அமெரிக்க நெருக்கடியின் மற்றொரு கோரமுகம்!
நெருக்கடியால் பாலியல் தொழிலில் அமெரிக்க மாணவிகள்!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் அண்மையில் அமெரிக்கக் காவல்துறையிடம் சிக்கினார்கள்.
அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு இந்தத் தொழிலில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
காவல்துறை மேலும் விசாரித்தபோது, இத்தகைய தொழில்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் ஏராளமான குழுக்கள் இயங்கி வருகின்றன.
அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்கெனவே செய்து வந்த செலவைச் செய்ய முடியாத நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்தக் கும்பல்கள் இறங்கியிருக்கின்றன. அதில் சிக்கியவர்கள்தான் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஒரு பகுதியான ஃபேர்பாக்சில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்தக் கும்பல்கள் பள்ளிக்கூட வளாகங்கள், சமூக ஊடகக்குழுக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்றவற்றில் 16, 17 மற்றும் 18 வயது மாணவிகளைக் குறிவைத்து இயங்குகின்றன என்று காவல்துறை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.
ரவுடிகளின் துணையோடு தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பாலியல் தொழிலில் இந்த மாணவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருமுறை ஒப்புக்கொண்டபிறகு, அதில் ஈடுபட மறுத்தவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இதில் ஈடுபட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியான தேவைகளுக்காகவே சம்மதித்திருக்கிறார்கள் என்று காவல்துறை கூறுகிறது. அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்களும் அதை உறுதிப்படுத்துகிறது. இந்த பாலியல் மோசடிக் கும்பலின் தலைவர் என்று கருதப்படும் ஜஸ்டின் ஸ்ட்ரோம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாணவிகளில் ஒருவர் சம்மதித்தபிறகு, தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
கத்தி முனையில் இந்த ஜஸ்டின் ஸ்ட்ரோம் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து தனது மோசடித் தொழிலைச் செய்து வந்த ஜஸ்டின் ஸ்ட்ரோமுக்கு பொருளாதார நெருக்கடி உதவியிருக்கிறது. காவல்துறை வசம் சிக்கியுள்ள ஸ்ட்ரோமுக்கு ஆயுள் தண்டனைதான் என்றாலும் இன்னும் பல ஸ்ட்ரோம்கள் அமெரிக்காவில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நெருக்கடி முற்றி வருவதால் இதுபோன்ற அவலங்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றேர்களில் சிலர். அரசின் கல்விக்கட்டணக் கொள்கை உள்ளிட்டவை மாறாமல் நிலைமையில் மாற்றம் ஏற்படாது என்கிறார்கள் அவர்கள்.அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வர்ஜீனியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞரான நீல் மக்பிரைடு கூறுகையில், தொடர்ந்து பல வாரங்கள் இந்த மாணவிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மாணவிகளாவர். இவர்கள் அனைவரும் 16 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு போதை மருந்து தரப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அப்படியும் ஒத்துழைக்காத மாணவிகள் அடித்து, துன்புறுத்தப்பட்டனர். மாணவிகளின் பெறறேர்களுக்கு ஒவ்வெரு இரவும் நிம்மதியில்லாமல் கழிகின்றன. எப்போது வேண்டுமானாலும் தங்கள் மகள் காணாமல் போய்விடலாம் என்று அச்சப்படுகிறார்கள்.
ரவுடிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதை ஒவ்வெரு நாளும் அவர்களால் பார்க்க முடிகிறது. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார். 28 லட்சம் பேர் நடுத்தெருவில்…வீட்டை விட்டு ஓடிவந்த மற்றும் குடியிருக்க வீடில்லாத இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்கள் 28 லட்சம் பேர் அமெரிக்கத் தெருக்களில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் சுரண்டலுக்கு உட்படும் ஆபத்தில் உள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல் ஆய்வு வலைத்தளம் தரும் விபரங்களின்படி, 2007 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 300 பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புள்ளிவிபரம்தான் கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் கடத்தப்படுபவர்களில் 80 சதவிகிதம் பெண்களாகவும், சிறுமிகளாகவும் இருக்கிறார்கள். அதிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
source: maattru.com