”விருத்த சேதனம்”- சுன்னத் செய்வது காலத்தின் கட்டாயம்!
சுவனப்பிரியன்
விருத்த சேதனம் எனும் ஆண்களுக்கு அவர்களின் உறுப்பில் ஒரு சிறிய தோல் பகுதியை வெட்டி எடுக்கும் இந்த பழக்கத்தை ஏனோ முஸ்லிம்களை தவிர மற்றவர்கள் செய்வதில்லை. இதில் இருக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டால் பலரும் இந்த பழக்கத்தை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொள்வார்கள்.
எச்ஐவி என்ற கொடிய ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் விருத்த சேதனம் பெரும் பங்காற்றுவதாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்சிசகளை வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த பழக்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலம் தொட்டே இந்த பழக்கம் வழி வழியாக வருகிறது. ஆனால் கிறித்தவர்களிடம் இந்த பழக்கம் முற்றாக ஒழிந்து விட்டது. ஏசு நாதருக்கு விருத்த சேதனம் செய்விக்கும் நிகழ்ச்சியை படமாகவே முந்தய காலத்தில் வரைந்து வைத்துள்ளனர். விக்கியில் இந்த படம் தற்போதும் உள்ளது.
ஏசுவின் போதனைகளை முற்றாக புறம் தள்ளி புது மார்க்கம் கண்ட பவுல் அவரின் விருத்த சேதன பழக்கத்தையும் அன்று கை விட்டார். பவுல் கை விட்ட அந்த பழக்கத்தை கிறித்தவர்கள் இன்றும் தொடர்கின்றனர்.
முஸ்லிம் குடும்பங்களில் பையனுக்கு 7 வயது அல்லது எட்டு வயது ஆகும் போதே கத்னா எனும் விருத்த சேதனத்தை பெற்றோர்கள் செய்து விடுவர். வயது ஏற ஏற பின்னால் விருத்த சேதனம் செய்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு சற்று சிரமத்தைக் கொடுக்கும். தற்போதெல்லாம் குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே விருத்த சேதனம் செய்து விடுகின்றனர். சிறு வயதில் புண் ஆறும் வரை சிறுவர்கள் லுங்கியை பிடித்துக் கொண்டு சில நாட்கள் சிரமப்படுவர். அந்த இடததில் கூச்சம் தெளிந்தவுடன் வழமைபோல் சகஜ நிலைக்கு திரும்பி விடுவர்.
இந்த நாட்களில் பள்ளியில் விடுப்பு எடுப்பதாகட்டும் அல்லது சக நண்பர்கள் கேட்பதாகட்டும் பையன்கள் சற்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்வது பார்க்க தமாஷாக இருக்கும். எப்படி தாடி வைப்பது முகமது நபி வலியுறுததிய பழக்கமோ அது போல் விருத்த சேதனமும் வலியுறுத்திய பழக்கம்.
ஒரு முறை எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று ஆசையாக வந்தார். ஆனால் அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் அவரிடம் ‘இஸ்லாத்துக்கு வந்தால் நீங்கள் விருத்த சேதனம் செய்ய வெண்டி வருமே’ என்று சொல்லவும் அவர் பயந்து போய் ஆறு மாதமாக இஸ்லாத்தை ஏற்காமலே இருந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ஒரு இஸ்லாமிய இளைஞர் அந்த பெரியவரிடம் ‘அய்யா…. சுன்னத் என்பது வலியுறுத்தப்பட்ட ஒரு பழக்கம். தாடி வைப்பதைப் போல். இந்த வயதில் நீங்கள் விருத்த சேதனம் செய்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை’ என்று விளக்கி விருத்த சேதனம் செய்யாமலேயே அவரை இஸ்லாத்தில் சேர்த்துள்ளார். முஸ்லிம்களிலும் இன்னும் சட்டங்களை சரியாக விளங்காதவர்கள் நிறைய உள்ளனர் எனபது இதிலிருந்து தெரிய வருகிறது.
“இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5891)
பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வநத செய்தியை இனி பார்ப்போம்.
உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.
இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. – பிபிசி.
சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக பிபிசியும் விருத்த சேதனம் செய்யும் இந்த பழக்கம் கிறித்தவத்தில் எப்படி மறைந்து போனது என்பதை விக்கி பீடியா விளக்குகிறது. அதையும் இனி பார்ப்போம்:
கிருத்துவம்
கிருத்துவத்தை பொருத்தவரை தொடக்கத்தில் அது தன்னை யூத மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவாகவே கருதியது. எனவே விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் ஆதி கிருத்துவர்களிடம் இருந்தது. இயேசு கிறித்துவுக்கும் யூத மரபு படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டது.
இருப்பினும் இயேசுவின் மரணத்திற்குப் பின் கிருத்துவம் தன்னிடம் உள்ள யூதத்தின் அடையாளங்களை விலக்குவதின் ஒரு பகுதியாக விருத்த சேதனத்தை கைவிட்டது. ஏறக்குறைய கிபி 50ல் எருசலேம் நகரில் கூடிய முதலாவது கிருத்துவ திருச்சங்கம் (The first Christian Church Council in Jerusalem) இதனை உறுதி செய்தது[23]. பிற்பாடு அதிக அளவில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்ட ரோமர்களிடம் இருந்த விருத்த சேதனத்தின் மீதான வெறுப்பும், முதலாம் பாப்பரசர் பேதுருவின் எதிர் அறிக்கையும் விருத்த சேதனத்தை கிருத்துவர்களிடம் இருந்து இல்லாமல் செய்தது.
இருப்பினும் இன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில கிழக்கு மரபு வழி காப்திக், எத்தியோப்பியன் மற்றும் எறித்தீன் ஆகிய பிரிவுகளில் விருத்த சேதனம் வழமையான ஒன்றாகவே உள்ளது
[27]. குறிப்பாக கென்யாவில் உள்ள நோமியா பிரிவு போன்றவை, தனது உறுப்பாண்மைக்கு விருத்த சேதனத்தை கட்டாயமாக்கி உள்ளது. -நன்றி: விக்கிபீடியா
உலக சுகாதார அமைப்பு உலகில் பெரும்பான்மையான நாடுகளில் ஆண்கள் 80 சதவீதமான பேர் விருத்த சேதனம் செய்து கொள்வதாக அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் நமது இந்தியாவைப் பொருத்த வரை 20 சதவீதத்துக்கு கீழே வந்து விடுகிறது. இந்தியா இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதும் ஒரு காரணம்.
அமெரிக்காவில் மத வித்தியாசம் பார்க்காமல் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்து வருகின்றனர்.
Source: yaal Muslim