமே தவறானவர்களாக சித்தரிப்பது என்ன நியாயம்?

நாங்கள் கார்கில் போரில் பாகிஸ்தானை எதிர்த்தவர்கள்.

சீன போரில் உறுதியாக நின்றவர்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்த திராஜித் சௌலா, ஹைதர் அலி, திப்பு சுல்தான் தொடங்கி கார்கில் போரில் நாட்டுக்காக உயிர் துறந்த குன்னூர். சத்தார் வரை ஆயிரம் ஆயிரம் தியாக வரலாறுகள் எங்களுக்கு உண்டு.

எல்லாவற்றிர்க்கும் மேலாக, சுதந்திர இந்தியா அடையப்பெறுவதற்காக மற்ற மத, இனத்தவர்களையும் விட அதிக தியாகம் புரிந்தவர்கள்.

தேவையில்லாமல் முஸ்லிம்களை இன்னும் சீண்டாதீர்கள்.

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்..!

 

  திரைப்பட துறையினரே!   

கீழ்க்காணும் இவற்றையெல்லாம் பட்டியலிட்டு காவி தீவிரவாதத்தை படம் எடுக்க தயாரா?

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

 

11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை தூண்டுபவன் யார் ?

13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

15) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

 

2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

 

2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

 

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார்? இதை பற்றியெல்லாம் படமெடுக்க வக்கிரபுத்தி கொண்ட மணிரத்னம், கமல், விஜயகாந்த், அர்ஜுன், முருகதாஸ் போன்றவர்களுக்கு துணிவு உண்டா? 

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்!

உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம் மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

“நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான்” என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்குர்ஆன் 3:54)

வயிற்றுப்பிழைப்புக்காக இது போன்ற ஈனச்செயல்களை இனிமேலும் தொடர வேண்டாம். “உங்களுக்கு உயிர்மூச்சு கொடுத்த ஒருவன் உங்களை கண்கானித்துக் கொண்டிருக்கிறான்” என்பதை மறவாதீர்கள்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb