யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
[ இஸ்லாத்தின் எதிரிகள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கேவலப்படுத்த முயல்கின்றனர்.. ஆனால் பெருமானர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை எவராலும் கேவலப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களை “புகழுக்குறிவர்” என்று படைத்த ரப்புல் ஆலமீனே புகழாரம் சூட்டிய பின் எந்த மனிதனாலும் அவர்களை கேவலப்படுத்த முடியாது என்பதே உண்மை. அல்லாஹ்வின் தூதரை கேவலப்படுத்த நினைப்பவர்கள்தான் கேவலப்பட்டுப்போவார்கள் என்பதே வரலாற்று உண்மையும் கூட.
இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தகுந்த பதிலை சாட்டையடியாக இறைவனே தனது திருமறையாம் குர்ஆனில் பதிவு செய்துள்ளான் கீழ்கண்டவாறு….
”தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)” (அல் குர்ஆன் 9: 32, 33)
யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
மௌலானா அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி, கோவை
செப்டம்பர் 11 நிகழ்வின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் முஸ்லிம் விரோத கருத்துக்களும் இஸ்லாம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தும் செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்பவப் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்துஅதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான். இவன் ஒரு யூதன்.
மிக மிக மோசமான திரைப்படம் அது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக கீழ்த்தரமானவராக சித்தரிக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் நாவினால் அந்த வார்த்தைகளை சொல்ல முடியாது. எந்த அளவிலும் நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றச் செயலாக இந்த திரைப்படம் அப்பட்டமாக பெருமானாரை கேவல்ப்படுத்துகிறது. இத்திரைப்படத்தை தயாரித்தவ்னுக்கு மட்டுமல்ல. இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். .படத்தைப் பார்க்க்கிற எந்த முஸ்லிமும் கொதித்துப் போவார். இதற்கு முன்னாள் வேறு யாரும் இந்த அளவு கேவலாமாக சித்தரித்திருக்கிற மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இப்படம் பெருமானரை கேவலப்படுத்துகிறது.
முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை கடுமையாக வெளிப்படுத்தியும் கூட யூ டூப் இப்படத்தை அகற்ற வில்லை. அது தொடர்ந்து முஸ்லிம்களிடையே ஆத்திரத்தையும் கோபத்தையும் பெருகச் செய்துள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகிற பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் உட்பட எவரையும் கண்டிப்பதோ கைது செய்வதோ இல்லை. மாறாக கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறது.உலகம் முழுவதிலிருந்து ம் இதற்கு எதிரான கணடனக்குரல்கள் எழுப்ப பப்பட்டு வருகின்றன.
எகிப்தில் நடை பெற்ற கண்ட ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக மாறியது. எகிப்து நாட்டினர் அயிரக்கணக்கானோர் அமெரிக்க தூரகத்தை (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோஷங்களை எழுப்பினர். ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தை கண்டித்துள்ளார். போராட்டம் லிபியாவில் பரவியது. அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மக்கள் கோபத்தில் தாக்கியதில் தூதரக ஊழியர் ஒருவர் பலியானார். அங்கிருந்து தப்பித்து பாதுகாப்பான இட்த்துக்கு சென்று கொண்டிருந்து லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் தூதரக ஊழியர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். இறந்து போன தனது நாட்டவரின் உடல்களை மீட்டு வருவதற்காக உடனடியாக விமானத்தை அனுப்பிய அமெரிக்க இதுவரை இத்தனைக்கும் காரணமாக இருந்த பத்தை பற்றி எதுவும் கூறவில்லை.
இந்தப் படம் இன்னஸெண்ட் முஸ்லிம்ஸ் என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது. பெருமானாரின் தோற்றத்தில் ஒருவனை நடிக்க வைத்திருப்பதோடு பெருமானாரை பெண் பித்தராகவும் சித்தரிக்கிறது. கெட்ட வார்த்தைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. எந்த வகையிலும் அறிவுக்குப் பொருத்தமில்லாமல் வெறுப்பை மட்டுமே கொப்பளிக்கும் நோக்கில் இந்தப் படம் முட்டாள்தனமாக எடுக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தங்களது உயிரினும் மேலாக மதிப்பவர்கள். அவரது புகழ் மீது தூசு படிவதை கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள். கேரளாவில் ஒரு வன் பெருமானாரை கேலிச்சித்திரம் வரைந்த்தற்காக அவனது கை வெட்டப்படது. இப்படித்தான நடக்கும். இதை எல்லாம் தெரிந்து கொண்டே வேண்டு மென்றே முஸ்லிம்களை ஆத்திரப்படுத்துகிற நோக்கில் யூதச் சாத்தான் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளான். கிருத்துவ விஷமிகள் அதற்கு தூபம் போடுகின்றனர்.
முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பையும் வேதனையையும் முறையாக உலகிறகு தெரியப்படுத்த வேண்டும். பெருமானாரின் வரலாற்றின் மீது சேறு வீசுகிற எந்த முயற்சியும் வெற்றி பெற்றதில்லை. அதனால் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பில் எச்சரிக்கையாக – தங்களுக்கே அது பாதகமாக தேவையற்ற உயிர் இழப்புக்களையும் பொருளாதார சேதங்களையும் உண்டு பண்ணி விடாமல் – கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த ப்படம் உடனடியாக தடை செய்யப்ப்பட வேண்டும்.இந்தப் பட்த்தை வெளியிட்டவனுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.. இனி இது போன்ற அற்பத்தனமான வேலைகளில் யாரும் ஈடுபடாத வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பட்த்தை வெளியிட்ட யூடுப் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட வேண்டும்.