Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பழமை வாதமா? பயங்கர வாதமா?

Posted on November 17, 2012 by admin

        பழமை வாதமா? பயங்கர வாதமா?        

“ஸ்கூட்டியில் வலம் வரும் காஷ்மீர் இளம் பெண்கள்” என்ற தலைப்பிட்டு சில நாட்களுக்கு முன் மாலை மலரில் ஒரு செய்தியைப் பார்த்தோம். ஏதோ ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்து விட்டதைப் போல் ”பில்டப்” செய்து அதற்காக ஒருப் பக்கத்தையும் வீணடித்திருந்தனர் .

குடும்பங்களில் நிலவும் பழமை வாதத்தை மீற முடியாமல் பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் முடங்கி கிடந்தனர். அந்த நிலை சமீபகாலமாக கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் தனியே செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுதந்திர காற்றை உணர்வதாக அவர்கள் கூறுகின்றனர் என்று கற்பனையை கலந்து விட்டிருந்தது.

இன்றும் சென்னை, மதுரை, திருச்சிப் போன்ற பெரு நகரங்களில் வசிக்கக் கூடிய முஸ்லீம் பெண்களில் சிலர் பக்கத்தில் இருக்கக் கூடிய கல்லூரிகளுக்கோ, அலுவலகங்களுக்கோ ஸ்கூட்டியில் செல்லவே செய்கின்றனர். இதேப் போன்று பெங்களூர், பம்பாய், டெல்லிப் போன்ற மாநிலங்களின் பெரு நகரங்களிலும் இது போன்று ஸ்கூட்டியில் அத்தியாவசியத் தேவைகளுக்காக செல்கின்றனர் ஆனால் நகருக்கு வெளியே தனித்து செல்ல மாட்டார்கள்.

ஆனால் காஷ்மீரில் மட்டும் இது அறவே முடியாது காரணம் இந்திய ராணுவத்தினர் எந்த விதக் காரணமுமின்றி ஸ்கூட்டியை நிருத்தி தனித்து செல்லும் இளம் பெண்களை கடத்தி விடுவர்.

இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலுக்கு பயந்து தான் இளம் பெண்கள் தனித்து வெளியே செல்வதற்கு காஷ்மீர் குடும்பங்களில் ஏராளமானக் கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன என்பதை மாலைமலர் தெரிந்து கொள்ளட்டும்.

அவ்வாறு பல முறை கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பெண்களை மாலைமலர் போன்ற மத வாத பத்திரிகைகள் பெண் தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி மறைந்திருந்து சுட்டனர் அதனால் ராணுவ வீரர்கள் அவர்களை திருப்பி சுட்டதில் இரண்டு பெண் தீவிரவாதிகள் செத்தனர், மூன்று பெண் தீவிரவாதிகள் செத்தனர் என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு எழுதுவர்.

காஷ்மீரிலிருந்து இந்திய ஆக்ரமிப்புப் படைகள் வெளியேறி காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை இளம் பெண்கள் தனித்து நடந்தோ அல்லது வாகனத்திலோ பயணிக்க முடியாது. அதனால் காஷ்மீரில் இளம் பெண்கள் ஸ்கூட்டியில் தனித்து செல்லாதது இஸ்லாமியப் பழமை வாதம் காரணம் அல்ல, இந்திய ராணுவத்தினரின் பயங்கரவாதமே காரணமாகும்.

பஸ்சில் செல்லும் போது ஆண்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது. ஸ்கூட்டியில் அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. என்று காஷ்மீரில் புதிதாக ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் கூறுவதாக மேலும் புளுகி உள்ளது மாலைமலர்.

ஒழுக்கத்தைப் பேண வேண்டும், பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று கருதும் எந்தப் பெண்களும் பஸ்சில் கூட்டத்துடன் பயணிப்பதை விட ஸ்கூட்டியில் தனித்து செல்வது பாதுகாப்பு என்று ஒருக்காலும் சொல்லவே மாட்டார்கள். இது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் மாலைமலரின் அப்பட்டமான கற்பனையாகும்.

பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அவர்களுக்கான தனி இருக்கையில் சக பெண்களுடன் அமர்ந்து செல்வர் எந்த விதமான தொந்தரவும் இடையூறும் ஆண்கள் மூலம் ஏற்படாது மீறினால் ஓட்டுனர் நடத்துனரால் அவர்கள் காவல் நியைலத்தில் பிடித்து ஒப்படைக்கப் படுவர், அல்லது சக பயணிகளால் கூட பிடித்து ஒப்படைக்கப்படலாம்.

ஸ்கூட்டியில் தனித்துப் பயணிக்கும் போது ஸ்கூட்டர் ஓட்டும் ஆண்களால் ஏற்படும் தொந்தரவுகளை, இடையூறுகளை இவர்களால் தனித்து எதிர்கொள்ள முடியாது, காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைக்கவும் முடியாது.

எதோ ஒரு அவசரத் தேவைக்காகக் கூட முன்னாள் செல்லும் ஸ்கூட்டரை இவர்களால் முந்த முடியாது, முந்த நேரிட்டால் ஸ்கூட்டர் காரர் கடுப்பாகி விடுவார் ஒருப் பெண்ணுக்கு இவ்வளவுத் துணிச்சலா ? நான் யார் என்ற ஆண் அகம்பாவம் அவருக்கு வந்து விடும் இறுதியில் விபரீதத்தில் முடிந்து விடலாம்

ஃபேஷன் ஆடைகளை அணிந்து கொண்டு தனித்து ஸ்கூட்டியில் பயணிக்கும் பெண்களின் பின்னால் அணி வகுக்கும் ஆண்களின் ஈவ்டீசிங்கினால் மன உலைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

கற்பழிப்புக்காக மரண தண்டனையே சிறந்தது என்று உலக மனித உரிமை அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் ஒருமித்துக் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நாட்டில் கற்பழிப்புகள் மலிந்து விட்டன. இறுக்கமான ஆடை அணிய வேண்டாம் என்று நீதிபதிகள் பெண்களுக்கு அறிவுரைக் கூறும் அளவுக்கு கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்ற வாசல்களை நாள் தோறும் தட்டிக் கொண்டிருக்கின்றன.

தனித்து ஸ்கூட்டி ஓட்டும் எல்லாப் பெண்களும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மறைக்கும் ஆடை அணிந்து ஓட்டுவதில்லை

இன்னும் திடீரென ஏற்படும் விபத்தில் அவர்களைத் தொட்டுத் தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ, இன்னும் பிற முதலுதவிகளை செய்வதற்கோ முடியாத நிலைகள் உருவாவதால் அகால மரணத்தைத் தழுவ நேரிடுகின்றனர் .

இப்படி அடுக்கடுக்காக எத்தனையோக் காரணங்களை தனித்து ஸ்கூட்டியில் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதிகளை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

மேற்காணும் ஆபத்தான விஷயங்களை கவனத்தில் கொண்டே பெண்கள் இரு சக்கர வாகனங்களையோ அல்லது நான்கு சக்கர வாகனங்களையோ இயக்குவதற்கு சவுதி அரேபியாப் போன்ற நாடுகளிலும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது அவர்களுக்கு பாதுகாப்பேத் தவிறப் அவர்கள் மீது பழமை வாதத்தை திணிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் ஈவ்டீஷிங், கற்பழிப்பு, காதல் என்றப் பெயராலான மோசடிகள் போன்ற அநீதிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டு விட்டால் பெண்கள் தாராளமாக வாகனம் ஓட்டுவதில் தடை வராது இதை இஸ்லாம் தடை செய்யவில்ல.

நாட்டின் குடிமக்களை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் மீதும் இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது அதனடிப்படையில் மேற்காணும் விதம் நாகரீகம் எனும் பெயரில் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளை கருத்தில் கொண்டே சவுதி அரேபியா அரசாங்கம் பெண்கள் வாகனம் ஒட்ட தடை விதித்துள்ளது.

“நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 55 = 62

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb