Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்

Posted on November 6, 2012 by admin

Image result for raining season

       மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்            

‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)

தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.

ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்.

இரண்டு நேரத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்திலும், மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்திலும் தொழ முடியும்.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1272)

லுஹரையும், அஸரையும் சேர்த்து ஒரு நேரத்திலும், மஃரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் நபியவர்கள் தொழுததாக குறிப்பிடும் மேற்கண்ட செய்தியில். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை. என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அச்சமோ மழையோ இருக்கவில்லை என்பதிலிருந்து அச்சம் அல்லது மழை இருந்தால் மாத்திரம் தான் நபியவர்கள் சேர்த்துத் தொழுவார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

மதீனாவில் இப்படி செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லா விட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.

கடமையான தொழுகைகளை வீட்டிலும் தொழுது கொள்ள முடியும்.

மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், “(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி (666)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.

எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம். என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது?

மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F] முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா.

இதன் பொருள் :

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525)

மழை பொழியும் போது என்ன செய்வது?

மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032)

அளவுக்கு மேல் மழை பெய்தால்…

சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள் அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا 

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)

அல்லது

B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

இதன் பொருள் :

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1013, 1016)

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(

புயல் வீசும் போது என்ன செய்வது?

தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ

இதன் பொருள் :

இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1496)

மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

source: www.rasminmisc.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 89 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb