Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் ‘அந்தஸ்து’!

Posted on October 15, 2012 by admin

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் ‘அந்தஸ்து’!

பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

பெற்றோரின் அந்தஸ்து தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.

பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள்.

பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு சரியான முறையில் வழிகாட்டி, ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன.

‘நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்’ என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன. அப்படி அனுமதிகொடுக்கும் விஷயத்தில் அவர்கள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதி செய்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.

பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.

‘வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை’ என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரே, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.

எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும்,

‘நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும்.

படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள். குழந்தைகளுக்கென்று ஒரு வெளியுலக இமேஜ் இருக்கிறது. அவர்களுக்கென்று மரியாதைக்குரிய ஒரு நட்பு வட்டம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு தங்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். தங்களது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கு பிள்ளைகள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தை அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரைப் பற்றி தங்கள் நட்பு வட்டத்திலும் உயர்வாகப் பேசுகிறார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb