ஆ.மு. ரசூல் முஹ்யித்தீன்
[ வருமானம் தேடுவதில் காட்டும் சிரத்தையை தர்மம் வழங்குவதிலும் காண்பிக்கலாம். இல்லையேல் ஹராம் ஜாதாக்களிடம் ஜக்காத் சென்று படியும். சமூக விரோத நடைமுறை வெளிப்படும்.
சமுதாயத்தில் குழப்பம், பிரிவினை, தான் தோன்றித்தனம், கட்டுப்பாடின்மை பன்மடங்கு பெருகும். ஒரு மதவாதி இன்னொரு மதவாதியின் கழுத்தை அறுப்பார்.
ஒரு மத நிறுவனம் இன்னொரு மத நிறுவனத்தை சந்திக்கு இழுக்கும். வம்பு பண்ணும். வீராவேசம் பேசும். இன்று நடைமுறையில் உள்ள முஸ்லிம் பொதுநல அமைப்புகள், தனி நபர் நிர்வாகிகளை உன்னிப்பாக பார்த்தால் புரியும். நீண்ட கால வறுமை ஒழிப்பு தொலைநோக்கு திட்டம் எதுவுமில்லை.
ஆடம்பரவாதிகள், ஆர்ப்பாட்டவாதிகள், ஆதிக்க வாதிகள் சமூக தலைமை போர்வையில் நிதியுதவிக்கு அலைவது அன்றாட காட்சி. புரவலர்கள் பணம் தருவதை விட நேரில் சென்று திடீர் விசிட் செய்து பார்வையிட்டு தர்ம பரிபாலன நிறுவன திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்கலாம்.
மத காரியம், தர்ம பரிபாலன யோக்யதையை நேரில் சென்று ஆய்வு செய்வீர். இல்லையேல் பணம் பாழாகும். சமூகத்தை பாழாக்கும்.]
ஜக்காத், ஃபித்ரா, ஹதியா நிதியுதவி ஏழைக்கு சென்று சேரவேண்டும். இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.
மதவாதிகள், மத நிறுவனங்கள் முழு மூச்சுடன் வருமான வசூல் கவனத்தில் ஒரு புனித மாதத்தை செலவிடுகின்றனர்.
நிதியுதவி வழங்குவோர் தமது தாழ்வாரத்துக்கு, வாசலுக்கு தேவையுள்ளோரை வரவழைக்கக் கூடாது.
பொது நிறுவனம், பிரச்சார வளாகம் நடத்த திட்டமிட்ட முன் தயாரிப்பு நிதி ஆலோசனை தேவை.
500 ரூபாய், 1000 ரூபாய் பிச்சை வசூலில் இன்றுள்ள விலைவாசி சூழலில் மத நிறுவனத்தை நடத்த முடியாது. போலித்தனம், பொய்மை தொடர்ந்து அரங்கேறுகிறது. ஹராம் வருமானம் ஹராம் செலவை தேடும். தஞ்சமடையும்.
நேர்மையாளர், சேவையாளர், தொண்டுள்ளம் படைத்தோர், சுயமரியாதைமிக்கோர் பிறரின் வாசலில் சென்று யாசகம் கோரமாட்டார். கண்ணியமான வாழ்வு வாழ நினைக்கும் மூஃமின் மனிதர்களிடம் கையேந்த, முன் வருவதில்லை.
துணிந்து பிச்சையெடுப்போரை உற்சாகப்படுத்த புனித ரமலான் மாதத்தை பயன்படுத்தக் கூடாது.
வருமானம் ஈட்டுவது எளிது. உபரி வருமானம் மிக இயல்பானது. ஆனால் தேவையுள்ளோரை இன்றைய நாட்களில் கூர்மையாக, சரியாக இனம் காண்பது கடினம். மகாசிரமம்.
வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் தகுதியானவர்களிடம் சென்று சேர வேண்டும். இதற்கு புரவலர்களின் தயாள சிந்தை மட்டும் போதாது. கடும் பிரயாசை, பரிசீலனை, ஆய்வு, உழைப்பு தேவை.
வருமானம் தேடுவதில் காட்டும் சிரத்தையை தர்மம் வழங்குவதிலும் காண்பிக்கலாம். இல்லையேல் ஹராம் ஜாதாக்களிடம் ஜக்காத் சென்று படியும். சமூக விரோத நடைமுறை வெளிப்படும்.
சமுதாயத்தில் குழப்பம், பிரிவினை, தான் தோன்றித்தனம், கட்டுப்பாடின்மை பன்மடங்கு பெருகும். ஒரு மதவாதி இன்னொரு மதவாதியின் கழுத்தை அறுப்பார்.
ஒரு மத நிறுவனம் இன்னொரு மத நிறுவனத்தை சந்திக்கு இழுக்கும். வம்பு பண்ணும். வீராவேசம் பேசும். இன்று நடைமுறையில் உள்ள முஸ்லிம் பொதுநல அமைப்புகள், தனி நபர் நிர்வாகிகளை உன்னிப்பாக பார்த்தால் புரியும்.
நீண்ட கால வறுமை ஒழிப்பு தொலைநோக்கு திட்டம் எதுவுமில்லை. தொலைக்காட்சி ஊதாரித்தனம், பாமரத்தனம், வெகுளித்தனம் நிரம்பி வழிவது புலனாகிறது.
ஆடம்பரவாதிகள், ஆர்ப்பாட்டவாதிகள், ஆதிக்க வாதிகள் சமூக தலைமை போர்வையில் நிதியுதவிக்கு அலைவது அன்றாட காட்சி. புரவலர்கள் பணம் தருவதை விட நேரில் சென்று திடீர் விசிட் செய்து பார்வையிட்டு தர்ம பரிபாலன நிறுவன திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்கலாம்.
தங்க நகை மோகம் ஏழை, நடுத்தரவாதி, பணக்காரன் மூவரையும் ஆட்டிப்படைக்கிறது. இன்றைய குழப்ப மிகு நாட்களில், மீண்டும் புனித நிதியளித்து நரகவாயிலை புரவலர்கள் தேட வேண்டாம்.
மத காரியம், தர்ம பரிபாலன யோக்யதையை நேரில் சென்று ஆய்வு செய்வீர். இல்லையேல் பணம் பாழாகும். சமூகத்தை பாழாக்கும்.
– ஆ.மு. ரசூல் முஹ்யித்தீன் (முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2012)