உடலுறவு – மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (1)
உலக வாழ்க்கையிலேயே பேரின்பத்தைக் காணலாம்! காண வேண்டும்! சுவர்க்க லோ(போ)கத்தை இவ்வுலகிற்கே கொண்டு வர வேண்டும். இந்த உடலுறவு இன்பம் சிறிது நேரத்திற்கு மட்டுமே இருப்பதால் இதை சிற்றின்பம் என்கிறார்கள். அந்தச் சின்னஞ்சிறு நேரத்தில் ஏற்படும் இன்பம் இருக்கிறதே, அது நீடித்தால் அது பேரின்பமல்லவா! அதற்குத்தான் இத்தொடர்..
காதல் என்பதே பெருமூச்சுகளின் நீராவியால் எழுப்பப்பட்ட ஒரு புகை தானே!
அது குளிர்ச்சியான தீ. காதலை தென்றலுக்கு ஒப்பிட்டால் காமத்தை புயலுக்குத்தான் ஒப்பிட வேண்டும்.
காதல் பார்வையின் மூலம் பெறுவது. காமம் தேகத்தின் வாயிலாக அடைவது.
இவ்விரு சக்திகள் இல்லாமல் வாழ்வியங்க வழியில்லை.
இவைகள் இல்லாமல் நடத்துவது இல்வாழ்க்கையுமல்ல.
குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களும், சூழல்களும், சூராவளிகளும் இந்த தாம்பத்ய உறவில்தான் அமைதியுறுகின்றன. குடும்பச் சுமையை இலேசாக்குவதே இவ்வின்பந்தான். கணவனும் மனையும் ஈருடல் ஓருயிராக ஒன்றும்போதுதான் அவ்வின்பம் அரும்பும் உடம்போடு உயிரிடம் உண்டாகி அத்தொடர்புகள் எத்தகையதோ அதேபோல்தான் கணவன் மனைவிக்கிடையேயுள்ள தொடர்பும்.
இத்தாம்பத்ய உறவில் உடலே கருவாக நிற்பதால், திருமணத்திற்கு உடனேயோ அல்லது திருமணம் நிச்சயமான நாளிலிருந்தோ அவரவர் உடற்கூற்றைப் பற்றி நன்றாய் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் பூரண இன்பத்தைப் பெற முடியும்.
உடற்கூறு தெரியாது எத்தனையோ ஆண்கள் – ஏன் பெண்கள் கூடப் பல வழியாலும் கெடுகிறார்கள்.
“சொல்லித்தெரிவதில்லை மன்மதக் கலை” என்று பொதுவாக சொல்கிறார்களேயொழிய, உடலுறவுச் சுவை பற்றி நம்மில் பலருக்கு நியாயமாகத் தெரிந்திருக்க வேண்டிய பல்வேறு உண்மைகள் கூடத் தெரியாமல் இருப்பது ஒரு விந்தைதான்.
உடலுறவில் பெண்ணுக்கு இருக்கின்ற இச்சை, ஆணின் இச்சையினின்று மாறுபட்டது. தசைக்குவியலையும், மேடுபள்ளங்களையும், வாளிப்பையும் மட்டுமே பார்க்காமல், இவற்றுக்குள்ளே பொதிந்திருக்கும் உள்ளம் எனும் பெட்டகம் இருக்கின்றதே, அதனையும் திறந்து பார்த்து, அவளை முழு மனுஷியாக சுகிக்கின்ற ஆடவன் எவனோ, அவனது உறவில் மட்டுமே அவள் சுகிக்கிறாள்.
பெண்ணுக்குள்ள இந்த நியாயமான இயற்கைப்பூர்வமான எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டுள்ள ஆடவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. பாரம் இறக்கவே, தவிப்பால் உந்தப்படும் நிலையயே பெரும்பாலான ஆடவரது நிலையாக இருக்கிறது.
சிந்தித்துப்பார்த்தால் இந்த நிலை எவ்வளவு இழிவானது என்பது விளங்கும். பொலி எருமைக்கும், கொழுத்த சேவலுக்கும் உள்ள தவிப்பும், உந்துதலும் மனிதனுக்கு இருப்பது நியாயமாகுமா? பகுத்தறிவு எனும் விவேகம் காம வேகத்தில் இழியோட வேண்டாமா?
மனைவியைக் காதலிக்கத் தெரியாமல், அவளை சுகிக்கத் தெரியாமல், அவளுக்கு சுகமளிக்கத் தெரியாமல் தவறான பாதையில் செல்கின்றவர்கள் பலர். கன்னிப்பெண்ணுடன் உறவு கொண்டால் ஆயுள் கூடும், செல்வம் கொழிக்கும் என்று எந்த பைத்தியமோ சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு ஏழை பாழைகளையும், அப்பாவிப் பெண்களையும் சீமான்கள் சீரழித்தனர்.
விளைவு! இல்லறம் மட்டும் கெடவில்லை, எங்கெல்லாம் முறைகேடாக ஆணணுக்கள் சிந்தப்பட்டதோ, அங்கெல்லாம் கேடு விளைந்தது. சத்தமில்லாமல் முளைத்த சீர்கேடுகள் இவை. ஆக, மேல் தினவுக்கு தீனி போடும் அளவிலேயே ஆடவன் இருந்து விடுகிறான். இதுவே இன்பம், அதுவே போதும் என்கிறதோர் அறியாமை அவனிடத்தில் மேலோங்கியிருக்கிறது.
தான் நுழைந்து மீளும் பெண்மையின் தன்மை பற்றியும், அதன் வளம் பற்றியும், அதன் ஆரோக்கியம் பற்றியும், தான் கவலைப்படுவது அநாவசியம் என்கிற தெம்மாங்குத்தனம் அவனிடத்தில் காணப்படுகிறது. எனவேதான், பெண்மையின் வளத்துக்குள் ஐக்கியமாகி தானும் அவளுமாகச் சேர்ந்து இன்புறும் மனித வளப் பாதை அவனது கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடுகிறது.
இந்நிலை மாற வேண்டும். பெண்ணின் உடற்கூறும் அவளுக்குள் நிகழ்கின்ற பெளதீக, ரசாயன மாற்றங்களும் ஒவ்வொரு வயது வந்த ஆடவனுக்கும் தெரிந்தாக வேண்டும். பெண்மையைப் போற்றி, அதனை உரிய முறையில் கையாள்வதன் மூலம் மட்டுமே தாம்பத்ய இன்பம் பெற முடியும் என்பது அவனுக்குப் புரிந்தாக வேண்டும். உடலுறவில் மனைவிக்கு உரிய மதிப்பும் பங்கும் வேண்டும் என்பதும், அவளை இளைப்பாற்றி, அவளுக்கு ஆரோக்கியம் சேர்ப்பதன் மூலம் மட்டுமே மனிதன் உயர முடியும் என்பதும் அவனுக்கு தெளிவாக வேண்டும்.
பெண்ணின் ஆரோக்கியத்திற்கும், உளப்பாங்கிற்குக்கூட அவளது செக்ஸ் உணர்வுகளே அடிப்படை
பெண்ணின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவளது உளப்பாங்கிற்குக்கூட அவளது செக்ஸ் உணர்வுகளே அடிப்படையாய் அமைகின்றன. இந்த செக்ஸ் உணர்வுகள் பாதிக்கப்படும்போது அவளது நடவடிக்கைகளும் பழகும் பாங்கும் புரண்டு போகின்றன. இதனால் ஹிஸ்டீரியா எனும் நோயினால் அவள் பாதிக்கபாடுகிறாள்.
பெண்ணின் மிக உன்னதமான உருப்பான கருப்பையும், அதன் இணை உறுப்புகளும் பெண்ணுக்குள்ளே உலக மகா அதிசயங்களையெல்லாம் நிகழ்த்துவதைப்பற்றி எந்த ஆணும் சிந்தித்துப்பார்த்ததாகத் தெரியவில்லை.
பெண்ணின் கருப்பையிலிருந்து வளர்ந்து எழும் உணர்வுகளுக்கு நல்ல வடிகால் கிடைத்து விடுமேயானால், முறையான, ஆரோக்கியமான ஆண் உறவு அவளுக்கு மறுக்கப்படாமல் கொடுக்கப்படுமேயானால், அத்தகையதொரு பெண் நல்ல ஆரோக்கியமானவளாக, பழகுவதற்கு இனிமையானவளாக, நல்ல ஆளுமையும், தெளிந்த சிந்தனையும் உடையவளாக இருப்பாள்.
ஒரு பெண் வாய் குழம்பித் தடுமாறுவது, உடல் நடுங்குவது, ‘ஓ’வெனக் கத்துவது, கத்தி முடித்துவிட்டு மயங்கி விழுவது, சதா சிடுசிடுவென இருப்பது, வீட்டிலுள்ளவர்கள்மீது மட்டுமின்றி மற்றவர்களிடமும் எரிந்து விழுவது, பிறரை அடக்கி ஆளவேண்டும் என்று குறியாய் இருப்பது, அது இயலாத பட்சத்தில் தன்னைத் தானே அடித்து வருத்தி, பச்சாதாபம் தேடுவது, வீட்டுக்குள்ளேயே சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்வது, இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்று இருந்துவிட்டு, பின்னால் புரளி பேசிக் குழி பறிப்பது – இது போன்ற எத்தனையெத்தனையோ குளறுபடிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவையாவும் திருப்தியான உடலுறவு கிடைக்காததனால் உண்டான ஹிஸ்டீரியா நோயினால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பாகும்.
இது மட்டுமா… பிற பெண்களின் கற்பைப் பழிப்பது, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுப் பார்ப்பது போன்ற சில்மிஷங்களும் இதில் அடங்கும். ஒரு நல்ல பெண் ஹிஸ்டீரியாவினால் எத்தனை தூரம் சோர்ந்து போகிறாள் என்பதனை அனுபவ ரீதியாகப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
ஆரோக்கியமான ஒரு மனைவி, தன் கணவனிடம் முதலில் எதிர்பார்ப்பது இணக்கத்தையும், நெருங்கிய உறவையும் மட்டுமே. அவள் மீது நம்பிக்கையும், பாசத்தையும் வைத்திருப்பவனாக, விசுவாசத்தோடு அவளுடன் கூடுபவனாக இருக்கும் பட்சத்தில் மனைவி அவனுக்காக உயிரையே தருவாள். அவன் நொண்டியாக இருந்தாலும், செவிடனாக இருந்தாலும், முடமாகிப்போனவனாக இருந்தாலும் அவனைத் தாங்கி நிற்பாள்.
அவளது கருப்பையிலிருந்து கிளர்ந்தெழும் ஆதங்கமும், எதிர்பார்ப்பும் உரிய முறைப்படி தணிக்கப்படுவதால், அவள் குளுமையில் உயர்ந்தவளாக, நல்ல குணாதிசயங்கள் நிறைந்தவளாகத் திகழ்வாள். மலிவான வாயில் சேலையில் கூட பளிச்சென்று தெரிவாள். மாறாக, ஆளுமை பிறழ்ந்த பெண்களை என்னதான் ஜோடித்தாலும் நெஞ்சின் வேக்காடு முகத்தில் கொப்பளிக்க, கர்ண கொடூரமாய், வறட்சியாக தெரிவாள்.
நல்ல வசதியுள்ள குடும்பத்துப் பெண்களில் பலரிடம் இத்தகைய வறட்சியைக் காணமுடியும். கட்டுவது ஃபாரின் புடவையாகத்தான் இருக்கும், கழுத்தில் கணக்கிலடங்கா செயின் இருக்கும், மூக்கும் காதும் டாலடிக்கும், அழகுக்குறிப்புகள் அத்துபடி ஆகியிருக்கும். இவை அத்தனையும் இருந்தாலும் கூட அந்த முகத்தில் அழகோ செழிப்போ புலப்படாது. ஒருவித வேக்காடுதான் தெரியும். காரணம், முறையான நெறியான ஆண் உறவு இல்லாமையே!
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உடற்கூறு ரீதியான (அதனால் உளரீதியான) செக்ஸ் கோளாறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. பெண்களின் நிலவரம் என்னவென்று பார்ப்போமானால் அது சுத்த சூன்யமாகத்தான் இருக்கிறது. நமது நாட்டில் வயது வந்த பெண்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து பேருக்கு தமது உடற்கூறு பற்றிய ஞானமே இல்லை. மணமான பெண்கள்கூட ஏதோ படுத்தோம், எழுந்தோம், பெற்றோம், வளர்த்தோம் என்கிற கதியில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அறியாமையை என்னவென்பது?!
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.