இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்!
சென்ற வார சர்ச்சையாளன் அமெரிக்க கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் (Terry Jones), இந்தவாரம் ஃபிரெஞ்சு பத்திரிக்கையாளன் Charb என்றுஅழைக்கப்படும் Stளூphane Charbonnier! இவன்நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் எனச்சொல்லி நிர்வாணப் படமாக தனது பத்திரிக்கையில் நேற்று (19.09.12) வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக உலகெங்கிலும் உள்ள ஃப்ரெஞ்ச் தூதரகங்களில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட தூதரகங்களுக்கும், ஃப்ரெஞ்ச் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொருமுறை இஸ்லாம் விமர்சிக்கப்படும்போதும் அது அபரிமிதமான வளர்ச்சியே கண்டுள்ளது! அந்த வளர்ச்சிவேகம் மேலும் கூடவேண்டும் என இறைவன் நாடியுள்ளானோ, என்னவோ… மதவெறி பாதிரியைத் தொடர்ந்து, அந்த சூடு அடங்குவதற்குள் அடுத்த வாரமே மீண்டும் எதிரிகளின் கயமைத்தனங்கள்! இஸ்லாத்தை ஆயுதமாக வைத்து தங்களுக்கு உலக அளவில் விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பும் கேடுகெட்ட ஜென்மங்களே..! அந்நியப் பெண்ணை ஆசையாய் பார்ப்பதுகூட கண் செய்யும் விபச்சாரம் என எச்சரித்தார்களே அந்த அண்ணல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…!! அந்த பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்க்கிறீர்களா..? இறைவன் நாடினால் நீங்களும் உணர்வீர்கள் ஒருநாள் அந்த ‘முஹம்மத்’ யாரென்று!
உலகெங்கிலும் இஸ்லாம் மார்க்கம் மளமளவென வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை யாருக்கும் நாம் சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. இஸ்லாத்தின் இத்தகைய வளர்ச்சி இவ்வுலகுக்கு ஒன்றும் புதிதல்ல! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தவொரு தனிமனிதனும் உரிமைக் கொண்டாட முடியாத அளவுக்கு நாம் நினையாத புறத்திலிருந்து அதன் வளர்ச்சி தொடர்ந்துக் கொண்டேயுள்ளது. அது ஏன்…? இப்படியொரு வளர்ச்சி எப்படி…? அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒருசில முக்கிய/அடிப்படைக் காரணங்களை இஸ்லாமியர்கள் அனைவரும் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, இஸ்லாத்தின் எதிரிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்! அவையென்ன அந்த முக்கிய காரணங்கள்…?
1) ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அணுவளவுகூட மாறிவிடாத, மனிதக் கரங்களால் மாசுபடுத்த முடியாத, முக்காலமும் பேசக்கூடிய, வாழும் அற்புதமாக விளங்கும் ஒரே வேதமான அல்குர்ஆன்!!
2) அகிலமே அண்ணார்ந்து பார்க்கும் உன்னத நபியான, மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய்மையான, உயரிய வாழ்க்கை நெறி!!
உலக மக்கள் தொகை எந்தளவுக்கு அதிகமாகிக் கொண்டே வந்துள்ளதோ, அதைவிட அதிவேகமாக இஸ்லாம் வளர்ந்துக் கொண்டிருப்பதற்கு மேலே சொன்ன அந்த இரண்டு காரணங்கள்தான் அடிப்படையானவை என்பதை ‘இஸ்லாமோஃபோபியா’வில் ஊறித் திளைத்த எதிரிகளும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இப்போது உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை!
அதாவது இறைவனின் அற்புத வேதமான அல்குர்ஆனும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை முறையும் இவ்வுலக மாந்தர்களை இஸ்லாமிய வழியில் நாள்தோறும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன! அதன் அருமை, பெருமைகளை சிந்தித்துணர்ந்த மக்கள் மனமுவந்து குடும்பத்துடனும், குடும்பத்தைவிட்டு தனியொரு ஆளாகவும் இஸ்லாத்தின் பக்கம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்! கிறிஸ்துவக் கொள்கைப் பரப்பாளர்களைப்போல் பணத்தையும், பதவியையும் காட்டி யாரும் இஸ்லாத்திற்கு அழைக்கவில்லை. மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள எந்தவித கட்டாயங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ இஸ்லாத்தில் இடமில்லை. இவ்வுலக-மறு உலகுக்கான உண்மை வழியை உணர்ந்த மக்கள்தான் தத்தமது வாழ்வின் நற்பலன்களை அடைய விரும்பி அணி அணியாய் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள்!!
அதேசமயம் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஒவ்வொரு படிநிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு சொல்வதாக இருக்கும் அல்குர்ஆனுக்கு ஈடான எந்தவொரு வேதத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளால் காட்ட இயலவில்லை! அதனால்தான் சில வல்லரசுகள் அதைத் தடை செய்யவும், அழிக்கவும் துடிக்கின்றன. கையில் கிடைக்கும் குர்ஆனையெல்லாம் தீயிட்டு கொளுத்தி தன் துவேஷத்தை வெளிப்படுத்துகின்றனர். தீக்கிரையாக்கினாலும், கடல் நீரோடு கரைத்துவிட்டாலும், மண்ணில் புதைத்து மக்க வைத்தாலும் அல்குர்ஆன் இவ்வுலகை விட்டு அழிந்துவிடுமா? என்னவொரு அறியாமை!!
அயோக்கியப் பாதிரி அதன் மீது சிறுநீர் கழித்து அவர்களின் மதவெறியைத் தணித்துக் கொண்டால், அல்குர்ஆன் சிறுமைப்பட்டு விடுமா? அல்லது அதன் அற்புதத் தன்மைகள்தான் குன்றிவிடுமா? அவர்களின் இச்செயல்கள் மடத்தனத்தின் உச்சக் கட்டமல்லவா? அதேபோல் மாமனிதர் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி படமெடுத்தால், நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தால் இஸ்லாமிய சமூகத்தை வேண்டுமானால் மனதால் காயப்படுத்தலாம். ஆனால் அத்தகைய ஈனச்செயல்கள் மூலம் அந்த மனிதப் புனிதரை, அந்த உத்தம நபியை அவருடைய அந்தஸ்திலிருந்து அணுவளவும் இறக்கிவிட முடியாது என்பதுகூட தெரியாத இவர்கள்.. கடைந்தெடுத்த மடையர்களல்லவா?
பொய்யான காரணங்கள் சொல்லியும், வேண்டுமென்றே காரணங்களை உண்டாக்கியும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவி அப்பாவி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவிப்பதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும், தங்களின் கோர தாண்டவத்தில் சிறுவர்களைக்கூட விட்டுவைக்காமல் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், ‘இஸ்லாம்’ என்ற மார்க்கமோ, அதைப் பின்பற்றுபவர்களோ இவ்வுலகில் இருக்கக்கூடாது என்ற ரத்தவெறிப் பிடித்த காட்டேரிகளின் எண்ணங்களின்படி நடந்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் வியூகம் எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விளங்காமல் இல்லை. இஸ்லாம் மார்க்கம் எல்லாவிதமான சவால்களையும் வென்றெடுத்து உலகம் முழுதும் மிக வேகமாகப் பரவி வருவதை இவர்கள் காண்கிறார்கள். ஆய்வுகளின் மூலம் அதனை உறுதியும் செய்திருக்கிறார்கள். (விபரத்திற்கு: பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை) இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றால் 2020 ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!!
2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலகின் எந்த வன்முறை நிகழ்வாக இருந்தாலும், யார் செய்த குற்றம் என உறுதிபடுத்த முன்னரே, ஏன்…. அடுத்த சில நிமிடங்களிலே அந்த குற்றத்திற்குரியவர்கள் இஸ்லாமியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள்! இதனால், “அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்” என்று நடுநிலையாளர்களிடம் எழும் ஐயத்தின் மூலம், அவர்கள் “இஸ்லாத்தினைத் தெரிந்துக் கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தபொழுதுதான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது” என்பதே 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்களாக பதிவு செய்யப்பட்டது.
கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர், “உலகத்தில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் விடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி வாடிகன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், உலக மக்கள் தொகையில் நூற்றில் 17.5 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
(நன்றி: tntj.net)