உடலுறவு – மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (2)
[ வீரியக்குறைவு உள்ள ஆண்களில் அநேகரும் ஆளுமை பிறழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஆளுமைப் பிறழ்வு, இரு வேறு விதங்களில் வெளிப்படுகிறது. ஒரு சாரார், பக்திப் பழங்களாய் இறைவணக்கத்திலேயே மூழ்கியிருப்பார்கள். ஒவ்வொரு ஊராய் இறையில்லங்களுக்கு படையெடுப்பார்கள்.
இன்னொரு சாராரோ, மனைவியை சந்தேகிப்பது, ஒளிந்திருந்தபடி அவளை சதா கண்காணிப்பது, சந்தேகங்களை உருவாக்கி விகாரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இவர்களின் ஒரே குறிக்கோள் தன்னிடமுள்ள குறை வெளிப்படாமல் இருக்கவேண்டுமென்பதே. கடவுள் பக்தியைக்காட்டி உடலுறவிலிருந்து அவசரமாகக் கழன்று கொள்வது முதல் ரகம். மனைவி கற்பு அற்றவள் எனக் காட்டி சண்டையீட்டு தப்பித்துக் கொள்வது இரண்டாம் ரகம். ரகம் எதுவாயினும் இவர்கள் நடத்தும் இல்லறம் என்னவோ நரகம்தான்.
தான் திருப்தியுறாது போவதை அப்பட்டமாய் வெளியே சொல்ல அனைத்துப் பெண்களாலும் முடிவதில்லை. உடலுறவில் திருப்தியுறாது போகின்ற ஆரோக்கியமான பெண்ணை, அடிபட்ட நாகப்பாம்பிற்கு ஒப்பிடலாம். சீற்றம், எழுச்சி, ஆத்திரம், தோல்வியடி என அனைத்து விதமான நெகடிவ் உணர்ச்சிகளும் அவளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதற்குக்கூட லாயக்கற்ற கணவன் நமக்கு அமைந்து விட்டானே என்று அவள் குமுறுகிறாள், கொந்தளிக்கிறாள்.
அதே சமயம் தன் மனைவியைப் புரிந்து கொண்ட கணவனும், கணவனைப் புரிந்துகொண்ட மனைவியும் நடத்தும் இல்லற வாழ்க்கை; இவ்வுலகிலேயே சுவர்க்கத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்துவிடும்.
இறைவன் உயிரினப் பெருக்கத்தையும், இன்பத்தையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே இடத்தில் – உடலுறவு உறுப்பில் தேக்கிச் சங்கமம் ஆக்கி விசித்திர இன்ப விளையாட்டை நம் வாழ்க்கையில் வைத்துள்ளான்.
கணவனுக்கு காதல் புரிவது என்பது அவன் வாழ்வில் ஒரு பகுதியே! ஆனால், மனைவிக்கோ வாழ்க்கை முழுவதும் அதுதான். இன்சொல்லோடு கணவனுடைய கொஞ்சுதலும் கெஞ்சுதலும் மனைவியை இன்பலாகிரியில் ஆழ்த்திவிடும்.]
உடலுறவு – மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (2)
மனைவியின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமாக நினைக்கும் கணவன் செய்ய வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானது உடலுறவே. எனவே உடலுறவின் மூலம் அவளை திருப்தி படுத்த வேண்டியது அவசியத்திலும் அவசியம். இல்லையெனில் இல்லற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
உணவு, உடை, உறைவிடத்தோடு கூட, உடலுறவும் இன்னொரு இன்றியமையாத தேவை என்பதனை நாம் மறந்து விடுகின்றோம். உடலுறவு என்றாலே முகம் சுளித்து உடல் நாணிக் கூனிக் குறுகிப் போகும் வாழ்க்கை அனுகுமுறை அடிப்படையிலேயே தவறாகும். அத்தகைய தவறான நோக்காலேயே நாம் உடலுறவு பற்றிய முழு உண்மைகளைத் தெரிந்து வைக்கவில்லை.
இறைவன் உயிரினப் பெருக்கத்தையும், இன்பத்தையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே இடத்தில் – உடலுறவு உறுப்பில் தேக்கிச் சங்கமம் ஆக்கி விசித்திர இன்ப விளையாட்டை நம் வாழ்க்கையில் வைத்துள்ளான்.
கணவனுக்கு காதல் புரிவது என்பது அவன் வாழ்வில் ஒரு பகுதியே! ஆனால், மனைவிக்கோ வாழ்க்கை முழுவதும் அதுதான். இன்சொல்லோடு கணவனுடைய கொஞ்சுதலும் கெஞ்சுதலும் மனைவியை இன்பலாகிரியில் ஆழ்த்திவிடும்.
நீங்கள் பெண்களை (-மனைவியை) இன்ப ஊற்றாகவே மதிக்கலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. வெறும் உயிரற்ற பொருளாகக் கருதி அலட்சியப்படுத்தக்கூடாது. மனைவியுடன் பேசும்போது கண்களைக்கூர்மையாக சந்தித்துப் பேச வேண்டும். அதுதான் ரசிப்புத்தன்மை. பெண்களின் அன்பும், அரவனைப்பும் ஆண்களின் கண்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். பல இல்லங்களில். மனைவியின் காதலுணர்வு விளக்கமில்லாமலேயே வீணாகின்றன.
உடலுறவின்போது கணவன் முறையாக நடந்து கொண்டால் – அதாவது தன் மனைவியிடம் எப்படி நடந்து கொண்டால் – அவள் எளிதில் இன்பத்தின் உச்ச நிலையை அடைந்து விடுவாள் என்பதை அனுபவத்தில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பார்க்கப்போனால், பொருள் விரையம் ஏதும் இன்றி, நினைத்த மாத்திரத்தில் சில நிமிடங்களைச் செலவழித்து இன்பம் பெற இறைவன் அளித்துள்ள ஒரே கொடை இந்த இன்பக் கலவியே யாகும்
உடலுறவு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் எழுவதுதான் என்றாலும், உடலுறவின்போது ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக ரியாக்ட் செய்கிறார்கள், இயங்குகிறார்கள். உச்சத்துக்குப்பின் தொடரும் கடைசி நிலை ஆணுக்கு எத்தனை முக்கியமானதோ, அதேபோன்று “முன்விளையாட்டு” பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது. சொல்லப்போனால், பெண்ணை, ஆண் இளைப்பாற்ற வேண்டும். என்பதற்காகவே இறைவன் இந்நிலையை அமைத்துள்ளான் என்று சொல்ல வேண்டும்.
மனைவியைத் தனக்கு நெருக்கமானவளாக மாற்றிக்கொள்ள விழையும் ஒவ்வொரு கணவனும், முன்விளையாடலை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உறவில் பெண்மை முதலில் தேர்ந்தெடுப்பது மென்மையையே. மெல்லிய உணர்வுகளைத்தான் அவள் மிகவும் விரும்புகிறாள். அனுபவிக்கிறாள். தன்னை மறந்து இளகத் துவங்குகிறாள். இளகி மலர அவள் எக்காரணம் கொண்டும் அவசரப் பட விரும்புவதில்லை. படிப்படியாக இளகி மலருவதே பெண்ணின் பாணி. பெண்ணின் ஆரோக்கியத்திற்காகவே இறைவன் அமைத்திருக்கும் ஏற்பாடு இது. இளகி மலர்ந்த நிலையிலேதான், பெண்ணின் சக்தி யாவும் ஒன்று திரண்டு நிற்கின்றன. மனைவியைத் தனதாக்கிக்கொள்ள கணவன் முனைய வேண்டிய தருணம் இதுதான்.
இளகி மலர்ந்த பெண்மை, ஆக்ரோஷண சக்தியின் உச்சக்கட்டத்திலே நிற்கிறது. கடல் பிரளய நிலைக்கு இதை ஒப்பிடலாம்.. இந்த கட்டத்தில் பெண்மைக்கு வேண்டியதெல்லாம் ஆணின் ஆளுகைதான். வீரியத்தோடு தன்னுள் இறங்கும் கணவனை அப்படியே ஈர்த்து தன் அந்தரங்கத்துக்குள் நிறுத்திக்கொள்ளவும், அவனை தன் ஜீவனுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் அவள் ஆதங்கப்படுகிறாள்.
இந்நிலையில், பெண்மையை பொங்கி வழிய எத்தனிக்கும் பாலுக்கு ஒப்பிடலாம். விளிம்புவரை எழும்பி பொங்கி நிற்கும் பாலானது தண்ணீர்த் தெளிப்பில் அமைதியாய், விளிம்புக்குள் அடங்கி பரிமளிப்பது போல, ஆக்ரோஷமான பெண்மையானது, ஆண்மையின் வீரிய அணுகுதலால் அமைதி பெறுகிறது. ஆம்! உடற்கூறு ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையிலே, பெண்ணுள் ஆண் இயங்கும் விதம் தான் அவளது “திருப்தி”யைத் தீர்மானிப்பதாகும்.
தான் திருப்தியுறாது போவதை அப்பட்டமாய் வெளியே சொல்ல அனைத்துப் பெண்களாலும் முடிவதில்லை. உடலுறவில் திருப்தியுறாது போகின்ற ஆரோக்கியமான பெண்ணை, அடிபட்ட நாகப்பாம்பிற்கு ஒப்பிடலாம். சீற்றம், எழுச்சி, ஆத்திரம், தோல்வியடி என அனைத்து விதமான நெகடிவ் உணர்ச்சிகளும் அவளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதற்குக்கூட லாயக்கற்ற கணவன் நமக்கு அமைந்து விட்டானே என்று அவள் குமுறுகிறாள், கொந்தளிக்கிறாள்.
இந்த தோல்வி அடியை, ஏமாற்றத்தை பெண் வெளிப்படுத்தும் பாணியே தனி. ஒவ்வொரு பெண்ணிடமும் இது ஒவ்வொரு விதமாக இருக்கும். பாணி எவ்விதமாயினும், இத்தகையதொரு பெண், தன் கணவனைத் துச்சமென நினைக்கிறாள்.
இந்த தெம்பு, நம் நாட்டு மேல் தட்டுப் பெண்களிடமும், கடைசி தட்டுப் பெண்களிடமும் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால், இந்த ரெண்டுங்கெட்டான் நடுத்தர வர்க்கம் இருக்கின்றதே, அது படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், ஹிஸ்டீரியா கோளாறினால், இல்லறத்தை நரகமாக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் இங்கே எண்ணற்றோர் இருக்கின்றார்கள் என்றால் இவர்களில் பெரும்பாலோர் தகுந்த ஆண் துணை கிடைக்கப்பெறாது மனித வளத்தை இழந்து தத்தளிப்பவர்களே.
இன்றைய நிலையில் நமது நாட்டில் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கணவன்மார்களில் கணிசமான நபர்கள் உடலுறவில் மனைவியைத் திருப்தி படுத்த முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதற்குக்காரணம்; சுய ஒழுங்கு, கட்டுப்பாடு, கற்பு என்பது பெண்ணுக்கிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதுபோல் ஆணுக்கும் வலியுறுத்தப்படாததே!
அளவுக்கதிகமாக சுய இன்பம், திருமணத்துக்கு முந்தைய தகாத உறவுகள், தொடர்ச்சியான தகாத தொடர்புகள் என ஆண்களில் பெரும்பாலோர் ஒழுக்கம் கெட்டு அலைந்துவிட்டு, அதன் பின்னர் பாதுகாப்புக்காக மட்டுமே திருமணம் செய்து கொண்டவர்களாய் இருக்கிறார்கள். புகை, போதை பொருள்கள், மது ஆகிய தீய பழக்கங்களும் வீரியத்துக்கு எதிரிகளாகும்.
இன்னொரு விஷயன்ம்… வீரியக்குறைவு உள்ள ஆண்களில் அநேகரும் ஆளுமை பிறழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஆளுமைப் பிறழ்வு, இரு வேறு விதங்களில் வெளிப்படுகிறது. ஒரு சாரார், பக்திப் பழங்களாய் இறைவணக்கத்திலேயே மூழ்கியிருப்பார்கள். ஒவ்வொரு ஊராய் இறையில்லங்களுக்கு படையெடுப்பார்கள்.
இன்னொரு சாராரோ, மனைவியை சந்தேகிப்பது, ஒளிந்திருந்தபடி அவளை சதா கண்காணிப்பது, சந்தேகங்களை உருவாக்கி விகாரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இவர்களின் ஒரே குறிக்கோள் தன்னிடமுள்ள குறை வெளிப்படாமல் இருக்கவேண்டுமென்பதே.
கடவுள் பக்தியைக்காட்டி உடலுறவிலிருந்து அவசரமாகக் கழன்று கொள்வது முதல் ரகம். மனைவி கற்பு அற்றவள் எனக் காட்டி சண்டையீட்டு தப்பித்துக் கொள்வது இரண்டாம் ரகம். ரகம் எதுவாயினும் இவர்கள் நடத்தும் இள்ளறம் என்னவோ நரகம்தான். அதே சமயம் தன் மனைவியைப் புரிந்து கொண்ட கணவனும், கணவனைப் புரிந்துகொண்ட மனைவியும் நடத்தும் இல்லற வாழ்க்கை; இவ்வுலகிலேயே சுவர்க்கத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்துவிடும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.