மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (3)
மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது?
மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை சாலையின் பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயீன் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்தும் என்பது தணிப்பட்டது அல்லது முழு உடல் சார்ந்தது
மார்பு பகுதிக்கு மட்டும் மருத்துவம் :
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிததலோ கட்டுபடுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.
அறுவை மருத்துவம் :
அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும்.
அறுவை மருத்துவத்தின் வகைகள் :
அ. லம்பாக்டமி (Lumpectomy)
இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.
ஆ. மாஸ்டெக்லொமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன. அவை யாவன.
சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy) இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகத்தை அறுத்து முழுதும் அகற்றப்படும்.
ரேடிகல் மாஸ்டெக்டமி :
இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை நடத்தப்படும். பெரும்பாலான மாஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகோ மார்பக மீட்டுரு வாக்கம் (re constriction) செய்யப்படும்.
மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப் படும். மார்பு சைதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுவற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப் படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்டெக்டமியும் அடங்கும்.
கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும்.
சிஸ்டமிக் டிரீட்மெண்ட் :
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.
1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகளின் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
2. ஹார்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் தாங்கள் வளர தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன் படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.
மருத்துவ மனையில் என்ன நடக்கும்?
கீழ்க்கண்டவை நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்ளப் கொள்ளபவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்
உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.
நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கிழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்.
அனுமதி பெறும் நாளில்
நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தங்க செவிலியர் ஏற்பாடுகள் செய்து தருவார். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பார். மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதிப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையின் தன்மை, சிக்கல்களை விளக்கி உங்கள் அனுமதியைப் பெறுவார். மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார். பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப் படுவீர்கள்.
அறுவை பெறும் நாள்
அறுவை மருத்துவத்திற்கு முன்னர் நீங்கள் உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள.
அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொகள்ளப் படுவீர்கள். மருத்துவ பணியாளர் உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வார் அறுவை மருத்துவத்திப் பின்னால்
படுக்கை பகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள். அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும். மயக்க மருந்தின் பக்க விளைவாக நீங்கள் வாந்தியெடுக்கலாம் அல்லது அந்த் இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் செவிலியரிடம் தெரிவியுங்கள். மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ நீங்கள் ஊக்கிவிக்கப்படுவீர்கள். உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும். அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்
அறவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பதை உணர்வீர்கள். குப்பியில் 20 மி,லி,க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும். அறுவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளிய பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார். அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் செவிலியர்க்கு சொல்லுங்கள். அந்த வலிக்கு காரணம் அறிந்து உங்களுக்கு ஊசி போடக் கூடும்.இல்லையென்றால் மருத்துவரை அழைக்க கூடும்
புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்கக ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பபடுவீர்கள்.
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்
உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனப்புவார். உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவமனையில் விளக்குவார். உங்கள் செவிலியர் மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவார். நீங்கள் மருத்துவ மனையில் இருக்கம் போது செய்யப்படாததிருந்தால் ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பார் அறுவை மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.குறிப்பு:
வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படும் நாள் அமையும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து செவிலியர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார். சிறப்பு மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.
source: www.ruraldoctors.blogspot.com
Breast cancer is one of the most common cancers diagnosed in women, but only 20 per cent of these women are known to have a mutation in one of the genes currently associated with an increased risk of breast cancer.
Scientists from the International Agency for Research on Cancer in France conducted a very large screen of this gene, using DNA from blood samples of 689 families with multiple members affected by breast cancer. They also took samples from 1,308 women who were affected by breast cancer at an early age, as well as 1,120 controls.
The mutations were only found in women who had had breast cancer, providing evidence that mutations in this gene increased the risk of breast cancer.
source: science illustrated .com
மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் வராது
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது” என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம். எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது” என ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார்.