Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்ணால் கவிழ்ந்த பிரபலங்கள்!

Posted on October 30, 2012 by admin

பெண்ணால் கவிழ்ந்த பிரபலங்கள்!

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)  

‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்பது தெரிந்த பழமொழி. அதற்காகத் தான் படைத் தளபதிகளும், தீவிர வாத அமைப்புகளைச் சார்ந்தவர்களும் திருமனமாகாமேயே இருந்துள்ளார்கள். அப்படி பெண்ணால் மண்ணைக் கவ்விய தலைவர்களில் முக்கியமானவர்கள் என்று குறிப்பிடும்போது

முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிளிங்டன்,

இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்கிலோனி,

இஸ்ரேல் முன்னாள் ஜனாதிபதி மோஷே கட்சவ்,

விமானப் பணிப் பெண்ணுடன் தொடர்பு வாய்த்த செகொச்லவிய ஜனாதிபதி வாக்லவ் கிளாஸ்,

ஹோட்டல் பணிப்பெண்ணுடன் நியுயார்க் நகரத்தில் தொடர்பு வைத்த உலக வங்கி தலைவர் ஸ்ட்ராஸ் கஹ்ன்,

எவன்ஜெலிகல் கிருத்துவ பாதிரிமார்களும்,

போலோ விளையாட்டு முடிசூடா மன்னன் மார்க் வூட்ஸ்,

குத்துச் சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் போன்றோர் அடங்குவர்.

ஏன் உலகில் மனித இனம் தோன்றுவதிற்குக் காரணமான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் போன்றோர் சொர்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பப் பட்ட கதையில் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இப்லிஸ் எல்லாம் வல்ல அல்லாஹ் இட்டக் கட்டளைக்கு மாறு செய்து ஆப்பிள் பழத்தினை தின்னுமாறு திசைத் திருப்பியதால் பூமிக்கு அனுப்பப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும்.

ஒற்றுமையுடன் இருந்த சிங்கள இன வெறி அரசுக்கு எதிரான போராளிகள் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் சென்னை பாண்டி பஜாரில் பெண் சண்டையில் துப்பாக்கிச் சண்டை 1982 ஆம் ஆண்டு நடத்தியது அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன்.

ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு இஸ்லாமிய தீவிர படை பேராளி 2011 செப்டம்பர் மாதத்தில் கொல்லப் பட்டிருக்கிறார். அவர் தான் அன்வர்-அல்-அவலாகி என்ற யேமானிய நாட்டவர் ஆவார். அவர் ஒரு பெண் மீது ஆசைப் பட்டதால் வஞ்சகமாக கொல்லப் பட்டிருக்கிறார்.

அன்வர் அமெரிக்காவில் படிக்கும்போது அவருடன் வார விடுமுறையில் மோட்டார் சைக்கில் ஓட்டும் சகத் தோழர் டேனிஷ் நாட்டினைச் சார்ந்த மார்ட்டின் ஸ்டார்ம் என்பவர் ஒரு கட்டத்தில் அன்வருக்கு வஞ்சகம் இழைத்து விட்டார். மார்ட்டின் ஸ்டார்ம் தான் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி விட்டதாக அன்வருக்கு மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனை உண்மை என்று அன்வரும் நம்பி அவருடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டிருந்த நேரம் அன்வரை தீவிரவாதிகளின் ஏமன் நாட்டின் முக்கிய தலைவன் என்று அமெரிக்கா கருதியது. அப்போது அன்வரைக் கொல்ல திட்டம் தீட்டி அவருடைய மின் அஞ்சலை கண்காணித்தது.

ஒரு கட்டத்தில் அன்வருக்கு அனுப்பிய மின் அஞ்சலில் மார்ட்டின் ஸ்டார்ம் குரோசியா நாட்டு அழகியப் பெண் ஒருவர் அன்வரை அவருடைய வீர தீர செயலுக்காக மூன்றாம் திருமணம் செய்ய ஆசைப் படுவதாகவும் ஒரு மின் அஞ்சல் அனுப்பினார். ஆகா தன் வீர தீரச் செயலுக்காக தன்னை இதுவரைப் பார்த்திராதப் அந்நிய நாட்டுப் பெண் விரும்பும்போது தன் இருப்பிடம் சொன்னால் என்ன என்று அன்வரும் மின் அஞ்சல் தனது நண்பன் மார்க் ஸ்டார்முக்கு அனுப்பினார். அந்த தகவல் தான் அவருக்கு எமனாக அமைந்து விட்டது. உடனே அதனைக் கண்காணித்த அமெரிக்க ஒற்றர்ப் படை ஆளில்லாத விமானம் மூலம் குண்டு வீசி கொன்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவ்வாறு தனது பாலிய நண்பரைக் காட்டிக் கொடுத்ததிற்காக மார்க் ஸ்டார்மிற்கு $ 2,50,000 டாலர்கள் நூறு டாலர்களாக கொடுக்கப் பட்டதாம்.

இஸ்லாமியர் நாடுகளின் தலைவர்கள் பலர் அன்னியப் பெண்களின் மீது ஆசைப்பட்டு அவர்களை மனைவியாக்கி அதனால் அந்த நாடுகளின் கைப்பாவையாகிய சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்னும் கூட நமது நாட்டுப் பிரபலங்கள் மாற்று மதப் பெண்ணை மணர்வது மட்டுமல்லாமல் அவர்களை அவர்கள் மதக் கோட்பாடுகள் தொடர் அனுமதி அளிப்பதும் இன்றும் நடந்து கொண்டு தான் உள்ளது.

பிற பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டதின் மூலம் தன் முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தினை மட்டுமல்லாது தான் கஷ்டப்பட்டு சேமித்த செல்வத்தினை இழந்த பெரிய பணக்காரர்களும் நம்மிடையே நடமாடும் பிச்சைக்காரர்களாக வளம் வருவதினைக் காணலாம். ஆகவே கைப் பிடித்த மனைவியினை கைகழுவாது இஸ்லாம் போதித்த ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் உயர் நிலை பெறலாமே!

AP,Mohamed Ali

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb