சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை அழைப்பு விண்ணப்பிக்க ஆக.15 கடைசி
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், புத்த, சீக்கிய, பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2012-2013ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலமாக 2012-2013ம் ஆண் டில் கல்வி உதவித்தொகை பெறக்கூடாது.
மாணவ, மாண விகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 15ம் தேதி. மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டியலை உரிய படிவத்தில் பதிந்து சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக் குள் கல்வி நிலையங்கள் ஒப்படைக்க வேண்டும்.
சிறுபான்மையின மாணவ, மாண விகள் கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
source: www.kiliyanur.net/