என்னதான் வேண்டும் உங்களுக்கு?
மெளலவி, முஹம்மது கான் பாகவி
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி முழுக்க முழுக்க பொய்யிலும் பொய்யான காட்சிகளைப் படமாக்கி அரிப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் யூதர்களும் கிறித்தவர்களும்.
ஏன் இவர்களுக்கு இந்தக் கொலைவெறி?
முஸ்லிம்களை உசுப்பேற்றி கலகங்களை உருவாக்க நினைக்கிறார்களா?
அல்லது இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் வெறிபிடித்து அலைகிறார்களா?
அல்லது எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகிறார்களா?
இன்னும் எத்தனை முஸ்லிம்களைக் கொன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்? சொல்லுங்கள்!
உண்மையில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதை இன்றுவரை உலக அரங்கில் அமெரிக்கா நிரூபிக்கவில்லை. அமெரிக்கா குற்றம் சாட்டிய சத்தாம் ஹுசைனையும் உசாமா பின் லேடனையும் கொன்று குவித்துவிட்டீர்களே! இன்னும் வெறி அடங்கவில்லையா? இராக்கையும் ஆப்கனையும் அதையொட்டி பாகிஸ்தானையும் சூறையாடி கொள்ளையடித்துவிட்டீர்களே! இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா?
உலக முஸ்லிம்களே! இக்காட்சிகளில் ஒன்றாவது உண்மையா? குர்ஆனிலோ ஹதீஸிலோ வரலாற்றிலோ அறிஞர்களின் உரைகளிலோ இதை நீங்கள் என்றாவது கேள்விப்பட்டதுண்டா? முழுக்க முழுக்க பொய்யிலும் பொய்யான காட்சிகளைப் படமாக்கி அரிப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் யூதர்களும் கிறித்தவர்களும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது இதில்?
ஏன் இவர்களுக்கு இந்தக் கொலைவெறி? நம்மை உசுப்பேற்றி கலகங்களை உருவாக்க நினைக்கிறார்களா? அல்லது இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் வெறிபிடித்து அலைகிறார்களா? அல்லது எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகிறார்களா?
உண்மையில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதை இன்றுவரை உலக அரங்கில் அமெரிக்கா நிரூபிக்கவில்லை. அமெரிக்கா குற்றம் சாட்டிய சத்தாம் ஹுசைனையும் உசாமா பின் லேடனையும் கொன்று குவித்துவிட்டீர்களே! இன்னும் வெறி அடங்கவில்லையா? இராக்கையும் ஆப்கனையும் அதையொட்டி பாகிஸ்தானையும் சூறையாடி கொள்ளையடித்துவிட்டீர்களே! இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா?
இன்னும் எத்தனை முஸ்லிம்களைக் கொன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்? சொல்லுங்கள்!
ஒன்றுமட்டும் நிச்சயம்! சியோனிஸ்டுகளையும் அமெரிக்கர்களையும் எதிர்க்கின்ற வல்லமையும் நெஞ்சுறமும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டு என்பதைத்தான் இவர்களின் சேட்டைகள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் உலகில் மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு முஸ்லிம்களையே இந்த ஷைத்தான்கள் குறிவைக்கக் காரணமென்ன?
இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்: யூதர்கள் என்ன? கிறித்தவர்கள் என்ன? யாராலும் இஸ்லாத்தையோ திருக்குர்ஆனையோ அசைக்க முடியாது. சில முஸ்லிம்களை நீங்கள் கொல்லலாம்; இஸ்லாத்தைக் கொல்ல முடியாது. காரணம், அது ஒன்றுதான் இன்றைக்கு இறைமார்க்கம்; அது ஒன்றுதான் சத்தியம்; அது ஒன்றுதான் வாழும் வாழ்க்கைநெறி.
இஸ்லாத்தைக் காக்கும் பொறுப்பை, அதை அருளிய இறைவனே ஏற்றுக்கொண்டிருக்கிறான். இறைவனோடு போர் தொடுக்கிறீர்களா? அழிந்துபோவீர்கள்! இந்தப் பார் உள்ளளவு, வானமும் பூமியும் உள்ளளவு, உலகம் அழியும்வரை இஸ்லாம் இருக்கும்.
இதோ வல்லோன் அல்லாஹ் அறிவிக்கிறான் கேளுங்கள்:
நிச்சயமாக இந்த அறிவுரையை (குர்ஆனை) நாமே அருளினோம். உறுதியாக இதை நாமே பாதுகாப்போம். (15:9)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமைநாள் நிகழாது. (முஸ்லிம்)
பூமியில் ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லப்படாத போதுதான் மறுமை நாள் நிகழும். (முஸ்லிம்)
அதாவது முஸ்லிம்கள் இருக்கும்வரை உலகம் அழியாது; உலகம் அழியாது இருக்கக் காரணமே ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள்தான்.
source: http://khanbaqavi.blogspot.in/