கட்டுப்பாடுகளும், விடுதலைகளும்…! (1)
[அறிவிற்கும், பேச்சிற்கும் உள்ள தொடர்பை நாம் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்கு அறிவு வளர்ச்சி குறைந்து இருக்கிறதோ அந்த அளவிற்குப் பேச்சு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு சூட்சும சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் என்ன பேசுகின்றோமோ அது நிஜமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் அடுத்தவரைப் பற்றி நாம் தவறாகப் பேசினால் அது பலிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தகைய அபாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது.
கோபம், எரிச்சல், பொறாமை, வன்முறை, கிண்டல், கேலி, ஆபாசம் போன்ற நெகடிவ்வான உணர்வுகள் எவையுமே நம்முடைய பேச்சில் வெளிப்படக் கூடாது. இதனால் வருகின்ற தகராறு மட்டும் தவறு என்றில்லை, நம்முடைய பேச்சால் இந்த உணர்வுகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கும்பொழுது அடுத்தவர்கள் மனநிலையும் தெரிகிறது. அதன் விளைவாகச் சூழலும் கெடுகிறது. சூழல் கெடுவதற்கு நாம் காரணமாக ஒரு பொழுதும் இருக்கக்கூடாது.]
கட்டுப்பாடுகளும், விடுதலைகளும்…! (1)
படைப்பில் முதன்முதலாகப் பேச்சைக் கையாள்கின்ற ஜீவராசி மனிதன்தான். தன்னுடைய இந்த விசேஷத் திறமை பற்றி மனிதனுக்குத் தற்பெருமையும் உண்டு. இந்தப் பெருமையின் காரணமாகவே மனிதனும் இந்த விசேஷத் திறமையை விவேகம் இல்லாமலும், ஒரு வரையறை இல்லாமலும் பயன்படுத்துகிறான்.
பொதுவாகப் பேச்சைக் குறைப்பது என்றால் பூரண மௌனத்திற்குப் போய்விடுவார்கள். ஆனால் உண்மையில் பூரண மௌனத்தைவிட அளவான பேச்சு என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுதான் உண்மையில் சிரமமான காரியம். சிரமமாக இருந்தாலும் அதற்கேற்ற பலனையும் நாம் பார்க்கலாம்.
படைப்பில் முதன்முதலாகப் பேச்சைக் கையாள்கின்ற ஜீவராசி மனிதன்தான். தன்னுடைய இந்த விசேஷத் திறமை பற்றி மனிதனுக்குத் தற்பெருமையும் உண்டு. இந்தப் பெருமையின் காரணமாகவே மனிதனும் இந்த விசேஷத் திறமையை விவேகம் இல்லாமலும், ஒரு வரையறை இல்லாமலும் பயன்படுத்துகிறான்.
தேவையில்லாத பேச்சு இப்படி அதிகரிக்கும்போது இதற்கு எதிர்மாறாக இருக்கின்ற இந்தத் தாவர இனங்களின் அமைதியை நாம் இழந்துவிட்டோமே என்று ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.
அறிவிற்கும், பேச்சிற்கும் உள்ள தொடர்பை நாம் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்கு அறிவு வளர்ச்சி குறைந்து இருக்கிறதோ அந்த அளவிற்குப் பேச்சு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
படிப்பறிவு இல்லாத மக்களைக் கவனித்தால் ஓர் உண்மை தெரியவரும். அதாவது எழுத்தறிவு இல்லாதவர்களுக்குக் காதால் கேட்டுக் கொள்கின்ற விஷயங்களைத் திரும்பி வாயால் சொல்லிக் கொண்டால்தான் அவர்களுக்கு மனதில் படும். படிக்காத வேலைக்காரியிடம் எஜமானி அம்மா, கடைக்குப் போய் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு டஜன் முட்டை, அரை டஜன் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வா, அப்படியே திரும்பி வருகிற வழியில் பேப்பர் கடைக்குச் சென்று குமுதம் வாங்கி வா, குமுதம் இல்லை என்றால் தேவி வாங்கி வா என்று சொன்னால் இதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு கடைக்குப் போக மாட்டார்கள்.
படித்த பெண்ணாக இருந்தால் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு உடனே கிளம்பிவிடுவாள். படிக்காத பெண்ணாக இருந்தால் எஜமானி அம்மா சொன்னதை தானே வாய்விட்டு தனக்குச் சொல்க் கொள்வாள். அதாவது வாய்விட்டு பேசும்போதுதான் அவர்களுக்குச் சிந்திக்கவே முடிகிறது. எண்ணமே உருவாகிறது. இல்லாவிட்டால் அவர்களுக்கு எண்ணமோ, சிந்தனையோ உருவாவதில்லை.
படித்தவர்களை எடுத்துக் கொண்டால்கூட ஒரு கருத்தை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளும்போது அப்படியே அவர்களுக்குப் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. தான் படித்த விஷயத்தை மற்றவர்களிடம் விளக்கிப் பேசினால்தான் அவர்கள் படித்தது அவர்களுக்கே தெளிவாகப் புரியும்.
நாலாவது தடவைதான் அவர்களுக்கே புரிகிறது என்னும்போது முதல், இரண்டு, மூன்று தடவைகள் அவர்கள் பேச்சே ஒரு வரையறை இல்லாமல் தெளிவில்லாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவில் தெளிவு பிறக்க வேண்டும் என்றால் கேள்விப்பட்டதைப் பல தடவைகள் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாகிறது. இந்நிலை அறிவு வளர்ச்சி சராசரி நிலையில் இருக்கிறதைக் காட்டுகிறது.
இப்படிப்பட்டவர்களைத் திடீரென்று மேடைக்கு அழைத்து, பேசும்படிச் சொன்னால் சரளமாகப் பேசமுடியாது. முன்னேற்பாடுகள் செய்து கொள்ள இவர்களுக்குக் கால அவகாசம் வேண்டும். அப்பொழுதுதான் எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது, எந்த அளவிற்குப் பேசுவது என்றெல்லாம் அவர்களால் நினைத்துப் பார்த்துத் தயார் செய்து கொள்ள முடியும். இவர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதாவது பேச்சு வன்மை உச்சகட்டத்தில் இருப்பதால் திடீரென்று அழைத்துப் பேசச் சொன்னாலும் சரளமாகப் பேசுவார்கள்.
ஆனால் பேச்சுக் கட்டுப்பாடு என்று எடுத்துக் கொண்டால் சிறந்த பேச்சாளருடைய பேச்சுகூட அனாவசியப் பேச்சு என்றாகிவிடலாம். தேவையில்லாத பேச்சு எதுவாக இருந்தாலும் அது அனாவசியப் பேச்சுதான். எது அவசியப் பேச்சு, எது அனாவசியப் பேச்சு என்று நிர்ணயிக்க வேண்டும் என்றால் முதலில் எத்தனை வகையான பேச்சு இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
முதல் வகைப் பேச்சு நம்முடைய அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை விஷயமாக மற்றவர்களுடன் நாம் பேசும் பேச்சு. இவ்வகைப் பேச்சுதான் நமக்கு அதிகபட்சமாக இருக்கிறது. அதே சமயத்தில் உபயோககரமாகவும் இருக்கிறது.
இந்தப் பேச்சையே எடுத்துக் கொண்டால்கூட நிறைய பேசித்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நாம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம். அதாவது பேச்சைக் குறைந்தபட்சத்திற்குக் கொண்டு வந்தால் இதே அளவு வேலை இன்னும் விரைவாக நடந்து முடிகிறது என்பதைப் பார்க்கலாம். அதாவது பேச்சு குறைந்து அமைதியும் concentration-உம் அதிகரிக்கும்பொழுது வேலை விரைவு பெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தில் ஒருவராக நாம் வாழ்கிறோம் என்றால், அவரவர்களுடைய அன்றாடச் செயல்களில் ஒரு ரெகுலாரிட்டி இருக்கும். அப்பட்சத்தில் ஆட்டமேட்டிக்காக நடக்கின்ற விஷயங்களை நாம் தினமும் பேச வேண்டிய அவசியம் இல்லை. காலையில் எழுந்தவுடன் குடும்பத் தலைவருக்கு டீ, காப்பி சர்வ் பண்ணுவது, பின்னர் காலை டிபன் கொடுப்பது என்பது அந்த வீட்டுத் தலைவி தானாகவே செய்வது. ஆகவே காபி வேண்டும், டிபன் வேண்டும் என்று இவர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
மாலையில் அவரவர் வீடு திரும்பும்பொழுது இன்று அலுவலகத்தில் என்ன நடந்தது, பள்ளியில் என்ன நடந்தது என்றும், வீட்டில் என்ன நடந்தது என்றும் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ரெகுலராக இருக்கிறது என்றால் அதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களே தாமாகச் சொல்வார்கள். சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்கள் என்றால் அதை நாம் கவனித்து, ஏனின்று மௌனமாக இருக்கிறீர்கள்? office-இல் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாதா? என்று கேட்கலாம். மற்றபடி எல்லாம் ரெகுலராக போய்க் கொண்டு இருந்தால் வழக்கமான கேள்விகள் தேவையே இல்லை.
அடுத்ததாக நமக்குத் தெரிந்தவர்களுடன் நாம் சோஷியலாக உறவாடுகிறோம். நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, உறவினர்களைப் பார்க்கப் போவது, மற்றும் சோஷியல் function-க்குப் போவது என்பது எல்லாம் இதில் அடங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்முடைய பேச்சு என்பது நம்முடைய feelings-ஐ வெளிப்படுத்துவதாக அமைகிறது. இங்கேயும் பேச்சுக் கட்டுப்பாடு என்பது மிகவும் உதவியாக இருக்கும்.
நம் பேச்சுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுது நமக்குள் ஓர் உணர்ச்சி பொங்கி எழுந்தால், இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தலாமா? வேண்டாமா? என்று சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கும். இந்த அவகாசத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொண்டால் எத்தனையோ தேவையில்லாத தகராறுகளையும், சண்டைகளையும் நாம் தவிர்க்கலாம். நம்மைப் பற்றி உதாரணமாக நமக்கு நெருங்கிய நண்பரே தவறாகப் பேசுகிறார் என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது. உடனே நமக்குக் கோபம் பொங்கி எழுகிறது. அவரைப் பார்த்தவுடன் எப்படி இப்படி நீங்கள் பேசலாம் என்று கேட்டுவிட மனம் துடிக்கிறது. உடனே போனை எடுத்து நம்பரை டயல் செய்து நண்பரை வசை பாடுவது என்பது ஒரு சாதாரணச் செயல்.
ஆனால் பேச்சுக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு இருப்பவர் இதைச் செய்வது சரியாகாது, மாறாகக் கோபம் பொங்கி எழுந்தாலும் பரவாயில்லை, இந்தக் கோபத்திலிருந்து முதலில் விடுபட்டு அன்பர் மன அமைதிக்கு வரவேண்டும். பின்னர் நிதானமாக மூன்றாவது நபர் கொடுத்த தகவல் உண்மையாக இருக்குமா? நண்பர் அப்படிப்பட்டவர்தானா? அல்லது மூன்றாவது மனிதர் விஷமியா? இருவரையும் பிரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். சொன்னவர் விஷமி என்றால் நண்பர்மேல் உள்ள நம்பிக்கையை மதித்து அவரிடம் நம் கோபத்தை காட்டாமல் விஷமியிடம் இருந்து நாம் விலக வேண்டும்.
சொன்னவர் நம்மிடம் நல்லெண்ணம் கொண்டவர்தான், நாம்தான் நண்பரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தால் நண்பரிடம் இருந்து விலகுவது என்று முடிவு செய்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும். ஆக எப்படிப் போனாலும் அன்னை நம்மிடம் எதிர்பார்ப்பது அமைதியான செயல்பாடே தவிர உணர்ச்சிகளை வார்த்தைகளால் கொட்டி ஆவேசப்படுவது இல்லை.
கோபம், எரிச்சல், பொறாமை, வன்முறை, கிண்டல், கேலி, ஆபாசம் போன்ற நெகடிவ்வான உணர்வுகள் எவையுமே நம்முடைய பேச்சில் வெளிப்படக் கூடாது. இதனால் வருகின்ற தகராறு மட்டும் தவறு என்றில்லை, நம்முடைய பேச்சால் இந்த உணர்வுகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கும்பொழுது அடுத்தவர்கள் மனநிலையும் தெரிகிறது. அதன் விளைவாகச் சூழலும் கெடுகிறது. சூழல் கெடுவதற்கு நாம் காரணமாக ஒரு பொழுதும் இருக்கக்கூடாது.
அனாவசியப் பேச்சு என்று எடுத்துக் கொள்ளும்பொழுது அடுத்தவர்களை நாம் விமர்சனம் செய்யும் எந்த பேச்சையும் நாம் இங்குக் கருத வேண்டும். நம்முடைய பொறுப்பில் இருக்கின்றவர்களைப் பற்றித்தான் பேச நமக்கு உரிமை இருக்கிறதே தவிர நம்முடைய பொறுப்பில் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி விமர்சனம் செய்ய நமக்கு உரிமையில்லை.
நம் வீட்டுப் பையன் சரியாகப் படிக்காமல் வீணாகப் பொழுதைக் கழிக்கிறான் என்றால் அவனைக் கண்டித்துப் பேச நமக்கு உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து வீட்டுப் பையன் படிக்காமல் ஊர் சுற்றுகிறான் என்றால் நம் வீட்டில் அமர்ந்துகொண்டு அவனைக் கிண்டல் செய்து பேசுவது நமக்கு சரியில்லை. அவனைக் கண்டிப்பது அவன் தகப்பனாரின் பொறுப்பு. நம்முடைய கிண்டல் அவனுக்கும் உதவாது, அதே சமயத்தில் நம்முடைய பேச்சு கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதால் இந்தக் கிண்டல் நம் consciousness லெவலையும் இறக்குகிறது.
நாம் ஓர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் நம்முடைய வேலையே எங்கே என்ன வேலை நடக்கிறது என்று ரிப்போர்ட் செய்யக்கூடிய வேலையாக இருக்கலாம். இப்படிப்பட்ட பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டால் அதை நாம் மிக ஜாக்கிரதையாக நிறைவேற்ற வேண்டும். அதாவது நம்முடைய ரிப்போர்ட் வேலையை ஒட்டித்தான் இருக்கவேண்டுமே தவிர பர்சனல் விஷயங்கள் எல்லாம் அதில் வரக்கூடாது.இரண்டாவதாக ரிப்போர்ட் என்பது பாரபட்சமின்றி ஒரு நடுநிலைமையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைய வேண்டும். அதாவது நம்முடைய விருப்பு வெறுப்புகள், தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அதில் தலையிடக்கூடாது. நம்முடைய இன்ஸ்பெக்ஷனுக்கு ஆளாகி இருக்கின்ற ஒருவர் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாகச் செய்பவராக இருக்கலாம்.
ஆனால் அவரிடம் நமக்கு வேண்டியவருக்கு வேலை போட்டுத் தரும்படிச் சொல்ல அவரை அணுகியபோது அவர் அதை மறுத்திருக்கலாம். இதன் காரணமாக நமக்கு வந்த பொறுப்பை வைத்து அவர் டிபார்ட்மெண்டில் வேலை சரியாக நடக்கவில்லை என்று நாம் எழுதுவது சரியில்லை. இறுதியில் பொதுவாக என்ன சொல்லலாம் என்றால் அடுத்தவரைப் பற்றி நாம் பேசுவதை எந்த அளவிற்குக் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அது நல்லது என்றாகிறது. அதாவது எவரைப் பற்றியும் முடிவான அபிப்பிராயத்தை அடித்துச் சொல்வது சரியில்லை.
நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு சூட்சும சக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் என்ன பேசுகின்றோமோ அது நிஜமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் அடுத்தவரைப் பற்றி நாம் தவறாகப் பேசினால் அது பலிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தகைய அபாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது.
கட்டுரையின் தொடர்ச்சிகு “next” ஐ “கிளிக்” செய்யவும்