வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா?
[ போராட்டத்திற்கு ஆண்களையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு வருவதை விமர்சனம் செய்யும் இந்த கண்ணியவான்கள்(?) யாரும் பெண்கள் ஆண்களுடன் சகஜமாக பழகும் அல்லது கலந்து கொள்ளும் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை. செய்வதற்கு அவர்களுக்கு துப்பும் இல்லை.
இஸ்லாமிய பெண்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் “கெசினோ”க்களில் சென்று கும்மாலமிடுகிறார்கள். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் பார்ப்பதற்கு ஆண்கள், பெண்கள் என்று இஸ்லாமியர்களும் அணி சேர்கிறார்கள். கடைத் தெருக்களில் சர்வ சாதாரணமாக பெண்கள் நடமாடுகின்றார்கள். மெயின் பஜார்களில் பெண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இவைகளைப் பற்றியெல்லாம் வாய் திறப்பதற்கு இந்த உஷார் மடையர்களினால் முடியாதாம். நபியவர்களை கேவலப்படுத்தியவனை கண்டித்து களத்தில் இறங்கும் இஸ்லாமிய தாய்மார் பற்றி மாத்திரம் தான் இவர்களுக்கு அக்கரை வருகின்றதாம்.
யாரெல்லாம் பெண்களை அழைத்துக் கொண்டு போராட்டக் களத்திற்கு வருவதைத் தடையென்கிறார்களோ அவர்கள் தமது மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத் தலங்களுக்கோ செல்வார்களா? இல்லையா? செல்வார் என்றால் தனது மனைவியைப் பலருக்கும் காட்சிப் பொருளாகக் காட்டலாமா? என்ற கேள்வி இந்த கேள்வி கேட்பவர்களை நோக்கியே திரும்பும்.
கேள்வி கேட்பதில் ஜாம்பவானாக இருக்கும் இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிப்பார்களா? இல்லையா? அனுமதிப்பார்கள் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலை ஏற்படாதா? இதே கேள்வியைத் தங்களுக்கெதிராக இவர்கள் கேட்டுக் கொள்ளட்டும்.
இஸ்லாமிய உம்மா பாதிக்கப்படும் போது நாம் வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் ஒரு போதும் தடை செய்யவில்லை. மாறாக அதற்கு அனுமதியளித்துள்ளது. “ஜனநாயகம் நவீன இணைவைத்தலா?” என்ற ஆய்வுக் கட்டுரையில் இது தொடர்பான விரிவான விளக்கம் அறிந்துகொள்ளலாம்.]
வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா?
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகிய தீர்வு சொல்லும் மார்க்கமாக அன்று தொட்டு இன்று வரை இவ்வுலகில் நிலைத்திருப்பது இஸ்லாமிய மார்க்கத்தின் தூய கொள்கைகள் மாத்திரமே.
இம்மார்க்கத்தை ஏற்று வழி நடக்கும் நாம் அதன் அனைத்துக் கொள்கைகளையும் தெளிவாகவும், முறையாகவும் விளங்கிச் செயல்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தமட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் நடத்துவதையும், ஜனநாயகத்தையும் இஸ்லாம் என்றும் தடுக்கவில்லை. நமது சமுதாயம் மற்றவர்களினால் பாதிப்புக்குள்ளாக்கப்படும் போது அதற்கு எதிராக போராட்டக் களத்தில் குதிப்பதை இஸ்லாம் என்றும் தடுத்ததில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நபியவர்களை கேவலப்படுத்துவம் விதமாக “முஸ்லீம்களின் அப்பாவித்தனம்” என்ற பெயரில் அமெரிக்காவில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுபவரைப் போலவும், கழுதை என்றும், முதல் மனித மிருகம் என்றும், நபியவர்கள் ஓரினப் புனர்ச்சியில் ஈடுபடுபவர் போன்றும் அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட படத்தை இணையதளத்தில் இருந்து நீக்கும் படியும், படத்தை தயாரித்த அயோக்கியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும் பல இடங்களில் மாபெரும் ஆர்பாட்டப் பேரணி ஒன்று நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட செய்தி அதே நாள் அனைத்து ஒலி, ஒளி ஊடகங்களிலும், அடுத்த நாள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாக இடம் பிடித்ததும் முஸ்லீம்கள் அறியாத ஒன்றல்ல.
நபியவர்கள் மீது கலங்கம் சுமத்திய கயவர்களுக்கு எதிராக களம் கண்ட வேலை ஆண்களும், பெண்களுமாக பெருந்திரலான மக்கள் நாடு முழுவதிலும் இருந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டு நபியவர்கள் மீது தங்களுக்கு இருக்கும் அளவற்ற அன்பை வெளிப்படுத்தினார்கள்.
வீதியில் இறங்கிப் போராடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா?
தங்கள் கண்களில் எண்ணையை தேய்த்துக் கொண்டு அலையும் ஒரு கூட்டத்தார் இப்போராட்டத்தைப் பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் விமர்சனம் செய்து வருகின்றார்கள். இவர்கள் எப்படி ஆண்கள், பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வீதியில் இருந்து போராட்டம் நடத்துவார்கள்? இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் காட்டுவார்களா? அவர்கள் செய்யும் விமர்சனத்தின் முக்கிய சாரம் இதுதான்.
போராட்டம் நடத்துவதற்கு மார்க்கதில் ஆதாரம் கேட்கும் இவர்களின் இந்த வறட்டு வாதத்திற்கு பதில் சொல்வதற்கு முன்பதாக ஒரு விஷயத்தை இங்கு நினைவுக்கு கொண்டு வருகின்றோம்.
அதாவது போராட்டத்திற்கு ஆண்களையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு வருவதை விமர்சனம் செய்யும் இந்த கண்ணியவான்கள்(?) யாரும் பெண்கள் ஆண்களுடன் சகஜமாக பழகும் அல்லது கலந்து கொள்ளும் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை. செய்வதற்கு அவர்களுக்கு துப்பும் இல்லை.
இஸ்லாமிய பெண்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் “கெசினோ”க்களில் சென்று கும்மாலமிடுகிறார்கள். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் பார்ப்பதற்கு ஆண்கள், பெண்கள் என்று இஸ்லாமியர்களும் அணி சேர்கிறார்கள். கடைத் தெருக்களில் சர்வ சாதாரணமாக பெண்கள் நடமாடுகின்றார்கள். மெயின் பஜார்களில் பெண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இவைகளைப் பற்றியெல்லாம் வாய் திறப்பதற்கு இந்த உஷார் மடையர்களினால் முடியாதாம். நபியவர்களை கேவலப்படுத்தியவனை கண்டித்து களத்தில் இறங்கும் இஸ்லாமிய தாய்மார் பற்றி மாத்திரம் தான் இவர்களுக்கு அக்கரை வருகின்றதாம்.
இஸ்லாமிய உம்மா பாதிக்கப்படும் போது நாம் வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் ஒரு போதும் தடை செய்யவில்லை. மாறாக அதற்கு அனுமதியளித்துள்ளது. “ஜனநாயகம் நவீன இணைவைத்தலா?” என்ற ஆய்வுக் கட்டுரையில் இது தொடர்பான விரிவான விளக்கம் அறிந்துகொள்ளலாம்.
பெண்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளலாமா?
பெண்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதைப் பற்றி இஸ்லாமிய மார்க்கம் தெளிவான அனுமதியை தருகின்றது. பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம் கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபி வழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
பெரு நாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இடுகிறது.
உம்மு அத்திய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்துகொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்துகொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக்கொடுக்கட்டும்! என்றார்கள். (ஆதாரம் : புகாரி 351)
இவர்களின் வாதப்படி பெண்களை போராட்டத்திற்கு அழைத்துக் கொண்டுவருவது பெண்களை காட்சிப் பொருளாக்குவது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களை காட்சிக்கு வைத்தார்கள் என்று ஆகுமே? அதுவும் பெருநாள் தினத்தில் புத்தாடை எல்லாம் அணிந்திருப்பார்களே? என்றெல்லாம் இவர்கள் கேட்பார்கள் போல.
ஆண்கள் இருக்கும் இடத்திற்கு பெண்கள் அழைத்து வருவதுதான் இவர்களின் பிரச்சினை. ஆனால் நபியவர்களின் காலத்தில் ஐந்து வேளைத் தொழுகையிலும் பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை. என்பதை ஹதீஸ்களின் மூலம் நாம் தெளிவாக அறிய முடிகின்றது.
நபியவர்களின் காலத்தில் தொழுகைக்கு வந்த ஆண்களும், பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும் தலையைத் திறக்கும் நிலையும் ஏற்படும். நபியின் காலத்தில் இப்படி நடந்ததினால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள். (புகாரி 193)
போர்க்களத்திலும் பெண்கள் :
நபியவர்களின் காலத்தில் போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டார்கள் காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உதவுதல் என்று வரும் போது ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் ஏற்படும் என்பது இங்கு கவணிக்கத்தக்கது.
ஹஃப்ஸா பின்த் சீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா ரளியல்லாஹு அன்ஹா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.
-என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா ரளியல்லாஹு அன்ஹா) அவர்களின் கணவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.-
என் சகோதரி (உம்மு அத்திய்யாரளியல்லாஹு அன்ஹா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.
ஹஃப்ஸா பின்த் சீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அத்திய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் (என்னிடம்) வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.
-நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்- வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.
(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
சபைகளில் கேள்வி கேட்பதற்காக பெண்கள் வந்து நபிகள் நாயகத்திடம் கேள்வியும் கேட்டனர். அதைப் பல ஆண்களும் பார்த்துள்ளனர். (புகாரி 324, 351, 979, 1250, 1953)
ஹஜ் பயணத்தின் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: (விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்-ன் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அப்போது அப்பெண், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள். (புகாரி 6228)
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.
யாரெல்லாம் பெண்களை அழைத்துக் கொண்டு போராட்டக் களத்திற்கு வருவதைத் தடையென்கிறார்களோ அவர்கள் தமது மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத் தலங்களுக்கோ செல்வார்களா? இல்லையா? செல்வார் என்றால் தனது மனைவியைப் பலருக்கும் காட்சிப் பொருளாகக் காட்டலாமா? என்ற கேள்வி இந்த கேள்வி கேட்பவர்களை நோக்கியே திரும்பும்.
கேள்வி கேட்பதில் ஜாம்பவானாக இருக்கும் இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிப்பார்களா? இல்லையா? அனுமதிப்பார்கள் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலை ஏற்படாதா? இதே கேள்வியைத் தங்களுக்கெதிராக இவர்கள் கேட்டுக் கொள்ளட்டும்.
இவர்களின் குடும்பத்துப் பெண்கள் முறையாக ஆடை அணிந்து பள்ளிக் கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்வார்களா? இல்லையா? செல்வார்கள் என்றால் பலரது பார்வையில் படுவார்களா? இல்லையா? மேற்கண்ட அதே கேள்வியைத் தனக்குத் தானே இவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். பெரிய கூட்டங்களில் பெண்கள் மீது படும் பார்வையை விட ஓரிரு பெண்கள் மீது பார்வை கூர்மையாகப் படுமே அது பரவாயில்லையா?
மார்க்க அடிப்படையில் ஒன்றைக் கூடாது என்ற கருத்தை விதைப்பவர் அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் தான் தனது கருத்தை முன் வைக்க வேண்டும். நாம் ஆதாரத்தை முன் வைத்து விட்டோம். வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது கூடாது என்பவர்கள் தங்கள் கருத்தில் நியாயவான்களாக இருந்தால் ஆதாரத்துடன் அவற்றை முன்வைக்கட்டும்.
குறிப்பு : இந்த ஆக்கத்திற்கு சகோதரர் பீ.ஜெ யின் தளத்தில் இருந்தும் சில பகுதி இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
source: www.rasminmisc.com