பித்அத்துக்களில் ஈடுபடுபவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது!
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினர்
[ நபி வழி, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் போன்ற இரண்டையும் புறக்கணிப்பவர்களோ பித்அத்துக்களில் ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்பட எந்த அருகதையும் அற்றவர்களாவர். மேலும், அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர். இது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். (ஷரஹுஸ் ஸுன்னா: 78) (மணாருத்தஃவா)]
இமாம் நாஸிர் அஸ்ஸஃதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது, “தௌஹீத், இறைத் தூது, விதி, ஈமானின் கடமைகள் போன்ற விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் சில அடிப்படைகளைப் பின்பற்றி நடந்துள்ளனர். எனவே, பித்அத்துக்களில் ஈடுபடாமல் அவர்கள் பின்பற்றிய அதே அடிப்படைக் கொள்கைகளைப் பேணி நடப்பவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினராவர்” (அல்-பதாவா அஸ்ஸஃதிய்யா: 63)
இது பற்றிப் பல அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது,
குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து முரண்பாடில்லாத முன்மாதிரிகள், இஜ்மா ஆகிய அடிப்படைகளைப் பின்பற்றி நடந்த நம் முன்னோர்களும், இன்றுவரை அவற்றைப் பின்பற்றுகின்ற அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்படுவர். அவ்விடயத்தில் அறிஞர்கள், பாமரர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை.
ஒரு மனிதன் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவன் என்று சொல்வதற்கு அவரிடம் மூன்று அடிப்படைகள் இருக்க வேண்டும். அவை:
1. குர்ஆன், ஹதீஸ் பற்றிய அறிவு
2. அவற்றின் அடிப்படையில் செயற்படுதல்
3. வழிகெட்ட கொள்கைகள், பித்அத்துக்கள் போன்றவற்றில் ஈடுபடாதிருப்பதோடு, அவற்றில் ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி நடத்தல்.
எனவே, நபி வழி, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் போன்ற இரண்டையும் புறக்கணிப்பவர்களோ பித்அத்துக்களில் ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்பட எந்த அருகதையும் அற்றவர்களாவர். மேலும், அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர். இது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். (ஷரஹுஸ் ஸுன்னா: 78). (மணாருத்தஃவா)