கடாஃபியை சுட்டுக் கொன்றது பிரான்ஸ் உளவாளி!
[பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் ரகசியங்களை கடாஃபி கூறிவிடக்கூடாது என்பதற்காக கடாஃபியை சுட்டுக் கொன்ற பிரான்ஸ் உளவாளி! ]
லிபியா முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியை பிரான்ள்ஸச் சேர்ந்த உளவாளி சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் ரகசியங்களை கடாஃபி கூறிவிடக்கூடாது என்பதற்காக, அவரின் உத்தரவின்படியே அந்த உளவாளி செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுளள செய்தியில் கூறப்பட்டிருப்பது:
2011ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தனது சொந்த ஊரான சிர்தேயில் பாதாளச் சாக்கடைக்குள் பதுங்கியிருந்த கடாஃபியை, அரசு எதிர்ப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அவர்கள் கடாஃபியை தூக்கிக் கொண்டிருந்தபோது, பிரான்ஸ் உளவாளி ஒருவர் கூட்டத்துக்குள் புகுந்தார். துப்பாக்கியால் கடாஃபியை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
லிபியாவில் அதிபருக்கு எதிராகப் போர் தொடங்குவதற்கு முன், கடாஃபியுடன் அப்போது பிரான்ஸ் அதிபராக இருந்த சர்கோஸி நட்புறவு பாராட்டினார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சர்கோஸிக்கு பெருமளவிலான பணத்தை கடாஃபி அளித்தார் எனக் கூறப்படுகிறது.
அப்போது, கடாஃபியை பாரிஸன்க்கு அழைத்து தனது சகோதரர் என்று வானளாவப் புகழ்ந்தார் சர்கோஸி.கடாஃபிக்கு சர்கோஸி மட்டுமல்ல, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
கடாஃபியை டோனி பிளேர் பலமுறை சந்தித்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வியாபாரம் குறித்து பேசி வந்ததாகத் தெரிகிறது.கடாஃபிக்கு எதிராக உள்நாட்டில் போர் ஏற்பட்டதும், அதற்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்தன. அப்போது, தனது ரகசியங்களை கடாஃபி வெளியிட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரை அழிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார் சர்கோஸி.இந்தத் தகவல்களை லிபியாவின் இடைக்கால அரசில் தலைவராக உள்ள மெஹ்மூத் ஜிப்ரிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் எகிப்திய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கடாஃபியை சுட்டுக் கொன்றது பிரான்ள்ஸ சேர்ந்த உளவாளிதான்” என்றார்.
செயற்கைக்கோள் உதவியுடன்…ர்கடாஃபி சிர்தேயில் பதுங்கியிருப்பதை நேட்டோ படையினர் எவ்வாறு கண்டுபிடித்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சிர்தேயில் பதுங்கியிருந்தபோது, சிரியாவின் அதிபர் பஷார் அல்-அஸாதுடன் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் கடாஃபி பேசியுள்ளார். அந்த தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை நேட்டோ படையினர் எளிதாகக் கண்டுபிடித்தனர்.