கட்டுப்பாடுகளும், விடுதலைகளும்…! (2)
[ காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது.
காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் மாற்றம் செய்ய முடியும். தெய்வீக அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப் போய்விடும்.
ஐக்கிய பேரின்பமே அன்பு என்று சொல்லலாம். அன்பின் ஆதியை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஐக்கியத்திற்கு உதவக் கூடிய இரண்டு இயக்கங்கள் (movement) அதில் இருப்பதைப் பார்க்கலாம். ஒரு movement, அடுத்தவரை நாடுகிற நாட்டமாக அமைகிறது. இன்னொரு movement தன்னைப் பிறருக்கு வழங்கும் self-giving movement ஆக அமைகிறது. படைப்பில் ஜீவியம் அதன் ஆதியிலிருந்து பிரிந்து unconscious ஆக மாறியபோது ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கு அன்பைத் தவிர வேறு சிறந்த கருவியில்லை. ]
அடுத்தவர்களிடம் நாம் காண்கின்ற குறைகளைத் திருத்தக் கூடிய சக்தி நமக்கு இருந்தது என்றால் அப்பொழுது மட்டும் நாம் அவர்களைப் பகிங்கரமாகக் கண்டிக்கலாம். நம்முடன் வேலை செய்பவருக்கு பங்சுவாலிட்டி இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை நம்மால் திருத்த முடியும் என்றால் அவரை நாம் கண்டிக்கலாம். அடுத்தவரைத் திருத்துகின்ற சக்தி எப்பொழுது நமக்குப் பிறக்கிறது என்று கேட்டால் நம்முடைய பர்சனாலிட்டி உண்மை நிரம்பியதாகவும், நம்முடைய ஜீவிய நிலை சத்திய ஜீவிய நிலைக்கு உயர்ந்து இருக்கும்பொழுதும்தான் என்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு தான் என்ற அகந்தை கரைந்து போய்விடுவதால் இறைவனின் பரிசுத்த கருவியாக இவர்களால் செயல்பட முடிகிறது.
இப்பொழுது சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் இலட்சியவாதிகள் ஆகியவர்கள் பேசுகின்ற பேச்சை எடுத்துக் கொள்வோம். இவர்கள் எல்லாம் உயர்ந்த நிலையில் இருப்பதால் இவர்களுடைய பேச்சில் இயற்கையிலேயே ஒரு கட்டுப்பாடு இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படியில்லை. இங்கேயும் பிடிவாதம், குறுகிய மனப்பான்மை என்பவை எல்லாம் நிறைந்து இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே வாதம் என்று ஆரம்பித்து முரண்பாடுகள் அதிகமாகி டிஸ்கஷன் என்பது தகராற்றில் போய் முடியக் கூடிய சந்தர்ப்பங்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.
தகராறு கூடாது என்றால் உண்மை முழுமையில் ஒரு பக்கம் தானே தவிர இதுவே முழுமையில்லை. அடுத்தவர்களுடைய கொள்கையில் உள்ள உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு நம்முடையதையும், மற்றவர்களுடையதையும், எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும்பொழுதுதான் முழு உண்மை வெளிவருகிறது. அக்கட்டத்தில் நாம் சுமுகத்தைக் கொண்டு வரலாம். ஆக இந்தப் பரந்த கண்ணோட்டம் வரும் வரையிலும் நம்முடைய பேச்சில் கட்டுப்பாடு இருந்தாலொழிய நாம் தகராறுகளைத் தவிர்க்க முடியாது.
படிப்பின் பாரத்தைக் குறைத்து மாணவ மாணவியருக்கு மேலும் நிறைய relaxation கொடுக்க வேண்டும் என்று ஒரு புதிய பாணி இப்பொழுது துவங்கியிருக்கிறது. இக்கண்ணோட்டத்தில் ஓர் உண்மை இருந்தாலும் relaxation என்ற பெயரில் மட்டமான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. Story discussion என்பது ஒரு லைட்டான subject தான், இருந்தாலும் எடுத்துக் கொள்கின்ற story தரமான story ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் காமரசம் நிரம்பிய நாவலை discussion க்கு எடுத்துக் கொள்ளும்பொழுது சூழலே தாழ்ந்து போகிறது. ஆகவே தரமான விஷயங்களை discuss செய்வது என்று முடிவு செய்தால்தான் பேச்சுக் கட்டுப்பாட்டில் நாம் வெற்றியைக் காண முடியும்.
உலகத்தை உண்டு பண்ணியது ஜீவியம் என்றாலும், அதைக் காப்பாற்றுவது அன்புதான். தெய்வீக அன்பை நாம் அனுபவித்துதான் உணர முடியும். தத்துவ ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் தெய்வீக அன்பு என்ன என்று வார்த்தைகளால் வர்ணிக்க முயன்றுள்ளார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காமல் போய்விட்டன. நான் பெரியதாக வர்ணிக்க விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அதாவது அன்பு என்பது ஐக்கியத்தில் உண்டாகின்ற சந்தோஷத்தின் வெளிப்பாடாகும்.
இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் மாற்றம் செய்ய முடியும்.
ஐக்கிய பேரின்பமே அன்பு என்று சொல்லலாம். அன்பின் ஆதியை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஐக்கியத்திற்கு உதவக் கூடிய இரண்டு இயக்கங்கள் (movement) அதில் இருப்பதைப் பார்க்கலாம். ஒரு movement, அடுத்தவரை நாடுகிற நாட்டமாக அமைகிறது. இன்னொரு movement தன்னைப் பிறருக்கு வழங்கும் self-giving movement ஆக அமைகிறது. படைப்பில் ஜீவியம் அதன் ஆதியிலிருந்து பிரிந்து unconscious ஆக மாறியபோது ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கு அன்பைத் தவிர வேறு சிறந்த கருவியில்லை.
பிரபஞ்சத்தை அழிக்காமல் படைப்பை அதன் ஆதியோடு மீண்டும் இணைப்பதற்கு அவசியம் வந்தபொழுது ஐக்கியத்தின் கருவியாகிய அன்பு வெளிப்பட்டு அவ்வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வெளிப்பட்ட அன்பு எல்லாம் இருந்த அடர்ந்த இருளில் இடம் தெரியாமல் சிதறிப்போனது. பின்னர் ஜடம் என்று உருவாகி பரிணாமம் என்று தொடங்கிய பிறகு அன்பின் வெளிப்பாடுகளும் ஆரம்பித்தன. இயற்கையின் எல்லா இயக்கங்களிலும் மற்றும் குழுமங்களிலும் நாம் அன்பின் வெளிப்பாட்டை உணரலாம்.
வெளிச்சம் வேண்டி செடிகளும் மரங்களும் மேல் நோக்கி வளர்வது அன்பின் வெளிப்பாடுதான். மலர்கள் தம்முடைய அழகு மற்றும் வாசனையின் மூலம் தம்மைப் பிறருக்கு வழங்குவதும் அன்பின் வெளிப்பாடுதான். பிராணிகளுடைய பசி, தாகம் மற்றும் இன அபிவிருத்தி என்று எல்லாவற்றிற்கும் பின்னால் தெரிந்தோ, தெரியாமலோ அன்பின் இயக்கம் இருக்கிறது. இதனுடைய உச்ச கட்ட வெளிப்பாட்டை, குட்டிகளைப் பேணிக் காக்கின்ற பெண் பாலூட்டும் பிராணிகளிடம் பார்க்கலாம்.
மனிதனை எடுத்துக் கொண்டால் அன்பின் செயல்பாடு conscious ஆகவே இருக்கிறது. மேலும் மனிதனைப் பொறுத்த அளவில் அன்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு இடையே இருந்த தொடர்பை இயற்கை மேலும் பலப்படுத்திவிட்டது. அதாவது இரண்டையுமே பிரித்துப் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர்களே மிகவும் குறைவு என்றாயிற்று. அப்படி இனப் பெருக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டபின் அன்பின் தரம் இறங்கிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். ஆணையும் பெண்ணையும் ஜோடி சேர்ப்பது என்பது இயற்கையின் முதற்கட்ட நடவடிக்கை. அடுத்த கட்டமாகக் குடும்பத்தை உருவாக்கியது, பின்னர் படிப்படியாக ஜாதி, சமூகம், தேசம், இனம் என்று பெரிய பெரிய குழுமங்களை உருவாக்கியது. இறுதியில் இன்றுள்ள பல்வேறு நாடுகளையும், இனங்களையும் ஒன்று சேர்த்து மானிடர்களிடையே ஓர் அடிப்படை ஒற்றுமையை இயற்கை உருவாக்கத்தான் போகிறது.
ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படி ஒரு திட்டத்தோடு இயற்கை செயல்படுவதாக அறிவதில்லை. அவர்களுக்கு அமைந்த வாழ்க்கைச் சந்தர்ப்பங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். சிலருக்கு அதுபற்றி சந்தோஷம், சிலருக்குத் தம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை பற்றி அதிருப்தி. வாழ்க்கையில் இன்ப துன்பங்களைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு சிற்றின்ப ஈடுபாடுகளில் முழுவதுமாக மூழ்கி இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வாழ்க்கைக்கு ஏதாவது உயர்ந்த நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வியே அவர்களுக்கு வருவதில்லை. முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது இல்லை. இப்படிப்பட்டவர்களை யோகப் பாதைக்கு அழைப்பதே தவறு. ஆன்மீகத்தைப் பற்றி இப்படிப்பட்டவர்களுடன் பேசினால் அவர்கள் நிலை குலைந்து போவார்கள். இயற்கையோடு அவர்களுக்கு இருக்கின்ற நெருக்கமான மற்றும், சுமுகமான உறவை நாம் அனாவசியமாகக் கெடுக்கக் கூடாது.
அன்பின் வெளிப்பாட்டையும், அதனால் கிடைக்கின்ற சந்தோஷத்தையும் ஏதோ ஒரு ரூபத்தில் உணர்ந்தவர்களும் இருக்கிறார்கள். தம்முடைய குடும்பத்திற்காகவும், தேசத்திற்காகவும், மதத்திற்காகவும் self-giving -இல் ஈடுபட்டு அதன்மூலம் பெருமகிழ்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெருமகிழ்ச்சி அவர்களுக்கு இறைவனோடு ஒரு தொடர்பு கிடைத்ததுபோன்ற உணர்வைக் கொடுக்கிறது. ஆனால் இந்தத் தொடர்பு பெரும்பாலும் தற்காலிகமாகத்தான் இருக்கிறது.
பரிசுத்தமான அன்பாக இருந்தால் கூட இறைவனோடு கிடைக்கின்ற தொடர்பு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அன்பு என்பதே இறைவனுடைய பல அம்சங்களில் ஓர் அம்சம்தான். ஓர் அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் நிரந்தரத் தொடர்பை அனுபவிக்க முடியாது.மனிதனின் குறைபாடுகளையும் மீறி, அவனுக்கே இப்பொழுது என்ன புரிகிறது என்றால், உலகத்தில் துன்பங்களைத் தீர்ப்பதற்கு இறை அன்பு ஒன்றால்தான் முடியும் என்று தெரிகிறது.
நம்முடைய அன்பை எல்லாம் இறைவனுக்கே தருவது என்று முடிவு செய்து உள்ளோம். ஆகவே மற்றவர்களோடு நமக்கு இருக்கின்ற உறவில் எந்நேரமும் சுயநலமில்லாத ஒரு கருணையையும், நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தினாலே போதும். நம்முடைய நல்லெண்ணத்திற்குப் பிரதிபலனாக ஓர் அங்கீகாரத்தையோ அல்லது நன்றி அறிதலையோகூட நாடக் கூடாது.
மற்றவர்கள் நம்மை எப்படி நடத்தினாலும் நாம் அவர்கள் மேல் எரிச்சலை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மற்றவருடைய கோபம், மற்றும் கெட்டெண்ணத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கவேண்டும். நமக்கு ஓர்ஆதரவு வேண்டும் என்றால் அதை இறைவனிடம் மட்டும் கேட்க வேண்டும். அவர் நமக்கு வழிகாட்டி. தடுமாறும்போது நமக்கு ஒரு தெளிவை வழங்கி, சிரமப்படும்பொழுது ஆறுதலைச் சொல்லி நமக்கு வேண்டியதை எல்லாம் செய்வார்.
ஆக இறுதியாகச் சொன்னால் உணர்வுக் கட்டுப்பாடு என்பது எல்லாவித பாசபந்தங்களையும் விட இறைவனோடு ஒரு பாசப் பிணைப்பை வைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் மேலேயே குறியாக இருக்கும்பொழுது இறைவனோடு நமக்கு ஓர் ஐக்கியம் கிட்டுகிறது.
.