காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்!
[ கிறிஸ்துவம், யூதம் பற்றி எல்லாம் உயர்வாக கருத்து சொல்லப்படும் அப்படத்தில்…
இறைத்தூதர் மீதும் இஸ்லாம் மீதும் இப்படி அப்பட்டமாக அபாண்டமாக பொய் சொல்லித்தான் தனது மதத்தை உயர்வாக காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கேவலமான கீழ்த்தரமான நிலை கிருத்துவத்துக்கும் யூதத்துக்கும் இருப்பதாகவா இந்த அவதூறு சாக்கடை கருமத்தை படமாக எடுத்த மிருகங்கள் நினைக்கிறார்கள்…?
மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்..? இவர்களின் இந்த இட்டுக்கட்டும் ஈனச்செயலை அந்த சமயங்களை சார்ந்த நல்லோர் எவருமே பெரிய அளவில் கண்டிக்காதது ஏன்..?]
அப்பாவி மக்களை கொல்வது… விபச்சாரம்… ஓரினச்சேர்க்கை… போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட… அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது… என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!
இதெல்லாம்… ‘நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்’ என்று மக்களுக்கு எடுத்துரைத்து… தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!
அன்னார் பற்றி புனைவாக ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்… எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? ஆம்..! எடுத்து இருக்கிறார்கள்… சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!
மேலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னவற்றுக்கு முற்றிலும் எதிராக…. அதாவது எதை ‘செய்யக்கூடாது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்களோ… அதற்கு முற்றிலும் எதிரான வகையில்… அந்த படத்தில் முஹம்மத் என்ற ஏழாம் நூற்றாண்டு அரேபிய கதாபாத்திரம்… ஏற்றவன்… மார்க்க பிரச்சாரமாக மக்களிடம் அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் போன்றோரை தமது ஆதரவாளர்களிடத்தில் கொல்ல சொல்கிறான்..!
இவர் போன்றவர் நமது இந்தியாவுக்கு ஆட்சியாளராக வேண்டும்’ என்று காந்தியடிகள் பாராட்டிய சிறந்த கலீபாவான உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற நபித்தோழர் வேடம் ஏற்ற உமர் என்ற ஆண் கதாபாத்திரத்துடனும்… அந்த முஹம்மத் கதாபாத்திரம்… ஏற்றவன்… ஓரினச்சேர்க்கை ‘செய்வதையும்’…….. விஷுவலாக காட்டிகொண்டு…….. இந்த சண்டாளர்கள்..!
இப்படி ஒரு சினிமாவை எடுத்தவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது..! மிருகங்களாகவே இருக்க முடியும்..! இதை எல்லாம் தடுக்கவோ… சென்சார் செய்யவோ… மனம் இன்றி மறைமுக ஊக்கம் கொடுக்கும் கேடுகெட்ட அமெரிக்க அநாகரிக அரசும் இந்த மிருகங்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்றே புரிகிறேன்..!
அந்த ‘Non-Innocent ஹாலிவுட் அமெரிக்க காட்டுமிராண்டிகள்’ இந்த கருமத்தை ஜூலையிலேயே ட்ரைலர் படமாக எடுத்து யு-டியூபில் அப்லோடு பண்ணியும் எந்த முஸ்லிமும் கண்டுகொள்ளவே இல்லை என்றதும் கடுப்பாகிப்போனார்கள்..! அவர்கள் வாயில் மண்..!
பின்னர்… ரொம்ப யோசித்து… அந்த சினிமா ட்ரெயிலர் சாக்கடை கழிவை அரபியில் டப்பிங் பண்ணி, இந்த செப்டம்பரில் அதே யு-டியூபில் அந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் அப்லோடு பண்ணவும்தான்…. அவர்கள் எதிர்பார்த்தபடி ஹிட்சும் டவுன்லோடும்…கிடைத்து விஷமம் சூடு பிடித்தது…!
எப்போதும் போலவே… இப்போதும்… உணர்ச்சிவசப்பட்ட இந்த அரேபிய முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை எகிப்திலும் லிபியாவிலும் ஆர்ப்பாட்டம்-கோஷம் என்று முற்றுகை இட்டுள்ளார்கள்..! அமெரிக்க கொடியை கொளுத்தி தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்..! எந்த ஒரு கூட்டத்திலும் ஒழுக்கமற்ற (அந்த படம் எடுத்தவர்கள் போல) சில காட்டுமிராண்டிகள் இருப்பார்கள் அல்லவா..? அவர்கள்…. தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை மறந்தவர்களாக… பின்பற்றாதவர்களாக… அந்த அமெரிக்க காட்டுமிராண்டிகள் எதை எப்படி எவ்வாறு தங்களிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ… அதை அப்படி அவ்வாறே ஏதோ ஒரு பக்கா செட்டப்பு போல… மிகச்சரியாக (மிகத்தவறாக) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை செப்டம்பர் – 11 இல் லிபியாவில் அரங்கேற்றிக்காட்டி இருக்கிறார்கள்..! விளைவு… நான்கு அப்பாவி அமெரிக்கர்களின் உயிர் கொல்லப்பட்டு விட்டது..!
அமெரிக்க யூத கிருத்துவ காட்டுமிராண்டிகளா Vs. லிபிய முஸ்லிம் காட்டுமிராண்டிகளா… என்று நடந்த போட்டியில்….மீண்டும் வழக்கம்போல வெற்றி அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கே…!
காரணம்…
சில யூத காட்டுமிராண்டிகளின் அற்புத டைரக்ஷன் எப்போதுமே அழிப்புப்பாதையில் சதி செய்து நாசவேலைக்கு வித்திடுவதில்… மிகத்துல்லியமாக செயல்பட்டு வந்ததை – வருவதை இந்த நூற்றாண்டில் நாம் நன்கு அறிவோம்..! இப்போதும் அப்படியே..!
இனி என்ன..? அந்த சாக்கடை கருமத்துக்கு செமை இலவச விளம்பரம் வ(த)ந்தாயிற்று..! யு டியூபில் தங்க கோப்பை அவார்ட் கிடைக்கும்..! லோ பட்ஜெட் படம். டாலர் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அந்த காட்டுமிராண்டி கூத்தாடிக்கூட்டத்துக்கு..! ஆனால், இங்கே அறிவில்லாத மக்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்..! பிறகு, “பார்த்தீர்களா… முஸ்லிம்களின் அறிவீனத்தைத்தான்… “Innocence of Muslims” என்று சினிமாவாக சொன்னோமே… இப்போதாவது நம்புகிறீர்களா..” என்று வெற்றிக்களிப்புடன் சொல்லிக் காட்டத்தானே இவ்வளவு மெனக்கெடல்..! காட்டுமிராண்டிகள் எதிரபார்த்ததை காட்டுமிராண்டிகள் நடத்திக்காட்டிவிட்டனர்..!
சில மாதங்களுக்கு முன்னர் “குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ய போகிறேன்” என்று கூத்தாட்டம் நடத்திய ஓர் அமெரிக்க கிருத்துவ பாதிரியாரை துணைக்கு சேர்த்துக்கொண்டு… அந்த சினிமாகார யூதன், தான் நினைத்ததை விட அதிகமாகவே இப்போது இந்த படம் மூலம் சாதித்து விட்டான்..!
இறைநாடினால்… இந்த உண்மையை எல்லாம் நிதானமாக சில காலம் கழித்தாவது உலகம் உண்மையை உணரும்..! இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு இணைவதை அந்த காட்டுமிராண்டிகள் உட்பட எவரும் இதுபோன்ற ஆபாச சினிமாக்களால் தடுத்து விட இயலாது…! இதற்குத்தானே இவ்வளவு மில்லியனை ஒவ்வொரு யூதனிடமாக பிச்சை எடுத்து… அதை இப்படி ஒரு நாசவேலைக்கு செலவு செய்தார்கள்..? இவர்களின் சூழ்ச்சியை முறியடித்து வைக்க அல்லாஹ் போதுமானவன்..!
இவ்வளவு கீழ்த்தரமான படங்களை இவர்கள் எடுக்க… இவர்களே மூக்கின் மீது விரல்வைத்து பாராட்டி அவார்டு தரும்படியான உயர்தரமான எதார்த்த சமூக படங்களை ஈரான் எடுக்கின்றதாம்..! எத்தனை எத்தனை தமிழ் (& இந்திய மொழிகள்) படங்களில் முஸ்லிம்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு கதைகளை பார்த்து இருப்பீர்கள்…? ஆனால்… முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவு படுத்தியோ… பிற சமூகம் மீது பொய் உரைத்தோ… பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே வீண்பழி சுமத்தி அவதூறு கட்டியோ… ஒரு படம் எடுத்ததாக… எப்போதாவது கேள்விபட்டதுண்டா…? அட.. அவ்ளோ வேணாம்..! ஒரு பாகிஸ்தானிய படத்தில், “இந்து கடவுள்களை அல்லது இயேசு கிருஸ்துவை அவமதித்து விட்டனர்” என்ற ஒரு பஞ்சாயத்தாவது இதுவரை துணுக்குச்செய்தியாகக்கூட உண்டா..? காரணம்..? “கவிதைக்கும் பொய் அசிங்கம்” என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு..! எனில், விஷுவல் மீடியா..? இதைவிட அதிக உண்மையாக இருக்க வேண்டுமல்லவா..? சினிமா எடுப்பதிலாவது… முஸ்லிம்களை பார்த்து கத்துக்குங்க..!
ஆகவே…. இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில்…. சில லிபிய இஸ்லாமிய காட்டுமிராண்டிகளின் அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்..! அதில் இறந்த அப்பாவிகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் & இரங்கல்கள்..!அதைவிட அதற்கு காரணமான சில ஹாலிவுட் சினிமாக்கூத்தாடிகளின் யூத கிருத்துவ மதவெறி காட்டுமிராண்டித்தனத்துக்கு எனது பல மடங்கு கடும் கண்டனங்கள்..!
அதைவிட எல்லாம் பற்பல மடங்கு…. இதை எல்லாம் இன்னும் ‘பேச்சுரிமை’, ‘கருத்து சுதந்திரம்’ என்று சும்மா சிரித்தபடி… வேடிக்கை பார்த்துக்கொண்டு… எதிர்ப்புக்குரல் கொடுப்போரை… ‘கலகக்காரர்கள்…’, ‘தீவிரவாதிகள்…’ என்று புளுகி சித்தரிக்கும்… இந்த செவிட்டு ஊமை ஊடக உலகத்துக்கு எனது மிகக்கடும் கண்டனங்கள்..!
கிறிஸ்துவம், யூதம் பற்றி எல்லாம் உயர்வாக கருத்து சொல்லப்படும் அப்படத்தில்… இறைத்தூதர் மீதும் இஸ்லாம் மீதும் இப்படி அப்பட்டமாக அபாண்டமாக பொய் சொல்லித்தான் தனது மதத்தை உயர்வாக காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கேவலமான கீழ்த்தரமான நிலை கிருத்துவத்துக்கும் யூதத்துக்கும் இருப்பதாகவா இந்த அவதூறு சாக்கடை கருமத்தை படமாக எடுத்த மிருகங்கள் நினைக்கிறார்கள்…? மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்..? இவர்களின் இந்த இட்டுக்கட்டும் ஈனச்செயலை அந்த சமயங்களை சார்ந்த நல்லோர் எவருமே பெரிய அளவில் கண்டிக்காதது ஏன்..?
மாறாக…
“அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்;………….” (குர்ஆன்– 6:108)”
பிற மத கடவுள்களை நாவினால் ஏசுவதைக்கூட தடை செய்திருக்கின்ற ஒரு மார்க்கம் அல்லவா இஸ்லாம்..! நாராசப்படம் எடுத்த பாவிகளே…! உங்களுக்கு உடனடி அவசர சிகிச்சை பிரிவு இஸ்லாத்தில் தான் உள்ளது..! இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்..! இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..!
இஸ்லாமோஃபோபியாவில்…. இந்த அத்தியாயமும் கடந்து போகும்..!
சரி… சரி… வழக்கம் போல… சரியான இஸ்லாத்தை அறிந்தோர்… இவர்களை மனத்தால் வெறுத்து, இவர்களின் மீதான தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிட்டு… ‘ யூதர்களிலும் கிருத்துவர்களிலும் உள்ள நல்லோர்களுக்காக வேண்டி அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க பிரார்த்தித்து விட்டு… இனி அப்படியே இதனை மறந்து விட்டு… அடுத்த வேலையை அதே விதமான ஒற்றுமையுடன் பார்ப்போம் வாருங்கள் சகோஸ்..!