Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மாணவா மாணவா! கம்பும் கத்தியும் நம் தோழனா மாணவா?

Posted on September 22, 2012 by admin

Related image 

  மாணவா மாணவா! கம்பும் கத்தியும் நம் தோழனா மாணவா?  

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

6.9.2012, 7.9.2012 தேதிகளில் சென்னை மாநிலக் கல்லூரி சம்பந்தமாக பரபரப்பான செய்திகள் வெளி வந்தன. நானும், ‘பிரின்சஸ் ஆப் பிரெசிடென்சி’ என்ற அந்த மாநிலக் கல்லூரியில் 1969-1971 படித்ததால் பிளாஷ் பேக்கான செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என .நினைகின்றேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மூன்று மாநகரங்களான மெட்ராஸ், கல்கட்டா மற்றும் பாம்பே ஆகியவற்றில் இந்திய குடி மக்களுக்கும் தன்னுடைய மக்களுக்கும் பயன்படும் விதமாக மூன்று கல்லூரிகளை முதன் முதலில் ஆரம்பித்தார்கள். ஆசியாவின் நீண்ட கடக்கரை கொண்ட மெரினாவின் அலைகளின் ஓசை ரசிக்கும்படி செவ்வண்ணக் கற்களால் அமைத்தார்கள்.

ஆசிரியராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிரிஷனாலும், அதன் மாணவரான நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரனாலும் அதன் புகழ் உச்சாணிக்குச் சென்று மாநிலக் கல்லூரியில் படிப்பது என்பதே ஒரு பெருமையாக இருந்தது.. மெட்ராஸ அங்கீக யுனிவேர்சிடியால் அங்கீக பட்ட மாணவர் பேரவை இருந்தது மாணவத் தலைவருக்கு தனி அறை கொண்ட ஒரே கல்லூரி மாநிலக் கல்லூரியாகும்..

அப்போது தேர்தல் மாணவத் தலைவர், செயலாளர், மகளிர் செயலாளர் ஆகியோருக்கு நடக்கும். அதுவும் எப்போது என்றால் கல்லூரி நிறைவு நாள் நெருங்கும்போது டிசெம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடக்கும்.

அதற்குக் காரணம் அப்போது தான் ஒரு வருடம் பழகிய மாணவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர் தேர்ந்தெடுக்கப் படுவார். போட்டியிடும் மாணவர் பெயர், பதவி வகுப்பு கொண்ட விசிடிங் கார்டு மூன்று இஞ்சி அகலமும், நான்கு இஞ்சி நீளமும் கொண்டது போட்டியிடுவர்களால் வழங்கப் படும். அது கல்.தவிர எந்த வித விளம்பரமும் செய்யக் கூடாது. லூரி வகுப் பறைகளுக்குச் சென்று ஆசிரியர் அனுமதியுடன் ஐந்து நிமிடம் வேட்பாளர் ஆதரவு கோரலாம். அதனை மீறி யாரும் விளம்பரம் செய்தால் அவர்கள் வேட்பு மனு தள்ளுபடி செய்யப் படும். வேட்பாளர்கள் அரசியல் சார்ந்திருந்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளக் கூடாது.

நாங்கள் படிக்கும்போது பேராசிரியர் ராமச் சந்திரன் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் வெளியே வந்தால் மாணவர் பெட்டிப் பாம்பாக அடங்குவர். அப்படிப் பட்ட மரியாதை. நான் கூட அப்போது சேர்மனுக்கு போட்டியிட்ட அப்பாசாமிக்கு ஆதரவாக முன்மொழிந்தேன். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயராமன் வெற்றி பெற்றார். இருந்தாலும் அப்பாசாமியும், ஜெயராமனும் நண்பர்கள்தான். அந்த நட்பு கெடாமல் இருந்தது. ஆனால் சமீப கால சம்பவங்களை நினைக்கும் பொது எப்படி இருந்த மாநிலக் கல்லூரி இப்படி ஆகி விட்டதே என்று எண்ணி வருத்தமடையச் செய்கிறது.

  சமீப கால கல்லூரி வன்முறை கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படுகின்றன: 

  1) ஜாதி சண்டை:    

‘ஜாதிகள் இல்லையடிப் பாப்பா’ என்று பாடிய பாரதியார் வாழ்ந்த நாட்டில் ஜாதிகளால் ஜாதி துவேசத்தால் மாணவர் இடையே சண்டை வந்துள்ளது. அது பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்க வில்லை.

2012 மார்ச்சு மாதம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுக்கா எம்.கல்லுப்பட்டி

கிராமத்தில் இருக்கும் பள்ளிக் கூடத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் இடையே ஒரு சிறு சண்டை ஆரம்பித்து அதில் அந்த கிராமத்தினைச் சார்ந்த மக்களும் இரு பிரிவினராக சண்டையிட்டுக் கொண்டதாக செய்தி வந்தன.

அடுத்த படியாக 2008 ஆம் ஆண்டு சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை இந்தியாவினை மட்டுமல்லாது உலக மாணவ உலகத்தினையே உலுக்கியது என்றால் மிகையாகாது. அந்த சம்பவத்தின் உண்மையினை அறிய தன்னார்வ குழு மார்க்ஸ் தலைமையில் ஆராய்ந்து ஒரு அறிக்கையினை அளித்தது. அதில் அதில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டைக்குக் காரணம் ஜாதி துவேசம் தான் என்றது.

  2) பஸ் பயணத்தில் வரும் தகராறு:    

நான் சென்னை புதுக் கல்லூரியில் படித்தபோது 1968 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்ணா சாலையில் அப்போது இயங்கி வந்த அரசு ஆண்கள் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது தகராறு வந்தது. அப்போது கலைக் கல்லூரி மாணவர் சிலர் சபைர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் தாக்கப் பட்டனர். அதன் விளைவு கலைக் கல்லூரி மாணவர்கள் புதுக் கல்லூரிக்கு படை எடுத்தனர். நல்ல வேலையாக போலீஸ் பெரிய கலவராம் வராமல் தடுத்தது. அதன் பின்பு 1969 வருடம் நான் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ சேரும்போது எனது வகுப்பு நண்பனும் கலைக் கல்லூரியில் படித்தவனுமான காந்திராஜனை முதல் நாள் சந்திப்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவன், ‘டேய், உங்கள் கல்லூரி மாணவர் சபைர் தியேட்டரில் தாக்கும் பொது அடி வாங்கியவனில் நானும் ஒருவன் என்றானே’ பார்க்கலாம். அப்போது எனது வருத்தத்தினை அவனிடம் தெரிவித்தேன். அவன் யாருமில்லை, மறைந்த நடிகர் சந்தனத்தின் மகனும் தற்போதைய நடிகர் சந்தானபாரதியின் சகோதரனும் ஆவான்.

i) பஸ் தகராறில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் பாதிப்பு:

1969 ஆம் வருடம் கீழ்பாக் கெல்லிஸ் சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், போக்கு வரத்து ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதன் விளைவு ஒரு பஸ் ஊழியர் இறக்கும் நிலைக்கு வந்தது. சிறு வாக்குவாதம் ஒரு கொலையில் கொண்டுபோய் முடிந்தது.

ii) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் பஸ்ஸில் தங்கள் கைவரிசையினை காட்டும் விதமாக பஸ் கூரையில் ஏறி பயணம் செய்து பஸ் ஓட்டை விழுந்தது என்ற செய்தியினை இங்கே தந்துள்ளேன். அது மட்டுமல்லாது பாதுகாப்பில் இருந்த பெண் போலீசாரும் காயம் அடைததாக செய்தி வந்தது.

உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட லிங்டோ குழு ஒரு அறிக்கையினை அளித்துள்ளது. அதில் மாணவர் தேர்தலில் வீண் செலவினை தவிர்க்க விளம்பர தட்டிகள், பலகைகள், நோட்டீஸ் போன்றவையும் தடை செய்யவும், ஒலி பெருக்கி தடை செய்தும், வாகனம், மிருகம் போன்றவை விளம்பர தடை செய்தும் அறிக்கை கொடுத்துள்ளது.

iii) கல்லூரிக்கு வரும் வெளியே தங்கிப் படிப்பவர்கள் தங்களுடைய ஈகோ பிரச்சனையாலும், படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாது ஏதோ இட ஓதிக்கீடிலும், அரசு கொடுத்த சலுகையினாலும் கல்லூரிக்கு வந்து சிறு சிறு விசையங்களுக்கும் சண்டையிட்டுக் கொள்ளுகின்றனர். பஸ் தின விழா என்று அரசு பஸ் மற்றும் அதில் பல்வேறு பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்பதினை மதிக்காது, போக்கு வரத்து விதிகளை மதிக்காது அதிகம் பேர்கள் ஏறி சவாரி செய்வது மட்டுமல்லாது பஸ் மேலேயும் ஏறுவது சட்டத்திற்குப் புறம்பானது தானே! அப்படி பஸ் மேல் ஏறினால் பஸ் ஓட்டுனர் பஸ்ஸினை எடுக்ககூடாது. அதனால் பஸ்சுக்கு ஏதும் சேதம் வந்தால் மாணவரே பொறுப்பு என்ற நிலையினை எற்பதுத்த வேண்டும். போராட்டம் செய்து அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அரசியல் கட்சிகள் பொறுப்பு என்று ஏற்கனவே உயர் நீதி மன்ற தீர்ப்பு இருக்கும்போது அது மாணவர்களுக்கும் பொருந்தும் தானே!

  3) மாணவர்களின் காதல் வயப்படல்:    

இளமைப் பருவத்தில் மாணவர்கள் காதல் வயப் பட்டு தங்களை காதல் மன்னர்களாக நினைத்து அவர்கள் காதலுக்கு யார் போட்டியினுக்கு வருகிறார்களோ அவர்களை ஜென்ம பகைவர்களாக நினைத்து மோதல் உருவாக்குகிறது. அவர்களுக்குத் தெரியாது கல்லூரிக் காதல் என்பது ரயில் பயணத்தில் அறிமுகம் செய்து கொண்டு ரயிலை விட்டு இறங்கியதும் மறைந்து விடுவது என்று மாணவர்களுக்கு ஏனோ தெரிவதில்லை!

  4) இரண்டு பகுதி மாணவர் இடையே தகராறு:    

ஹைதராபாத் நகரத்தில் தெலுங்கானா பகுதி மாணவர்களுக்கும் மற்ற பகுதி மாணவர்களுக்கும் மோதல் உருவானது. அதேபோன்று மணிப்பூரில் போடோ இன மாணவர்களுக்கும் இடம் பெயர்ந்த மாணவர்களுக்கும் மோதல் வந்துள்ளது. காரணம் உள்ளூர் மாணவர் வாய்ப்பினை வெளி மாணவர் பறிப்பதாக உள்ள பயமே காரணம்.

  5) அரசியல் சார்ந்த தகராறுகள்:    

மேற்கு வங்கத்தில் திருநாமுள் காங்கிரஸ் மற்றும் இடது சாரி மாணவர்களுக்கும் 2010 இல் நடந்த மோதல், 2011 ஏப்ரல் மாதம் அலிகார் யுனிவெர்சிடியில் இரண்டு கட்சி மாணவர்கள் துப்பாக்கி சகிதமாக மோதிக் கொண்டது, 2012 ஜனவரி மாதம் சிம்லாவில் கம்யுனிஸ்ட் மாணவர்களுக்கும் ஏ..பி.வி .பி. என்ற ப.ஜ.காவினருக்கும் மோதல் உருவாகி கல்லூரி ஒரு அரசியல் மோதலாக உருவானது உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளும் தனது தரப்பு மாணவர்களை தயார் செய்கிறது, ஏனென்றால் பதினெட்டு வயதினை அடைந்தத அனைவருக்கும் ஓட்டுரிமை இருப்பதால் மாணவர்களின் தேர்தலிலும் அரசியல் தலையீடு தற்போது இருக்கின்றது.

  6) ரேக்கிங்:   

நானெல்லாம் சென்னை புதுக் கல்லூரியில் இருந்தபோது மலேசியா மாணவர்களையும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு யார் சீனியர் என்று வெளிப் படுத்துவதிற்காகவும், கூச்சதினை போற்குவதிற்காகவும் சில தமாசான ரேக்கிங் நடக்கும். ஆனால் மனித உடலுக்கு பங்கம் விளைவதினை ஏற்படும் அளவிற்கு எந்த ரேக்கிங்கும் இருக்காது. ஆனால் தற்போது ரேக்கிங் என்று உடலுக்கு தீங்கு விளைவிற்கும் செயலும், ஜூனியர் கடத்தப் படுவதும், பொருள் அபகரிக்கப் படுவதும், ஜாதி துவேசம் காட்டுவதும், பாலின தவறுகளும் நடப்பதுண்டு. சில நேரங்களில் சிதம்பரம் அண்ணாமலை மெடிக்கல் கல்லூரியில் பொன் நாவரசு கொலை செய்தது போன்ற சம்பவங்களும், அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடக்கின்றது. ஆனால் உச்ச நீதி மன்றம் சமீபத்தில் ரேக்கிங் சம்பவங்களில், வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தல், கல்லூரியினை விட்டு நீக்குதல், அபராதமாக ரூபாய் 25000/ விதித்தல் போன்ற கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து அகில இந்திய தொழில் நுட்பக் கழகமும் தன ஆணையை 25.3.2012 வெளியிட்டது.

    உறுதி மொழி     

ஆகவே மாணவர்கள் தங்களின் தலையாய கடமை படித்துப் பட்டம் பெற்று நாட்டிற்கு தன்னாள் ஒரு நன்மையான காரியம் செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) பெற்றோர்களின் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசு புகைத்தல்,சினிமா பார்த்தல், கிளப் டான்ஸ், மது, மாது போன்ற ஈடுபட்டு வீண் விரையம் செய்யக் கூடாது.

3) அரசு முதல் பட்டதாரிகளுக்கு பல்வேறு சலுகைகளைத் தருகிறது. நீங்களும் அந்த சலுகையினைப் பெரும் முதல் பட்டதாரியாக மாற வேண்டும்.

4) போக்குவரத்து பஸ்களில் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் அளவிற்கு நம் நடவடிக்கை இருக்கக் கூடாது.

5) பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை உண்டு. அந்த உரிமையினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. பாலின சேச்டைகளில் ஈடுபடக் கூடாது.

6) நான் கோவை நகரி டி.எஸ்.பியாக 1977 ஆம் ஆண்டு பணியாற்றிய பொது பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி மாணவர்கள் பஸ் பாஸ் கேட்டு வேலை நிறுத்தம் செய்து கல்லூரியினை விட்டு பீளமேடு ரோடுக்கு வர முயற்சி செய்தார்கள். ஆனால் அப்போதைய கல்லூரி முதல்வர் டி.கே.பி.வரதராஜன் அவர்கள் கல்லூரி மெயின் கேட்டில் நின்று கொண்டு மாணவர் ரோடுக்கு வராமல் தடுத்தார். அவ்வாறு இல்லையென்றால் மாணவர் ரோடுக்கு வந்து பொலிசாருடன் மோதியும், ரோடில் செல்லுகின்ற வாகனமீது கல்லும் வீசி இருப்பார்கள். அதுபோன்ற முதல்வர்களை இன்று நாம் கல்லூரியில் காணுவது அரிதாக உள்ளது. மாணவர்களை கட்டுப் படுத்தும் கடமை கல்லூரி முதல்வருக்கும் ஆசிரியருக்கும் உண்டு. அது மட்டுமல்லாமல் மாணவர் தேர்வும்போது இன்டெர்னல் அசெஸ்மென்ட் அவர்கள் கையில் இருப்பதால் மாணவர்களும் பயப்படுவார்களல்லவா?

7) மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றாலும், அல்லது பொருளுக்கும் உடலுக்கும் பங்கம் வரும் என்றாலும் காவல் துறையினர் அனுமதி இன்றி கல்லூரி வளாகத்தில் நுழைந்து சட்டம் ஒழுங்கினை காப்பாற்றலாம் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதி மன்றம் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் வந்த மோதலில் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகவே காவல் துறையினரும் மாணவர்கள் சட்டத்தினை மதித்து நடக்கும் அளவிற்கு துணிந்து நடவடிக்கை எடுத்தால் பஸ்சுக்கும் சேதம் வராது,பொது மக்களும் பாதிக்கப் பட மாட்டார்கள், பெண்கள் அவமானப் பட மாட்டார்கள், மாணவர் உடலுக்கும் பங்கம் வராது.

8) மாணவர்கள் தங்களுடைய ஈகோ காரியங்களுக்காக கையில் கம்பையினையோ, கத்தியினையோ அல்லது கொடிய ஆயுதங்களையோ எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்து அதுத்தவருக்கு ஊறு விளைவித்தால் உங்களுடைய படிப்பும் பொய், வழக்கினை சந்தித்து, பெற்றோர்களுக்கு வீணான பொருள் சுமை கொடுத்து அதனால் நீங்கள் வேலை செய்யவோ, வெளிநாடு செல்லும் வாய்ப்பினையோ இழக்க நேரிடும்.

ஆகவே எதற்கு எடுத்தாலும் கத்தியினை தீட்டாது, புத்தியினுக்கு சற்று வேலை மாணவர் தரவேண்டுமென்று வேண்டுகிறேன்.

– Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 7 = 8

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb