பெண்களிடம் நிலவும் நான்கு பழங்கால செக்ஸ் நம்பிக்கைகளும் அதற்கு மாறான செக்ஸ்மருத்துவ இயல் உண்மைகளும்!
பழைய நம்பிக்கை 1 :
முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!
உண்மை :
முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
பழைய நம்பிக்கை 2 :
உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ளகுறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!
உண்மை :
உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சமஅளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பழையநம்பிக்கை 3 :
பெண்கள் வயதாகிவிட்டதாலும் மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்களுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசியமில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!
உண்மை :
60 சதவீதம் முதல் 80 சதவீதம் ஆண்கள் இளமையில் மட்டுமே உடல்உறவு கொள்வதற்குக் காரணம் பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்காததுதான்! பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில் உடல்உறவு தேவையில்லை என பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு. வயதான காலத்திலும் வளமான உறவை பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
பழையநம்பிக்கை 4 :
கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!
உண்மை :
பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்க லாம்! ஆண்கள் தான் முதலில் அழைக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள்.
ஆண்களிடம் நிலவும் பழங்கால செக்ஸ் நம்பிக்கையையும் அதற்கு மாறான செக்ஸ் மருத்துவ இயல் உண்மைகளையும் விளக்குகிறார்..!
பழைய நம்பிக்கை 1 :
திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
உண்மை :
திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்கலாம். ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல்உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்கலாம்!
பழைய நம்பிக்கை 2 :
பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!
உண்மை :
செக்ஸிற்கு சிறிய மார்பகம் பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், சுகா தாரம், உடல்எடை, ஊட்டச்சத்து ணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரி தாகவோ அல்லது சிறியதாகவோ அமையும்.
பழைய நம்பிக்கை 3 :
செக்ஸ் அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே செக்ஸில் முன் அனு பவம் இருக்கும் என்று பெரும் பாலான ஆண்கள் நினைப்பது..!
உண்மை :
தற்கால பெண்கள் படிப் பறிவு மிகுந்து ஆண்களைப்போல் சுதந்திரமாக வெளியில் சென்று தகவல் சேகரிக்கும் ண்ணறிவு டன் திகழ்வதால், செக்ஸ் அனு பவம் இல்லாமலே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!
– செக்ஸ் மருத்துவ நிபுணர் டாக்டர் பத்மினி பிரசாத்.