உச்ச நீதிமன்ற நீதிபதிகள் H.L. Dattu, C.K. Prasad – அதிரடி தீர்ப்பில் நெத்தியடி கருத்து!
“சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்” என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது. குஜராத்துக்கு மட்டுமல்ல… இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!
”எந்த ஓர் அப்பாவி முஸ்லிமும் “என் பெயர் கான், ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை,” என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாத ஓர் உறுதியான சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் H.L. Dattu மற்றும் C.K. Prasad அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் நேற்று தனது அதிரடி தீர்ப்பில் நெத்தியடியாக இப்படி கூடியது. அடி சக்கை..! அப்படி போடு..!
(No innocent person should be branded a terrorist and put behind bars simply because he belongs to a minority community, the Supreme Court has told the Gujarat Police. Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday. )
வழக்கில் இருந்த பொய்யான ஜோடிப்பு புனைவுக்கதைகளை கண்டு எத்தனை தூரம் நொந்து போயிருந்தால் இப்படியெல்லாம் கூறி இருந்திருப்பார்கள் அந்த நேர்மை மிகுந்த நீதிபதிகள்..!? சிந்திக்கவும் சகோஸ்..! அவர்களின் மனிதநேய வரிகளுக்கு வாழ்த்துகளுடன் நமது நன்றிகள் பல உரித்தாகுக..!
வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, 1994 இல் தடா சட்டத்தில் பிடித்த 11 முஸ்லிம்களை ‘குற்றமற்ற நிரபராதிகள்’ என்று கூறி விடுதலை செய்துவிட்டுத்தான், குஜராத் போலிசை அத்தீர்ப்பில் இப்படி ஒரு ‘நெத்திஅடி’ அடித்து உள்ளது உச்ச நீதி மன்றம்..! வாறே…வா…!
“1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜஹன்னாத பூரி யாத்திரையின் போது மதக்கலவரத்தை நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள் இவர்கள்” என்று கூறி, அப்போதைய காங்கிரஸின் குஜராத் முதல்வர் – சபில்தாஸ் மேத்தா ஆட்சில், 11 அப்பாவி முஸ்லிம்கள் மீது ‘தடா’ சட்டத்தில் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது, தமிழ்நாட்டில் ஜெ. முதல்வராக இருந்தபோதும் இப்படியான அராஜகம் தமிழக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம். பாபர் மஸ்ஜிதை ஹிந்துத்துவாக்கள் இடிக்கும்போது வேடிக்கை பார்த்த ஆர் எஸ் எஸ் தொடர்புடைய நரசிம்ம ராவ் ஆண்ட காலத்து காங்கிரசும், பாஜகவுக்கு சற்றும் சளைத்தது இல்லை என்பதையும் அறிவோம்.
பின்னர் வந்த பாஜகவின் நர்ர்ர்ர்ரேந்திர மோடியின் ஆட்சியில், 2002, ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு… (ஏற்கனவே எட்டு ஆண்டுகள் ஜாமீன் இல்லாத தடாவில் சிறையில் இருந்தவர்களுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
எவ்வித ஆதாரமும் இன்றி தண்டனை பெற்றதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அந்த 11 அப்பாவி முஸ்லிம்கள்..! வழக்கில் தண்டிக்கப்பட்ட இவர்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கைது, மற்றும் 1994 ஆம் ஆண்டு அகமதாபாத் ஜெகன்னாத் பூரி யாத்திரை போது வகுப்புவாத வன்முறை உருவாக்க திட்டம், ஆயுதங்கள் வைத்து இருந்தது, போன்ற அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் 11 முஸ்லிம்களையும் விடுவிக்க உச்ச நீதி மன்ற பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் அத்தீர்ப்பில்….
சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. ‘பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம்’ என்று எந்த ஒரு அப்பாவிக்கும் தோன்றக்கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும். இதனை கூறுகையில்தான், ‘
my name is Khan, but I am not a terrorist’ என்ற ஒரு திரைப்பட வசனத்தை சுட்டிக்காட்டினர், நீதிபதிகள்.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை இன்னும் அதிகப்படுத்த கோரும்… (அட… சண்டாளர்களா…) குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அத்தீர்பில்..!
எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் குற்றம் தெரிவித்தது.
‘தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த தீர்ப்பு, காவல் துறையின் இதுபோன்ற தவறுகள், இப்படி ‘மகாத்மா நாட்டில், தவறாக சட்டம் கையாளப்படுகிறது’ என்று பிரச்சாரம் செய்ய நம் எதிரி நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களால் இச்சட்டம் சிறுபான்மையோர் மீது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்’ என்றும் கூறியது.
தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கதுதான். என்றாலும், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது சிறப்பான தீர்ப்பில் கூறியது.
என்னால் பொருளுணர்ந்தும் அதேபோல சிறப்பாக தமிழில் மொழி பெயர்க்க முடியாத அத்தீர்ப்பின் ஒரு சிறப்பான பகுதி இது :
“We emphasise and deem it necessary to repeat that the gravity of the evil to the community from terrorism can never furnish an adequate reason for invading personal liberty, except in accordance with the procedure established by the Constitution and the law,” the Bench said. (சுவை கெடாமல் ஆங்கிலத்திலேயே படியுங்கள்) நன்றி : உச்சநீதி மன்றம்
இந்திய தேசத்தின் நீதி-சட்டம் மீதான அன்பை-நம்பிக்கையை அவ்வப்போது வலுக்க செய்வதாக இந்த தீர்ப்பு, மகிழ்வோடு வரவேற்கத்தக்க வகையில் அமைந்து இருக்கின்றது.
இருப்பினும், ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் பல்லாண்டுகள் சொல்லொனாத்துயறுற்று, பின்னர் “குற்றம் யாதுமற்ற நிரபாராதிகள்” என்று உச்சநீதிமன்றாத்தால் அப்பாவிகள் விடுவிக்கப்படும் ஓவ்வொரு முறையும்… நமது மனதினில்… ரணமாகி இருக்கும் அதே பழைய கேள்விகள்… எவரும் எந்த நீதியும் கண்டுகொள்ளாத அரதப்பழைய அதே கேள்விகள்…
கடந்த 18 ஆண்டுகளாக, பொய் குற்றச்சாட்டுக்காக தங்கள் வாழ்வை சிறையிலும், நீதிமன்ற வளாகத்திலும், இவற்றுக்கு இடையே பூட்டப்பட்ட வாகனத்திலும் கழித்த இந்த அப்பாவிகள் இழந்த வாழ்க்கையினை எப்படி அவர்களிடம் திரும்பக்கொடுப்பது..? யார் கொடுப்பது..? எவ்வளவு இழப்பீடு..? எங்கே இழப்பீடு..? கோடி கோடி இழப்பீடு தந்தாலும்… அவர்களின் இளமையை மீண்டும் எப்படி மீட்டுத்தருவது..?
‘Justice delayed is justice denied’….என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது, தெரியுமா..?
( இச்செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றி ‘தி ஹிந்து’ )
– முஹம்மத் ஆஷிக், தூது.