அநியாயம் செய்யாதீர்கள், பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!
ராஸ்மின் மிஸ்க்
உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை.
சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அநியாயம் செய்து விடுகிறார்கள்.அப்படி அநியாயம் செய்வோரில் பெரும்பாலானோர் அநியாயத்தின் விபரீதத்தை புரிந்து கொள்வதில்லை.
அதன் விபரீதம் நமக்குத் தெரிந்தால் அடுத்த மனிதனுக்கு அநியாயம் செய்வதை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக் கொள்; அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது என்று கூறினார்கள். (புகாரி : 1401)
அதாவது ஒரு மனிதன் இன்னொருவனுக்கு ஏதாவது அநியாயம் செய்து விட்டால் அந்த அநியாயத்திற்கு சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் மன்னித்தால் அல்லாஹ்வும் மன்னித்து விடுவான்.
பாதிக்கப் பட்டவன் மன்னிக்காவிடில் அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை.பாதிக்கப் பட்டவன் காபிராக இருந்தாலும் சரியே!
பாதிக்கப் பட்டவன் எப்படி அல்லாஹ்விடம் கேட்கிறானோ அப்படியே அல்லாஹ்வும் அதனை ஏற்றுக் கொள்வான்.
அதாவது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ கதாதா என்பவருக்கெதிராக செய்த துஆ அவர் எப்படி அல்லாஹ்விடம் கேட்டாரோ அப்படியே பலித்தது.
ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநர்) ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கலிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்கற்ன் முறையீடுகலில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கற்டம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; ”அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (ஸஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்கலில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்கற்ல் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று பதிலலித்தார்கள்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே’ என்று கூறினார்கள். இதையொட்டி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஒருவரை’ அல்லது ‘சிலரை’ ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறித்து கூஃபாவாசிகலிடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகலிடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்லி வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்கலிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்:
சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அற்க்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்” என்று (குறை) கூறினார்.
இதைக் கேட்ட ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு,
”இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால்…….
اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ وَأَطِلْ فَقْرَهُ وَعَرِّضْهُ بِالْفِتَن
அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னர் (சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனை களுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்கலின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது” என்று கூறுவார்.
அப்துல் மலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னா(லி)ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகற்ல் செல்லும் அடிமைப் பெண்களை கிள்லி அவர்களைத் துன்புறுத்துவார். (புகாரி : 755)
ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை உஸாமா பின் கதாதா என்பவர் சொல்கிறார்.
ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருக்கெதிராக மூன்று விஷயங்களில் அல்லாஹ்விடம் பிரார்திக்கிறார்கள்.
1. அவருடைய வாழ்நாளை நீட்டிக் கொடுக்க வேண்டும்.
2. அவரை பரம ஏழையாக்கிவிட வேண்டும்.
3. அவரை குழப்பத்தில் விட்டு விட வேண்டும்.
இந்த மூன்று துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அதனால் தான் பிற்காலத்தில் உஸாமா பின் கதாதா ஸஅத் அவர்கள் செய்த துஆ என்னைப் பிடித்து விட்டது என்று சொல்வாராம்.
நாம் யாருக்காவது அநியாயம் செய்தால் அவர்கள் நமக்கு எதிராக துஆ கேட்பதற்கு முன்பு நாம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.இல்லாவிடில் அவர்களின் துஆ நம்மைப் பிடித்துக் கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதற்கு இன்னுமொரு சம்பவத்தையும் புகாரியில் நாம் பார்க்க முடியும்.
அதாவது அம்ரு பின் நுபைல் என்பவரின் பேரனாரான ஸஈத் பின் ஸைத் அவர்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தினை ஒரு பெண்மணி அபகரித்துக் கொண்டால்.அந்த நிலம் தனக்குறியது என்று பொய்யாக வாதம் புரிந்தால் அதற்கு ஸஈத் பின் ஸைத் அவர்கள் அந்தப் பெண்ணுக்கெதிராக துஆ செய்தார்கள்.அந்த துஆவையும் அல்லாஹ் அப்படியே ஏற்றுக் கொண்டான்.
ஸஅத் அவர்கள் அல்லாஹ்விடம்
اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَأَعْمِ بَصَرَهَا وَاجْعَلْ قَبْرَهَا فِي دَارِهَا
இறைவா இந்தப் பெண்மணி பொய் சொல்பவளாக இருந்தால் அவளுடைய பார்வையை பரித்து(குருடியாக்கி)விடு, அவளுடைய வீட்டையே அவளுக்கு கப்றாக ஆக்கிவிடு என்று துஆ செய்தார்கள்.
பிற்காலத்தில் அந்தப் பெண்மணி பார்வையிலந்தவளாக சுவரைத் தடவிக் கொண்டு நடந்து செல்வாளாம்.
அப்போது அவள் ஸஈத் பின் ஸைத் அவர்கள் எனக்கெதிராக கேட்ட துஆ பழித்து விட்டது என்று அவள் கூறக்கூடியவளாக இருந்தாள்.
ஒரு முறை அவள் அவளுடைய வீட்டில் சுவரைத் தடவிக் கொண்டு நடந்து செல்லும் போது கினற்றுக்குள் விழுந்து மரணித்து விட்டாள்.அதுவே அவளுக்கு கப்றாகவும் மாறிவிட்டது. (முஸ்லிம் : 3021)
அன்பின் சகோதரர்களே!
இந்த உலகில் நாம் வாழும் நாட்களில் யாருக்கும் அநியாயம் செய்யாமல், முடிந்த வரை மற்ற மக்களுக்கு நன்மை செய்து வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.மீறி யாருக்காவது அநியாயம் செய்து விட்டால் அவர்கள் நமக்கெதிராக பிரார்திப்பதற்கு முன் நாம் அவர்களிடம் நடந்த தவருக்காக மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி மன்னிப்பை பெற்றுக் கொண்டால்தான் அல்லாஹ்வும் நம்மை மன்னித்து அருள் புரிவான் என்பதை நாம் அனைவரும் நம் மனதில் ஆழமாக பதிந்து கொள்வோமாக!
-ஃபாத்திமா ஷஹானா கொழும்பு
-உண்மைகள்