புற்றுநோயைக் குணப்படுத்திய திராட்சை ஜூஸ்!
Dr.M.A. ஹாரூன், மயிலாடுதுறை
திராட்சை பழச்சாறு மருத்துவ மகிமையைப் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், புற்றுநோயை எதிர்த்து செயல்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
திருமதி. ஜானாபிரண்டிட் என்பவர் ஒருநாள் திடீரென வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். எவ்வளவோ நவீன மருந்துகளை சாப்பிட்டார். ஒன்றும் பலனில்லை. பின்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின், அவருக்கு வயீறில் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து கூறிவிட்டனர்.
டாக்டர்கள் அவரை உடனே அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் சிகிச்சை செய்யச் சொன்னார்கள். இவ்வாறு செய்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேறு நோயாளியைப் பார்த்ததால், மறுத்துவிட்டார்.
பின்பு, நோன்பு மருத்துவம் பற்றி டாக்டர் அப்டன்சின்கிளேர் எழுதிய நூலைப் படித்து, அதன்படி செய்து பார்த்தார். பலன் இல்லை. மீண்டும் 9 வருடங்களுக்குப் பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் புற்றுநோய் கட்டி இரண்டாக வளர்ந்திருந்தது. இந்த முறை டாக்டர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். மீண்டும் ஆபரேஷன் செய்ய மறுத்தார்.
பின்பு அவர் திராட்சை பழச்சாறு மட்டும் அருந்தி நோன்பிருந்து வந்தார். என்ன ஆச்சரியம்! அவருடைஅய வயிற்றில் உள்ள வலி ஒரு வாரத்தில் மறந்தது. 6 வாரத்திற்குள் கட்டிகள் அமுக்கப்பட்டிருந்தது. பின்பு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கட்டிகள் ஏதும் காணப்படாததால் டாக்டர்கள் இதை நம்ப மறுத்தனர். பின்பு நம்பினர்.
பல கேன்ஸர் நோயாளிகளுக்கு இந்த திராட்சை பழச்சாறு வெற்றியளித்தது. இவருடைஅய உண்மை நிகழ்ச்சியை “நோய் தீர்ர்க்கும் திராட்சை” எனும் நூலில் எழுதி வெளியிட்டார். பல பதிப்புகள் வெளிவந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாகிறது.
திராட்சை ஜூஸ் பற்றி மேலும் விபரம் அறிய விரும்புகின்றவர்கள் இந்தியாவில் பூனாவில் உள்ள உருளிகான்ஸான் இயற்கை மருத்துவ மையத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதி வேண்டிய சிகிச்சை பற்றிய தகவலைப் பெறலாம். இங்கு நூற்றுக் கணக்கானவர்களுக்கு திராட்சை பழச்சாறு மருத்துவம் தினமும் அளிக்கப்படுகிறது.
திருக்குர்ஆன் சொன்ன பழச்சாறு மருத்துவத்தை இன்று நோய் தீர்க்க மருத்துவ ரீதியாக நிரூபித்து வருகிறார்கள். நோயை கொடுப்பவனும் இறைவனே, சுகத்தை (ஷிஃப்பத்) அளிப்பவனும் அவனே.
– Dr.M.A.ஹாரூன்
Source: நர்கிஸ் மாத இதழில் (பிப்ரவரி 2012) வெளியான “திருக்குர்ஆன் பழச்சாறு மருத்துவம்” எனும் கட்டுரையின் (பக்கம் 43) ஒரு பகுதி.