அதுக்கெல்லாம் நேரம் இல்லீங்க!
அஸ்ஸலாமு அலைக்கும்….ஹி…ஹி..ஹி…
அவசர வேலையில இருக்கீங்க போல?
…. சொல்லுங்க பாய்…
… அசரத்து, முத்தவல்லி, நீங்க மூணுபேரும்
அடுத்த தெரு முஹல்லாவிற்கு
சுபுஹுக்குப் பின்னாடி வரணும்
நம்ம ஜனங்களுக்கு
இஸ்லாமிய வாழ்வை
எடுத்துரைக்கணும்
நானும் உங்களுக்கு
உதவுவேன்
நெலமை ரொம்ப…
மோசமா போய்க்கிட்டிருக்கு!
தலைக்குமேல வேலை கெடக்கு பாய்!
உளுச்செய்யுற இடத்தை அலங்காரம் செய்றோம்!
கக்கூஸ்களுக்கு டைல்ஸ் ஒட்டுறோம்!
பள்ளிவாசல் கேட்டு பக்காவா செய்ய ஆர்டர் குடுத்திருக்கோம்
மினராவுக்கு மினுமினுப்பு பெயிண்ட் அடிக்கிறோம்!
பள்ளி உள் வராண்டா முழுதும் ஏ/சி பண்றோம்!
நிக்காஹ் பதிவு தஃப்தரை இமாம் பொறுப்பில் கொடுத்திட்டோம்!
சந்தா, கஞ்சி வசூல் செய்ய முஅதீனுக்கு ரசீது புக் தந்திருக்கோம்!
நாற்பது சதம் கமிஷன்!
இதை செய்யவே நேரம் போதலை
இதுக்கு மேலே நீங்கவேற
புதுவேலை சொல்றீங்க?
அதுக்கெல்லாம் நேரமில்லீங்க!
– அமீர்கான்
source:
முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2012