Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சாந்தியும் சமாதானமும்

Posted on September 17, 2012 by admin

    சாந்தியும் சமாதானமும்    

தலைப்பிலிருந்தே இந்தப் பதிவின் மையக் கருத்து எதுவென்று புலப்பட்டிருக்கும்: “முகமன் கூறுதல்”!!

“முகமன்” என்பதை, “மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகள்” என்று ‘தமிழ் அகராதி’ வரையறுக்கின்றது. அதாவது அறிமுகமுள்ள அல்லது அறிமுகமற்ற இருவர், (நேரிலோ, எழுத்திலோ) சில காரணகாரியங்களுக்காகச் சந்தித்துக் கொள்ளும்போது, பேச்சைத் துவங்குமுன் சில உபசார வார்த்தைகள் பரிமாறிக் கொள்வர். இதை ஆங்கிலத்தில் “greetings” என்பார்கள்.

உலக வழக்கில், பொதுவாக இருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘குட் மார்னிங்’, ஹாய், ஹல்லோ என்று முகமன்கள் சொல்லிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனிப்பட்ட வழக்கங்கள் இருந்தாலும், “உலகமயமாக்கப்பட்ட” உலகில் இவையே ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுமுறையாகிப்போனது. இந்தியாவிலும் – தமிழகம் உட்பட – எந்த அர்த்தமுமற்ற ‘ஹாய்’, ’ஹல்லோ’ வில் இன்றைய இளையதலைமுறையினர் இன்பங்காண்கின்றனர் – ‘ஹாய் பட்டி’ (buddy), ’ஹல்லோ ட்யூட்’ என்பதாக.

மீதிப்பேர் (hai – hi – helloவை முகமனாக ஏற்க முடியாதவர்கள் உட்பட) ‘குட் மார்னிங்’, குட் ஈவினிங்’ போன்றவற்றைப் பிரயோகிக்கின்றனர். ’நல்ல காலை/மாலைப் பொழுது வாய்க்கட்டும்’ என்பது நல்ல வாழ்த்தாக இருப்பினும், இதைப் பயன்படுத்தமுடியா தர்மசங்கடமான அசந்தர்ப்பச் சூழ்நிலைகளும் அமைவதுண்டு.

 உலகமுழுதுமுள்ள முஸ்லிம்களின் முகமன் வார்த்தைகள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதாகும். இதனைத் தமிழாக்கினால், “உங்கள்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக” என்று பொருள்படும்.

Al+salam+alaikum = the+peace+be upon you என்பதாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கலாம். ஆங்கிலத்தில் உள்ள “peace” என்ற வார்த்தைக்குத் தமிழில் சாந்தி, சமாதானம் என்று இரு பொருள் உள்ளதால், தமிழில் இரண்டையுமே எடுத்துக் கொள்கின்றனர். இரண்டில் எதை விடுவது? இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் மனிதனுக்கு மிகமிக அத்தியாவசியமாயிற்றே!!

ஆமாம், இல்லையென்றால் “எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” பாடல் இன்றும் சூப்பர்ஹிட்டாகுமா? ஏன் பலரின் புலம்பலே “லைஃப்ல நிம்மதியே இல்லைப்பா”; “ஆஃபிஸ்ல ரொம்ப ஸ்ட்ரெஸ், அதான் ரிலாக்ஸ் பண்ணிக்க ஜிம்/பார் போறேன்”; “மைண்ட் ரிலாக்ஸ் பண்ணத்தான் ப்ளாக் பக்கம் வர்றேன்”, “மனக்கவலைகளிலிருந்து விடுபடத்தான் சுற்றுலா போகிறேன்” – என்றுதானே இருக்கிறது.

“குட் மார்னிங்” அல்லது “குட் ஈவினிங்” சொல்வதால் அவர்களுக்கு நல்ல பொழுது அமைய வாழ்த்துகிறோம். ஆனால், அன்றைய ஒரு பொழுதுக்கான வாழ்த்தாக மட்டும் இல்லாமல், ஒருவருக்கு முழுமையான நிம்மதிக்காக “உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்” என்று வாழ்த்துவது அதீத அன்புக்கு வழிவகுக்கும்.

இஸ்லாம் “ஸலாம்” என்ற முகமன் கூறுவதை முஸ்லிம்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது ஸலாம் என்ற முகமன் கூறுவதும், பசித்தோருக்கு உணவளிப்பதும் ஒரே தரத்தில் வைக்கப்படுமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் மற்றொருவரைக் காணும்போது – அவர் நண்பரானாலும், எதிரியானாலும், வயதில், குணத்தில், செல்வத்தில், பொறுப்பில் தம்மைவிட உயர்ந்தவரானாலும், தாழ்ந்தவரானாலும், அறிந்தவரானாலும், அறியாதவரானாலும் ஸலாம் சொல்லுவது ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.

இதனால் என்ன பலன்(ம்)? இஸ்லாம் ஸலாம் சொல்லுவதை மட்டுமல்ல, அதற்கு முறையாகப் பதிலளிப்பதையும் முஸ்லிமுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. ஆகையால், முன்பே அறிந்தவர்களிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், ஸலாம் சொல்லப்படும்போது மனம் சமரசமடையும். சமாதானம் நிலவும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒருவேளை இருவரும் புதியவர்கள் என்றால், ஒரு “ice breaker” ஆக அமையும், நட்பு பெருகும்.

இச்சூழ்நிலைகளில் சாதாரணமாக சொல்வதுபோல, கருத்துவேறுபாடுடைய ஒருவரிடம் “குட் மார்னிங்” சொல்லப்பட்டால் அது ஏற்கப்பட்டு பதில் கூறப்படவேண்டும் என்று கட்டாயமுமில்லை. சம்பிரதாயமாகப் பதில் கூறப்பட்டாலும் அதில் பெரியளவில் மனஇறுக்கம் அகல வாய்ப்புமில்லை. பொதுவாகவே உயர்பதவியிலுள்ளவர்களிடமோ, செல்வந்தர்களிடமோ அவரைவிடத் தாழ்ந்த பொறுப்பில்/நிலையில் இருப்பவர்கள் இவ்வாறான முகமன் கூறினால், பெரும்பாலானவர்கள் அதற்கு வெறும் தலையசைப்பையே பதிலாகத் தருவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இஸ்லாம் நம்மிடம் கூறப்படும் ஸலாமிற்குத் தக்கமுறையில் பதில்கூறவும் உத்தரவிடுகிறது . ஆகையால் ஒரு முஸ்லிம் எத்தரத்தவர் ஆயினும், அவரிடம் ஸலாம் கூறப்பட்டுவிட்டால் பதில்கூறியே ஆகவேண்டும்!!

“உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்” (அல் குர்ஆன் 4:86)

மேலும் எச்சந்தர்ப்பங்களுக்கும் – மகிழ்ச்சி, துக்கம் என இருவேறுபட்ட நிலைகளுக்கும் பொருத்தமான முகமன் ஸலாம். அதிகப் பூரிப்போடு இருக்கும் நிலையில் உள்ள நிம்மதி இனியும் தொடர வேண்டும்; சஞ்சலமான பொழுதிலும் அதே நிம்மதிதானே வேண்டும்!! எனவே “அமைதி”யை யாரும் (மனதார) நிராகரிக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இலக்கே அமைதியைத் தேடித்தான் எனும்போது, அதற்கான வாழ்த்தை மறுக்கமுடியாது.

இஸ்லாமிய முகமனைச் சிலர் தமிழில் “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள்மீது நிலவட்டும்” என்று மொழிபயெர்ப்பதுண்டு. இதற்கு இரு காரணங்கள் சொல்லலாம். அதாவது இறைவன் மட்டுமே பூரண நிம்மதி தரக்கூடியவன் என்பது ஒன்று. மற்றொன்று, இறைவனுக்குரிய திருநாமங்களில் ஒன்று “ஸலாம்” என்பது. அதன் பொருள் – “அமைதி அளிப்பவன்”. ஆகையால்தான் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது இறைவனை முன்னிலைப்படுத்தியும் மொழிப்பெயர்க்கப்படுகிறது.

சரி, இதைத் தமிழிலேயே சொல்லலாமே என்று தோன்றும். தமிழில் சொன்னால் தமிழர்களுக்கு மட்டுமே புரியும். உலக இஸ்லாமியர் அனைவராலும் அறியப்பட்ட மொழியில் சொல்வதால் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதை மெய்ப்பிக்க முடிகிறது. “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்று சொல்வதில் உள்ள இனிமை “எழுத்துக்களுக்கெல்லாம் அ என்ற எழுத்து முதன்மையானதைப் போல உலகத்தின் முதன்மையானவன் இறைவனே” என்று சொல்வதில் முழுமையாக இருக்காதுதானே. எனினும் முஸ்லிமல்லாத தமிழர்களிடம் சொல்லப்படும்போது அவ்வாறே தமிழிலேயேச் சொல்லப்படுகிறது.

இந்த முகமன், முஸ்லிம்களிடையே மட்டுமல்ல, மாற்று மதத்தவர்களிடமும் சொல்ல வேண்டும் என்பது “உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவது மிகச் சிறந்த நல்லறமாகும்'” என்கிற நபிமொழியிலிருந்து புலப்படும். எனினும், முஸ்லிமல்லாதவர்களிடம் ஸலாம் சொல்லப்பட்டால், அவர்கள்மீது இஸ்லாமைத் திணிப்பதாகச் சிலர் தவறாகக் கருதிவிடுவதால், பொதுவாக முஸ்லிம்கள் இதைத் தவிர்க்கிறார்கள்.

உலகம் முழுதும் பல்வேறுவித முகமன்கள் புழங்கிவந்த போதிலும், இதேபோன்ற முகமன் – “சாந்தியும், சமாதானமும் நிலவட்டும்” என்ற முகமன் – முஸ்லிமல்லாத ஒருசில நாட்டு மக்களிடமும் புழக்கத்தில் உண்டு என்பது ஆச்சர்யமான விஷயம்.

கிறிஸ்தவத்தைப் பெரும்பான்மை மதமாகக் கொண்ட மால்டா என்கிற நாட்டிலும், மக்கள் சந்தித்துக்கொள்ளும்போது “

Sliem għalikom” என்று அவர்கள் மொழியில் அமைதி நிலவட்டும் என்பதாக வாழ்த்துவார்கள்.

ஒரு குறிப்பிட்ட இனத்து யூதர்களிடையேயும் இந்த “அமைதி” வாழ்த்து உண்டு. “Sholom aleikhem” என்று சொல்லப்பட்டால், “Aleikhem shalom” என்று பதிலளிக்க வேண்டும்.

அவ்வளவு ஏன், நமக்கு வெகு அருகில் உள்ள இலங்கையில், பெரியவர்கள் பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் “சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் நிலவட்டும்” என்றுதான் வாழ்த்து தெரிவிப்பார்கள்.

இந்தியாவிலேயே சில இந்து சாதுக்கள், “ஷாந்தி” என்று ‘அமைதி’யைத்தான் அருளாசியாக வழங்குவார்கள்.

இதிலிருந்து முற்கால மனிதர்களிடம் அமைதிக்கான முகமனே புழங்கி வந்திருக்க வேண்டும்; நாகரீகம் வளர வளரத்தான் மற்ற முகமன் முறைகள் மக்களிடையே ஊடுருவியிருக்கலாம் என்று புலப்படுகிறது. இதையே இந்த நபிமொழியும் நிரூபிக்கின்றது.

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் களி மண்ணிலிருந்து படைத்தான்…. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்…. (நூல்: புகாரி 6227, 3326)

ஆத்திகமோ, நாத்திகமோ, இந்துவோ, இஸ்லாமியனோ, இந்நாடோ, எந்நாடோ எல்லாரும் மனதார விரும்புவது நிம்மதியான வாழ்வே. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அமைதிகிட்ட மனதார முகமன் கூறுவோம். நிம்மதிக்கான வழிகளையே கடைபிடிப்போம் – நம்மளவிலாவது.

source: http://hussainamma.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb