தமிழகத்தில் புற்றுநோய் அபாயம்!
சி.எம்.என். சலீம்
புற்றுநோய் உடலில், உடலுக்குள், சிதைந்த ஒரு திசு. இது தன்னைச் சுற்றி தன் அசுர வளர்ச்சியை காளிப்பிளவர்போல் பெருகிடச் செய்திடும். இது பரம்பரையாக பெற்றோர் எவருக்கேனும் இருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கு 7 சதவீதம் வரும். மற்றவர்கள் கட்டாயம் தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஹேமந்ராஜ்.
புற்றுநோய் மரபுகளாக மற்றவருக்கு வரக்காரணம் சுற்றுச் சூழல்தான். சிகரேட் புகைக்கும் நூற்றில் 40 பேருக்கு புற்றுநோய் வரும். மீதமுள்ள 60 பேருக்கு கட்டாயம் இதயம், நுரையீரல் நோய்வரும். நம் பழக்கத்தில் இல்லாத புதிய வகையான பான்மசாலா, பான்பராக், குட்கா, புகையிலைத்தூள், மூக்குப்பொடி என புகையிலை சார்ந்த அத்தனையும் புற்று நோயின் நண்பன்.
அதைப்போலவே அசைவ உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் காரமசாலா பொருட்கள் குடல் அழற்சி, குடல் புண் வரக் காரணம் இந்த குடல் புண்களின் திசு ஏதேனும் சிதைந்து அதனைச் சுற்றி இதர எல்லா திசுவும் இத்துடன் சேரத் தொடங்கினால் புற்றுக்கட்டியாக மாறும். எனவே அசைவத்தில் அளவும், அன்றாடம் உண்பதை தவிர்ப்பதும் இன்றைய நிலைக்கு நல்லது என்கிறார்.
தொடர்ந்து இருமல், வியர்ப்பது, கட்டி, ஆறாத புண், இரத்தக் கசிவு, மலத்தில் இரத்தம், தவறும் மாதவிடாய் போன்ற பலவும் இந்த நோயின் அறிகுறிகள். இதனை முறைப்படி உடனடியாக சோதித்து உரிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்றும் டாக்டர் ஹேமந்த்ராஜ் கூறுகிறார். எனினும் தற்போது தமிழகத்தில் மட்டும் ஆண்டு தோறும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அபாயகரமாகக் கூடிவருகிறது.
நாடெங்கும் புற்று நோய் தொடர்பான ஆய்வில் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் அமைப்பு கடந்த மூன்றாண்டுகள் கிடைத்த முடிவை வெளியிட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது!
உ.பி. மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டில் மட்டும் 90 ஆயிரம் பேர் புற்று நோயால் இறந்துள்ளனர். மகராட்டிரத்தில் 50,989மக்கள் மரண முற்றுள்ளனர். பீகார் மற்றும் மேற்கு வங்கம் மூன்றாம் இடம் நான்காம் இடத்தை மரண விகிதத்தில் இடம் பெற்றுள்ளன.
2011 ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 39,542 பேர் புற்று நோய் காரணமாக இறந்துள்ளனர். ஆந்திராவில் 37,144 பேர் வரை இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 25,531 நபர்கள் இறந்துள்ளனர். கேரளத்தில் 2009 முதல் 2011 வரை முறையே 14,540, 14,672. 14,530 என இறப்பு உயர்ந்து கொண்டே சென்றுள்ளது.
இவைகளில் வட கிழக்கு மாநிலங்களில் புற்று நோய் தாக்கம், மரண விகிதம் குறைவாக உள்ளது. கவனிக்கத்தக்கது. அதே வேளை நவீன கால வளர்ச்சி என்கிற எதையும் அங்கு செய்யவில்லை. மின்மயம், கேபிள் பதிப்பு, தொழிற்சாலை என எதுவும் இல்லாததால் ஒருவேளை சுற்றுச் சூழல் கெடவில்லை. புற்று நோய் ஏற்படவில்லை போலும்?.
தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு 37,806 பேர் புற்று நோய்க்கு இரையானார்கள் 2010 இல் 38,542 பேர் பலியாகினர். என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஆண்டுக்கு ஆண்டு இறப்பு எண்ணிக்கை கூடுதலாவதுடன் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டும் வருகின்றன.
நவீனம் என்பதன் பெயரால் நம் அன்றாட வாழ்வில் கதிர்வீச்சு அபாயம் உள்ளவைகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிப்பது நாம் கவலை கொள்ள வேண்டிய சமூகப் பிரச்சனைகள் ஆகும், ஆனால் அவற்றில் ஏராளமான நிதி முதலீடு செய்து இங்கே கடை பரப்பி காசு பண்ணும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனை ஆகாமலேயே தேங்குவதற்கு அனுமதிக்காது எனவே அபாயம் இல்லை என்று இந்த ஆய்வு சொல்கிறதுஸ அந்த ஆய்வு சொல்கிறதுஸ!
இத்தனை சதவீதம் கதிர்வீச்சு இருப்பது அபாயம் இல்லை என்றெல்லாம் சொல்லி தங்கள் பிழைப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
காற்றில் கலந்துள்ள ஒலி அலையை சின்னஞ்சிறு செல்பேசி தனக்குள்ளே ஈர்த்து அதனை ஒலியாக மாற்ற எத்தனை திறனை பயன்படுத்த வேண்டும்? அதற்கு எந்தளவு வீரியமான கதிரலையில் பரவிடும் அலையை மாற்றி ஒலியாக மாற்றும் வல்லமை தேவை? என்பதை யெல்லாம் நாம் யோசிப்பதில்லை போலும்! செல்பேசி நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆபத்து என்கிறார்கள். ஏன் நாம் தொடர்ந்து பேசினால் கதிர்வீச்சுக்களின் தொடர்ச்சியான வலைக்குள் நம் தலை உடல் முழுவதும் ஆட்படும் எதிர்ப்புத்திறன் அற்றவர்கள் உடனடியாக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். ஆனால் எத்தனை பேர் கேட்கிறார்கள்?
இரவில் எத்தனை படுக்கை அறைகளில் பருவப் பெண்களும், ஆண்களும் இடைவிடாமல் பேசுகின்றனர்? பகலில் சிலர் காதில் போனை வைத்தால் அது சூடாகி வெடிக்கும் வரை பேசுகின்றனர். செல் தவிர்க்க இயலாத ஓர் அவசியமான தொழில்நுட்பம் தான். அது தேவை ஆனால் பயன்பாட்டில் எல்லை, அளவு வேண்டும். டி.வி. பார்க்கும் போதும் மெசேஜ், சாப்பிடும் போதும் மெசேஜ், பயணத்திலும் மெசேஜ், சும்மா இருக்கும் போதெல்லாம் மெசேஜ் இதன் காரணமாக ‘கீமோதெரபி’ மசாஜ் செய்யும் அளவுக்கு செல்கின்றனர்?
நவீன அடுப்பு, மசாலா கலந்த உணவு, குளிர்பானம், புகையிலை சமாச்சாரம், பாஸ்புட், காற்றினை மாசுபடுத்தும் புகை நடுவே வாழ்வது, கண்டகண்ட செயற்கை இழை ஆடைகளை அணிவது, கலப்பட உணவுகள், ஃபிரிஜ், ஏசி, என இயற்கையை மாசாக்கும் கருவிப் பயன்பாடு இது செல்வத்தின், செல்வாக்கின் அடையாளம் என பெருமை பீற்றியபடி பயன்படுத்துவது பல்வேறு பூச்சிமருந்துகள், கொசு மருந்து, திரிகள், காய்களை கனிகளாக்கி, கவர்ச்சியாக அடுக்கப்பட்ட வேதிப்பழம் சாப்பிடுதல் என்பது போன்ற பலவற்றை புற்றுநோய் தொடர்பாக ஆராய்பவர்கள் கணக்கில் கொண்டுள்ளனர்!
குறிப்பாக தமிழகத்தில் புற்றுநோய் தாக்குதல் கடற்கரைப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது இது ஆய்வுக்குரிய மருத்துவம் சார்ந்த பிரச்சனை. ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திட்டங்களை மேற்கொள்ளுவதாக அறிவித்துள்ளது?!ஸ.
இதன் தொடர்ச்சியாக புற்றுநோய் கண்டறியும் சேவைகள், அறுவை சிகிச்சை வசதிகள் சுமார் நூறு மாவட்டங்களில் 21 மாநிலங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாம்? ஒரு நோயாளிக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்!
இதை விட வெருமனே புகையிலை பயன்பாடு, கார உணவு, அசைவ உணவுகளால் தான் புற்றுறோய் வருகிறது என பொத்தாம் பொதுவாகக் கூறாமல் இதனால் வருகிறது நவீன உணவு, எலட்ரானிக் பொருள்கள், உடைகள், மின் கேபிள்கள், செல் டவர்கள், என பலவற்றை ஆய்வு செய்து முடிவுகளை மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்?!
இவைகளைப் பற்றி கூறாமல் வந்துவிட்ட நோய்க்கு சோதனை, சிகிச்சை, மருத்துவ விரிவாக்கம் என்றே அரசு சமாதானம் கூறுகிறது அப்பாவி மக்கள் பல பன்னாட்டு நிறுவனங்கள் வாழ்வதற்காக தங்கள் இன்னுயிரை பலியாக்கும் கினியா சோதனை பன்றிகள் போல் வாழ்வதைத் தடுக்க வேண்டும்.
பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டதில் இன்று எதில் மாற்றம் வந்துள்ளதோ அவைகள் அத்தனையும் சோதனைக்கு ஆளாக்கப்பட வேண்டும். அதன் முடிவுகளை மக்களுக்காக பகிரங்கமாக சுகாதாரத் துறை கூற வேண்டும். இதுவே மக்கள் நலன் நாடும் செயல். அதுவரை நமக்கு நாமே இது போன்ற நவீனங்களை பயன்படுத்துவதில் இருந்து விலகி மரபுகளுக்கு மாற வேண்டும். நம் பாட்டன் பாட்டி வாழ்ந்த வாழ்வியலுக்கு நாம் திரும்புவதைத் தவிர இப்போது வேறு வழியில்லை!
இதற்காக எவராவது உங்களை பிற்போக்காளர் என்றால் கவலை வேண்டாம். அவர்கள் எல்லாம் நவீன முற்போக்கால் வாழ்ந்து கீமோ தெரபி செய்து கொள்ளட்டும். என விட்டுவிடுங்கள். வேறு வழி?
source: www.smooganiithi.org