“அம்மா” “அப்பா” எனும் வார்த்தைகளுக்கு இனி ஃப்ரான்ஸில் தடை!
அருவருப்பின் மறுபெயர் தான் நாகரீகமோ!!!
பாரீஸ்: ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசாங்கம் அனைத்து விதமான அரசு ஆவணங்களிலிருந்தும் “அம்மா” ” அப்பா” எனும் வார்த்தைகளை நீக்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வழமையாக ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது மரபு.
சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் முன்னேற்றம் எனும் பெயரில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போக்குக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இச்சூழலில் இப்படிப்பட்ட கலாச்சாரப் பெருமைக்கு தலைநகராகக் கருதப்படும் ஃப்ரான்ஸில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அரசு ஆதரிக்க தொடங்கியது.
ஆனால் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் தந்தை மற்றும் தாய் என யார் பெயரை போடுவது என குழப்பம் ஏற்படும் நிலை இருந்தது.
இச்சங்கடத்தை நீக்கும் பொருட்டு இனி அரசு ஆவணங்களில் அம்மா, அப்பா என்ற பெயர்கள் நீக்கப்படும் என்றும் அதற்கு பதில் பெற்றோர்கள் 1, 2 என்று இடம் பெறும் என்று ஃப்ரான்ஸ் அரசு புதிய வரைவு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் திருமணம் என்பது ஓரே பாலினம் அல்லது வெவ்வேறு பாலினத்தைச் சார்ந்த இருவரின் சங்கமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே பாலினத்தை சார்ந்தவர்களுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் விஷயத்தில் வழமையாக திருமணம் செய்யும் வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவர்களை போன்றே சம உரிமை கொடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கையும்-இஸ்லாமும்!
ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத் அலைஹிஸ்ஸலாம் எனும் நபியை அனுப்பி வைத்தான்.
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?” [7:80]
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் – நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.” [7:81 ]
இந்த இரு வசனங்களிலும் உலகில் முதன்முதலில் ஓரினசேர்க்கையை துவக்கிவைத்த சமுதாயம், நபிலூத்[அலை] அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமுதாயம்தான் என்பதை விளங்கமுடியும். இந்த தீயவர்களிடம் அவர்களின் தீய செயலை விட்டு விலகுமாறு நபி லூத்[அலை]அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த வழிகேடர்கள் நபிலூத்[அலை] அவர்களை பரிகாசம் செய்ததோடு அவர்களை ஊரை விட்டு விரட்டுமாறும் கொக்கரித்ததை அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்.
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ] அழிக்க வந்த அமரர்களையும் [வானவர்கள்] ‘அனுபவிக்க’ நினைத்த பாவிகள்;
ஓரின சேர்க்கை அட்டூழியம் செய்து வந்த இந்தசமுதாயத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அழகிய ஆண்கள் வடிவில் அனுப்பிவைக்க, ஆண்கள் வடிவில் இருந்த வானவர்களை அனுபவிக்க அந்த வழிகெட்டவர்கள் விரைந்து வந்தபோது, லூத்[அலை] அவர்கள் கூறியதை அல்லாஹ்தான் அருள்மறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.[11:78]அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள். (11:79)
அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)
மனித மிருகங்கள் மண்ணில் புதைந்தன :
நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)
மேற்கண்ட வசனங்களில், ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு அல்லாஹ் அளித்த தண்டனை பற்றியும் அறிந்தோம். இன்று நவீன உலகில் மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட்டம் அரசின்/அதிகார வர்க்கத்தின் துணையோடு மீண்டும் அட்டூழியம் செய்ய புறப்பட்டுவிட்டது. இந்த பாவிகளை திருத்த லூத்நபி வரப்போவதில்லை. இந்த பாவிகளை திருத்தும் கடமை மதத்திற்கு அப்பாற்பட்டு மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.