Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பள்ளிகளுக்குள் ஏனிந்தப் பழி பாவம்?

Posted on October 10, 2012 by admin

  பள்ளிகளுக்குள் ஏனிந்தப் பழி பாவம்?  

“ஐயா, ரெண்டு கண்ணையும் விட்டுட்டு, இவனை உரிச்சு எடுத்தாலும் நாங்க என்னவென்று கேட்க மாட்டோம்’ என்று கூறி பையனைப்பற்றி ஆசிரியரிடம் கூறிச்சென்ற முந்தைய பெற்றோர்களின் வழிவந்தவர்கள், தற்போது ஆசிரியர் மீது காவல்துறை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அலைகின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

மாணவனின் ஒழுக்கத்தை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கும் பெரும்பங்குண்டு. வீட்டில், பள்ளியில், பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லித் தர வேண்டும். பெரும்பாலான பெற்றோர்களிடம் இப்பழக்கம் காணப்படுவதில்லை.

படிப்பில் பின்தங்கியவனைக் கடுமையாகத் தண்டிப்பது கற்பித்தல் அணுகுமுறையாகாது என்பதை ஆசிரியரும், பிள்ளைகளின் ஒழுக்கக்கேடான செயல்பாடுகளைக் கேள்விப்படும்போது பிள்ளைகளுக்கு அதுபற்றி நெறிப்படுத்தாதது தமது குறையென்று பெற்றோரும் உளமார உணர வேண்டும்.

மாணவனுக்குத் தண்டனை தருவதில் ஆசிரியரும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் பெற்றோரும் காட்டும் அவசரமே இருதரப்பினரையும் பகைவர்களாக்கிவிடுகிறது. இருவரும் உளவியல் நோக்கில் பிள்ளைகளை அணுக வேண்டும்.]

ஆசிரியர் அடித்ததால் மாணவன் காயம் – பெற்றோர் புகார் – ஆசிரியர் கைது’ என்னும் ஆசிரியர் அடித்ததால் மாணவன் காயம் – பெற்றோர் புகார் – ஆசிரியர் கைது’ என்னும் செய்தி நாளிதழ்களில் இடம்பெறும் நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஆசிரியர், மாணவன், கல்வித்துறை ஆகியவற்றின் மும்முனைச் செயல்பாடுகளும் இணைந்துள்ளன.

பள்ளிகளில் ஆசிரியர் தண்டனை தருவது காலகாலமாக உள்ளது. அப்படியிருக்க, தற்காலத்தே ஆசிரியர் மீது என் இப்படிக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன? அடிவாங்கிய மாணவனின் பெற்றோர் கோபங்கொண்டு, உடனடியாகக் காவல்துறை மூலம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? இத்தகைய சூழ்நிலை அரசுப் பள்ளிகளைவிடத் தனியார் பள்ளிகளிலேயே அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் இச்சிக்கலை இயைபுடைய வகையில் மாற்ற, கல்வித்துறை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இம்மூன்று வினாக்களையும் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சில கல்வி நிறுவனங்களில், தாம் கற்பிக்கும் பாடத்தில் தேர்ச்சி விழுக்காடு குறைந்தால், நிர்வாகத்தினரின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் நிலையில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களை ஆசிரியர் தண்டிக்கிறார்.

மெதுவாகக் கற்கும் மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது கற்றலைத் தூண்டுமா, கற்பித்தலில் இது ஒரு அணுகுமுறையா என்பதை ஆசிரியர்கள் உளவியல் நோக்கில் சிந்திக்க வேண்டும்.

சில பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்முறைகளைக் கண்டு, மனம் பொறுக்காத ஆசிரியர்கள் தண்டனை அளிக்கிறார்கள். இவ்வகையில் மாணவனின் குற்றத்தை உற்று நோக்கினால், அவனது வளர்ப்பு நிலை, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் தெரிகின்றன. பள்ளி விழாக்கள் என்றால் மாணவர்கள் “இளம்போதை’யில் பள்ளி வளாகத்திற்குள் உலா வருகின்றனர்.

ஆசிரியர் ஒரு மாணவனைக் கூப்பிட்டபோது, பக்கத்திலிருந்தவன், “போடா, மச்சான் கூப்பிடராறு’ என்று கூப்பிட்ட ஆசிரியரைக் கிண்டலடிக்கிறான். இச்சூழலில் கோபமுற்ற ஆசிரியர் உடனே மாணவனுக்குக் கடுமையான தண்டனையைத் தருகிறார். இது சரிதானா?

மற்றொரு முனையாகிய பெற்றோர்களில் கல்வியார்வம் கொண்டவர்கள், வேலைக்குப் போகிறவர்கள், குழந்தைகளின் கல்வியில் அக்கறை இல்லாதவர்கள், மாணவனுக்குப் பாதுகாப்பாகச் செயல்படுவோர் எனப் பல நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

தனியார் பள்ளிகளிலும் சுயநிதிப் பள்ளிகளிலும் பல்லாயிரக் கணக்கில் பணத்தைச் செலுத்திப் படிக்க வைக்கும்போது, பெற்ற பிள்ளை பிரம்படியோடு வீட்டுக்கு வருவதைப் பார்க்கும் பெற்றோர்களின் கோபம், பள்ளியின் மீதும் தண்டித்த ஆசிரியர் மீதும் பாய்கிறது.

“ஆயிரக்கணக்கில் பணம் கட்டி, உங்கள் பள்ளியில் படிக்க வைத்ததற்கு நீங்கள்தரும் பரிசு இதுதானா?’ என்பதுதான் அவர்கள் நிர்வாகத்தின்முன் வைக்கும் முதல் கேள்வி.

அவர்கள் செலுத்திய பெருந்தொகை, பிள்ளைக்குக் கிடைத்த பிரம்படி இரண்டும்தாம் அவர்களுக்கு நெஞ்சில் நிறைந்திருக்கிறதேயன்றி, தன் பிள்ளை செய்த குற்றத்தின் தன்மையைப்பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.

“ஐயா, ரெண்டு கண்ணையும் விட்டுட்டு, இவனை உரிச்சு எடுத்தாலும் நாங்க என்னவென்று கேட்க மாட்டோம்’ என்று கூறி பையனைப்பற்றி ஆசிரியரிடம் கூறிச்சென்ற முந்தைய பெற்றோர்களின் வழிவந்தவர்கள், தற்போது ஆசிரியர் மீது காவல்துறை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அலைகின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

மாணவன் செய்த குற்றம் எத்தகையதாக இருப்பினும், ஆசிரியர் பிரம்பால் அடிப்பது சில சமயங்களில் எல்லை மீறிப் போய்விடுவது உண்மைதான். மாணவனின் மனநிலை, உடல்நிலை, குடும்பச் சூழல் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ளாத ஆசிரியர்களின் பிரம்படியால் அவன் பெரிதும் பாதிக்கப்படுகிறான்.

சில சமயங்களில் உறுப்புகள் பாதிக்கப்படலாம். அடிப்பதால் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரலாம். தன் எதிரிலிருப்பவன் தன்னை எதிர்த்துத் தாக்க மாட்டான் என்னும் திடமான எண்ணத்தில், ஒருவழிப்போக்காக ஆசிரியர் மாணவனைத் தண்டிப்பதால், அவனுக்குப் பாதிப்புப் பல மடங்காகிவிடுகிறது.

மாணவனது குற்றத்திற்கேற்ப அவனது பெற்றோரை அழைத்துப் பேசுதல், அவனை நன்னெறிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே அவனுக்குக் கடுமையான தண்டனையை ஆசிரியர் கொடுப்பது முறையாகாது. மாணவனால் தான் பாதிக்கக்கப்பட்ட போதும், ஆசிரியர் பகைமை மனப்பான்மையின்றி, அவனை அரவணைத்துச் செல்லும் உயர் பண்பைப் பெற வேண்டும். இது முடியுமா என்ற வினாவிற்கு இங்கிடமில்லை.

“கடிதோச்சி மெல்ல எறிக’ என்று வள்ளுவர் ஆட்சியாளருக்கே அறிவுரை கூறுகிறார். ஆட்சியாளருக்கு அடுத்தபடியாக தண்டித்தலைச் செய்வோர் ஆசிரியரே.

எனவே ஆசிரியர்கள் அறவழிப்பட்ட இக்குறட்பாவின் பொருளுக்கேற்பப் பணியாற்ற வேண்டும்.

இருபதாண்டு காலத்திற்கு முன்பு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஆசிரியர்கள் மீது வந்ததில்லை என்பதை உணர்ந்து, அக்காலத்தைத் திரும்பக் கொண்டு வர வேண்டும். இது ஆசிரியர்களின் கடமை ஆகும்.

ஆசிரியரால் தண்டிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர், அவன் கூறுவதை நேரில் பார்த்ததுபோல நம்பிக்கொண்டு, ஆசிரியர் மீது காவல் துறையில் புகார் செய்கிறார்.

பெற்றோர்கள் காவல் நிலையத்திற்குப் போவதற்கு முன் கல்வி நிலையத்திற்குத்தான் போக வேண்டும். தலைமை ஆசிரியர், தண்டித்த ஆசிரியர், இயலுமாயின் பிற மாணவர்கள் மூலமாக நடந்ததைப்பற்றி உண்மையான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பள்ளியில் இது மாதிரியான சூழலில் தலைமையாசிரியரைச் சந்திக்கச் செல்லும்போதே செய்தியாளர், புகைப்படக்கலைஞர், வழக்குரைஞர் சகிதமாகப் பெற்றோர் சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

தாங்க முடியாத பள்ளிக் கட்டணம், அவ்வப்போது சில்லறை வசூல்கள் செய்யும் பள்ளி நிர்வாகத்தின் மீதுள்ள கோபத்தில் பெற்றோர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி விடுகின்றனர்.

அடித்த ஆசிரியரைப் பெற்றோர் சிறைக்கு அனுப்பிவிட்டால், மற்ற ஆசிரியர்கள் தன் பிள்ளையை எவ்வாறு கவனிப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் நேர்மையாகச் சிந்திக்க வேண்டும். தம் பிள்ளைகள் குறும்பு செய்யும் பருவத்தினர் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

மாணவனின் ஒழுக்கத்தை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கும் பெரும்பங்குண்டு. வீட்டில், பள்ளியில், பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லித் தர வேண்டும். பெரும்பாலான பெற்றோர்களிடம் இப்பழக்கம் காணப்படுவதில்லை. தொலைபேசியில் பிள்ளைகள் பேசுகையில், வெறும் அனத்தல் பதிலின்றி, மரியாதையான சொற்களை அவர்கள் பயன்படுத்தாமற்போவதற்குப் பெற்றோர்களே முழுப்பொறுப்பாவார்கள். பள்ளிகளில் நன்னெறிக் கல்விக்கான பாட வேளைகள் பிற பாடங்கள் கற்பிக்க எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் பெற்றோர்களே நல்ல பண்புகளைக் கற்பிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.

பிள்ளைகளைப்பற்றி பள்ளியில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுகின்ற நேரத்தில், பெற்றோர்கள் தக்க மனநிலை வழிகாட்டுநர்களைக் கொண்டு, உடனடியாகச் செயல்படுவது பிள்ளையின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதாகும்.

விதைக்கின்ற நேரத்தில் சுற்றித் திரிந்துவிட்டு, அறுவடைக்காலத்தில் அரிவாளோடு நிலத்திற்குச் செல்லும் உழவனைப் போலல்லாது, பிள்ளையின் அனைத்து நடவடிக்கைகளைப் பற்றி மாதம் ஒரு முறையாவது அவனது வகுப்பாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமை. அவர்களே பிள்ளையின் முழு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் ஆவர்.

மாணவனுக்குத் தண்டனை தருவதில் ஆசிரியரும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் பெற்றோரும் காட்டும் அவசரமே இருதரப்பினரையும் பகைவர்களாக்கிவிடுகிறது. இருவரும் உளவியல் நோக்கில் பிள்ளைகளை அணுக வேண்டும்.

படிப்பில் பின்தங்கியவனைக் கடுமையாகத் தண்டிப்பது கற்பித்தல் அணுகுமுறையாகாது என்பதை ஆசிரியரும், பிள்ளைகளின் ஒழுக்கக்கேடான செயல்பாடுகளைக் கேள்விப்படும்போது பிள்ளைகளுக்கு அதுபற்றி நெறிப்படுத்தாதது தமது குறையென்று பெற்றோரும் உளமார உணர வேண்டும்.

“இளைதாக முள் மரம் கொல்க’ என்னும் வள்ளுவர் காட்டும் வழியை விட்டுவிட்டு வலியவர் எளியவர் என்பதை நிலைநாட்டும் சண்டையில் இறங்குவது மாணவனின் கல்வியை முற்றிலுமாக முடக்கிவிடும். கல்வித்துறை, தன்னிடத்தில் பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் எனும் மெத்தனப் போக்கில் இருத்தல் தகாது. பேருந்து ஓட்டையில் பிள்ளை விழுந்து சாவது, கூரை தீப்பிடித்துக் குழந்தை கருகுவது, தண்ணீர்த் தொட்டியில் விழுந்து மரணமடைவது போன்ற கொடுஞ்செயல்கள் நடந்துமுடிந்த பின்னர், ஆய்வுக்கு அலுவலர்களை அனுப்பும் போக்கைக் கல்வித்துறை கைவிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் பிரச்னைகளுக்கு முடிவெடுக்க வேண்டும்.

பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களையும் நன்னெறிப் பாடங்கற்பித்தலையும் உயிர்ப்பிக்க வேண்டும். பள்ளிகளுக்குச் சுற்றறிக்கைகளை அனுப்பிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று எண்ணாமல், அதன் பின் விளைவுகள் பள்ளி வளாகத்தில் எப்படியுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

கல்வி என்பது குழந்தையின் முழுமையான ஆளுமை வளர்ச்சியாகும். அதனை உருவாக்குவதில் ஆசிரியர், பெற்றோர், கல்வித்துறையினர் என முத்தரப்பினரும் பரந்த மனத்தோடும் விவேகத்தோடும் பொறுப்போடும் செயல்பட்டால் கல்விக் கூடங்கள் கவின்சோலைகளாய் மலர்வது திண்ணம்.

-தமிழ்ப்பெரியசாமி

நன்றி: தினமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 23 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb