இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்! (2)
மருத்துவம் :
சுற்றுச்சூழலும் மனிதனின் உள்ளமும் தான் நோயின் பிறப்பிடமாக இருக்கின்றது. உடலில் ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதி சீரடைந்தால் முழு உடலும் சீரடைகிறது. அது சீர் குலைந்தால் முழு உடலும் சீர் குலைகிறது. (நூல் : புகாரி, முஸ்லிம்) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை முஸ்லிம்கள் உளவியல் தொடர்பான மருத்துவ ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஒரு நபி மொழியைக் கொண்டு ஏழரைக் கோடி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். நோயின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். ‘உள்ளம்‘ தெளிவாக குழப்பம் இல்லாமல் இருந்தாலே மனித வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.
இன்றைய ஆங்கில மருத்துவம் (அலோபதி) இந்த ‘உள்ளம்‘ என்ற கருத்தை மறுத்து உருவாக்கப்பட்ட மருத்துவமுறையாகும். அதனால் தான் அலோபதி மருத்துவ முறையால் நோய்களை முழுமையாக குணப்படுத்த முடிவதில்லை. பக்க விளைவுகளும் அதிகமாக உள்ளது. மருத்துவம் என்பது இறைவனின் அருள் நிறைந்த துறை. அரசு தனது குடிமக்களின் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் 4 கலீஃபாக்கள் காலத்திலும் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்திலும் இந்த சுகாதாரத் துறையை எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதை நாம் அறிய வேண்டும்.
அரசாங்கம்தான் இலவசமாக மருத்துவமனை நடத்த வேண்டும். கூடுதலான நிதிச்சுமைக்கு வசதி படைத்தவர்களின் கொடையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக ஹஸ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைத்துக்காட்டிய “அவுகாஃப்” என்ற “வக்ஃப்” நிறுவனம் நமக்கு காட்டியும் கற்றும் தருகிறது. “வக்ஃப்”; என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கத்தான். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றத்தான். ஆனால் இன்றைக்கு வக்ஃப் நிறுவனங்கள் யார்யார் வாழ்வில் எல்லாம் ஒளியேற்றுகிறது என்பது எல்லோரும் அறிந்த தனிக்கதை.
ஆங்கில (அலோபதி) மருத்துவம் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இந்தியாவைக் கொள்ளையிட வந்த போது இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 40 – 50 ஆண்டுகளில் இந்த மருத்துவ முறை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி, இன்று அதை விட்டால் வேறு வழியில்லை, ஆங்கில மருத்துவம் தான் நோய்களைத் தீர்ப்பதற்கு உள்ள ஒரே வழி என்ற சிந்தனை மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது. அரசும் அரசியல்வாதிகளும் அதைத்தான் ஊக்கப்படுத்துகின்றனர். காரணம் “கவனிப்புகள்” பலமாக இருப்பது தான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகத்தில் நோய் நிவாரணியாக எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாத இயற்கை வைத்தியமான சித்த மருத்துவம் – அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கிரேக்க மருத்துவமான யூனானி, ஜெர்மன் மருத்துவமான ஹோமியோபதி, நேச்சுரோபதி (இயற்கை வைத்தியம்) போன்ற இந்திய மருத்துவ முறைகளையெல்லாம் கிறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ விமீபீவீநீவீஸீமீ அதாவது ‘மாற்று மருத்துவம்‘ என்று அழைக்கும் கேவலமான நிலை அரசிடமும் மக்களிடமும் நிலவுகிறது. “ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது” என்று கிராமங்களில் சொல்வது இங்கே நிஜமாக்கப்படுகிறது.
பெருகிவரும் நோய்களின் பிடியிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யூனானி, ஹோமியோபதி நேச்சுரோபதி (இயற்கை வைத்தியம்) படித்த மருத்துவர்களை ஒவ்வொரு முஸ்லிம் முஹல்லாவிலும் அமர்த்திட வேண்டும். அவசர சிகிச்சைக்கு மாத்திரம் அலோபதியை பயன்படுத்திக் கொண்டு அடிப்படையான சின்னச் சின்ன நோய்களுக்கும் நாள்பட்ட தீர்க்க இயலாத நோய்களுக்கும் இந்திய மருத்துவ முறைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வீடுகளில் கடைபிடிக்கப்பட்ட வீட்டு வைத்திய முறைகளை {நாட்டு வைத்தியம்} ஒரு நாளும் நாம் மறந்து விடக்கூடாது. அற்புதமான அந்த மருத்துவ அறிவை குழந்தைகளுக்கு கற்றுத்தந்து பாதுகாக்க வேண்டும்.
12ஆம் வகுப்பில் தமிழ் வழியில் உயிரியல் படித்த மாணவிகளில் குறைந்தது ஒருவரையாவது ஒவ்வொரு முஸ்லிம் ஜமாஅத்திலிருந்தும் தேர்வு செய்து ‘இந்திய மருத்துவம்‘ படிக்க அவர்களுக்கு உதவிட வேண்டும். இன்ஷா அல்லாஹ் தமிழக முஸ்லிம் சமூகத்தில் நோய்கள் பெருகுவதை, நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை 5 1/2 ஆண்டுகளில் ஒரளவிற்கு தடுத்திட முடியும்.
இஸ்லாமிய மருத்துவம் :
மத்தியகால வரலாற்றில் ஏறக்குறைய 500 ஆண்டு காலம் உலகின் தலைசிறந்த மருத்துவ முறை என்று அறியப்பட்ட, அறியப்படுகின்ற ‘இஸ்லாமிய மருத்துவத்தை’ மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். அல்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கை முறை, உணவுகள், உண்ணும் முறை, மருந்துகள், ‘உள்ளம்‘ தொடர்பான கருத்துக்கள் போன்றவற்றில் நடைபெற்ற அதிகப்படியான ஆய்வுகள் தான் கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து ‘இஸ்லாமிய மருத்துவம்‘ என்ற உயர்தரமான உண்மையான மருத்துவ முறையாக உருவெடுத்தது. இது அன்றைய உலகின் அனைத்து வியாதிகளுக்கும் செலவு இல்லாமல் நிரந்தர தீர்வைத் தந்தது.
11ஆம் நூற்றாண்டில், பாக்தாத்தின் அப்பாஸிய கிலாஃபத்தில் அமைந்திருந்த “பைத்துல் ஹிக்மா” {பிஷீusமீ ளியீ கீவீsபீஷீனீ} என்ற ஆய்வுக் கூடத்தில் லத்தீன் மொழியிலிருந்து அரபு மொழிக்கு ஏராளமான கிரேக்கத் தத்துவங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. அப்போது கிரேக்கத்தின் “ஹிப்போகிரட்ஸ்” {கி.மு.370} என்ற அறிஞரால் மேம்படுத்தப்பட்ட மருத்துவமான யூனானி மருத்துவக் குறிப்புகளும் மொழியாக்கம் செய்யப்பட்டன.
அதே நேரத்தில் அரசியல் காரணங்களாலும், முஸ்லிம்களிடம் நிலவிய கொள்கை குழப்பங்களாலும் இஸ்லாமிய மருத்துவத்தை மேம்படுத்த வேண்டிய ஆய்வுகள் தேக்க நிலையை அடைந்தன. இன்றைய முஸ்லிம்களிடம் நிலவும் மேற்கத்திய நாகரீக மோகம் போல அன்றைய முஸ்லிம்கள் கிரேக்கத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு யூனானி மருத்துவத்தை எளிதாக உணர்ந்தனர். அதில் அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்டு அதில் சாதனை படைத்தனர். இதனால் பிற்காலத்தில் யூனானி மருத்துவமே முஸ்லிம்களிடம் நிலை பெற்று விட்டது.
யூனானி மருத்துவமும் இஸ்லாமிய அடிப்படையிலான மருத்துவம் அல்ல. அதுவும் மேற்கத்திய தயாரிப்பு தான். இதுவும் இறைவன் மற்றும் ஆன்மா ஆகியவற்றை மறுக்கும் மருத்துவமேயாகும். இறைவனை மறுக்கும் எந்த ஒரு மருத்துவ முறையாலும் எந்தக் காலத்திலும் முழுமையான நிவாரணத்தைக் கொடுக்க இயலாது.
‘நோயைக் கொடுப்பதும் இறைவன், அதை நிவர்த்தி செய்யும் ஆற்றலும் இறைவனிடமே உள்ளது’ என்ற இறைக் கருத்தையும் ‘மருத்துவம் என்பது முதலில் உள்ளத்திற்கு பிறகு உடலுக்கு’ அதாவது முதலில் இறைச்சிந்தனை பிறகு உடம்புக்கு மருந்து. இந்த முறையில் உருவாக்கப்படும் மருத்துவக் கொள்கையால் மட்டுமே நோய்களின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். அதற்கு முஸ்லிம்களே மறந்துபோன “இஸ்லாமிய மருத்துவம்”; குறித்த நீண்ட நெடிய ஆய்வுகள் தேவை.
தமிழகத்தில் இஸ்லாமிய மருத்துவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான கட்டமைப்பு வசதி (மாணவர்களே இல்லாத) அரபு மதரஸாக்களில் மட்டும் தான் உள்ளது. கேரளாவில் உள்ள மதரஸாக்களில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான ஆய்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. ஆனால் தமிழகத்தில் அது “உலகக்கல்வி” என்று முத்திரையிடப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவம் தொடர்பான ஆய்வுகளை மதரஸாக்களில் வைத்து மேற்கொள்வது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணானதல்ல. இன்னும் சொல்லப் போனால் அது மார்க்கத்தில் விரும்பத்தக்கதே என்பதை மேற்கூறிய செய்திகளில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். ஆகவே இன்று சுற்றுப்புறச் சூழலும் நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்து மக்களின் நல்வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பழக்கத்தை நோக்கி மக்கள் உந்தித் தள்ளப்பட்டு நோய்களின் பிடியில் சிக்க வைக்கப்பட்டு வரும் நிலையில் முறையான மருத்துவ ஆய்வும் சிகிச்சையும் அவசர, அவசியத் தேவையாகிறது.
ஆதலால், மதரஸா நிர்வாகிகளே! நமது மதரஸாக் கல்வியில் மருத்துவத்தை ஒரு பாடமாகவும் நமது மதரஸாவின் ஒரு பகுதியை மருத்துவ ஆய்வுக் கூடமாகவும் “தரம் உயர்த்த” முயலுவோமாக!
இன்னும் எத்தனை காலம் தான் அறியாமையில் மூழ்கி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பின்னடைவில் வைத்திருப்பது? சிந்திப்போமாக!
source: www.samooganeethi.org