‘தாம்பத்ய’ நேரத்தில் தள்ளிவைக்க வேண்டியவை…
திருமணம் முடித்த தம்பதிகள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் அவர்களுள் பலருக்கு சில முக்கியமான விஷயங்கள் தெரியாமல் போக வாய்ப்புண்டு. படுக்கையறையில் சில விஷயங்களைத் தெரிந்து, புரிந்து நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
அப்படிப்பட்ட சில விஷயங்கள் இதோ…
அந்தவகையில், தாம்பத்ய உறவுக்குப் பின் தவிர்க்க வேண்டிய தவறுகளாக பாலியல் நிபுணர்கள் பட்டியலிடுபவை இவை…
உடனேயே தூக்கத்தில் விழுவது :
பல தம்பதிகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது என்கிறார்கள். அதாவது, உடலுறவு முடிந்ததுமே இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனடியாகத் தூங்கிப் போவது. இது தவறு, தாம்பத்ய உறவின் வசீகரத்தை இது கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். உடனடியாக உறக்கத்தில் மூழ்க முயல்வது, செக்ஸ் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்று யோசிக்க விடாது, அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் இடம் தராது.
குளியலறைக்கு ஓடுவது :
‘அது’க்குப் பின் குளியலறைக்கு ஓடி, சுத்தப்படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் ‘ஒன்றாக’ என்றால் கூடுதல் விசேஷம். ஆனால் உடனடியாக குளியலறை நோக்கிப் பாயத் தேவையில்லை என்கிறார்கள் செக்சாலஜிஸ்டுகள். வேலை முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணைவர் இன்னும் அந்த மனநிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் என்று விளக்குகிறார்கள். உடனடியாக பாத்ரூமை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும் என்கிறார்கள்.
நண்பரை அழைத்துப் பேசுவது :
இதுவும் பொதுவாக தம்பதிகள் செய்யும் தவறுதான். அதாவது, நெருக்கமான தருணத்துக்குப் பின் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது. அலுவலக விஷயங்களை நாம் நள்ளிரவில் பேசுவதில்லையே? அதைப் போல நட்புரீதியான பேச்சையும் காலையில் வைத்துக்கொள்ளலாமே? படுக்கையறை மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடையூறாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச் செய்யும்.
வேலை அல்லது படிப்பில் ஆழ்வது :
உடலுறவின்போது தம்பதியர் மனதில் ஓடுவது என்ன என்பதற்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. ஆனால்’ அந்த’ நேரத்துக்குப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போகிறவர்கள் அதற்கான விடையைக் கூறிவிடுகிறார்கள். தாம்பத்ய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின்போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால்
தனித்தனியாக உறங்குவது தப்பு :
தம்பதிகளுக்கு வழக்கமாக தனித்தனியாகப் படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் மோக வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும், பெட்ஷீட்டையும் தூக்கிக் கொண்டு தனியே உறங்க ஓடுவது, சிலாகிக்கக்கூடிய விஷயமல்ல. இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது, தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளை அழைத்துக்கொள்வது :
அந்தரங்கச் சூழலில் அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோஷத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. ‘அந்த’ நேரத்துக்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளும் துடிப்பு,இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் ‘ரொமான்டிக் மூடில்’ இருந்து மாறாத கணவருக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.
சாப்பிடுவது :
படுக்கையறைக்கு ஒன்றாகச் செல்லும்முன் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து நிதானமாக உண்ணுவது அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் செக்சுக்கு பின் சாப்பிடுவது, முந்தையதற்கு இணையான மோசமான விஷயம். உங்களுக்கு ‘உடல் பசியில்லை… குடல் பசிதான், வயிற்றுக்கு சோறிடுவது பற்றித்தான் ‘ அந்த’ நேரமெங்கும் உங்களுக்கு சிந்தனை ஓடியிருக்கிறது’ என்று துணைவரை நொந்துகொள்ளச் செய்யும் உங்கள் செயல்.
சண்டையிடுவது :
சில தம்பதிகள் உடலுறவு கொண்டு முடித்த சில நேரத்துக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் உண்டு. இதில் உடலுறவில் பூரண திருப்தி காணாத தம்பதிகளே அதிகம் அடங்குவர். இம்முறை திருப்தி பெறாவிட்டாலும் அடுத்த முறையில் அசத்திவிடலாம் என்று மனதை தேற்றிக்கொண்டால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் பூகம்பம் தான்.