தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு
ஷெய்க் பைஸல் மவ்லவி
தேர்தல் என்பது சட்ட ரீதியான பிரச்சினைகளுக்காகவும் ஆட்சியைத் தெரிவு செய்வதற்கும், அந்த ஆட்சிக்குரிய தமது ஆதரவை வழங்குவதற்கும் உரிய இடமாகும். அது மக்கள் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்கான நவீன வழிமுறையாகும்.
ஒரு முஸ்லிம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அது இஸ்லாமிய சமூகமாகவோ அல்லது முஸ்லிம் சிறுபான்மையாகவோ அல்லது பலமத மக்கள் வாழுகின்ற சமூகமாகவோ இருந்தாலும் சரியே, அந்த முஸ்லிமுக்கு பின்வருவன எந்த நிலைமையிலும் கடமையாக இருக்கின்றன:
அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு விடுதல், நன்மையை ஏவி, தீமையைத்தடுத்தல், இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் தான் வாழும் சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதல். அந்த சமூகம் முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான, தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாக இருந்தால் அதனை வீணடித்து விடக்கூடாது.
அந்த சந்தர்ப்பத்தின் மூலமாக சில பாவங்களை நீக்குவதற்கான அல்லது சில நன்மைகளைப் பரப்புவதற்கான அல்லது மனிதர்களை விட்டும் அநீதியை ஒழிப்பதற்கான அல்லது அனைவரையும் பாதிக்கும் தீங்கை நாட்டை விட்டும் தூரமாக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். இந்த நல்ல காரியத்தின் பலனை முஸ்லிம்களும் அனுபவிப்பார்கள்.
ஒரு முஸ்லிம் இவ்வாறான சந்தர்ப்பத்தை விட்டும் பின்வாங்குவது நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தனது ஷரீஆ ரீதியான கடமையை நிறைவேற்றுவதில் குறைவுவிட்டதாகக் கொள்ளப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு பாவத்தைக் கண்டால் தனது கையால் தடுக்கவும். அதற்கு முடியாவிட்டால் தனது நாவினால் தடுக்கட்டும்”
நாவால் தடுப்படு என்பது செயல் ரீதியாக தடுப்பதாக அமையமாட்டாது. மாறாக பாவத்தை வெறுப்பதாகவே அமையும்.
பாவத்தை தடுப்பதற்கான முக்கிய ஒரு வழிமுறைதான் மக்கள் பிரதி அதனைப் பற்றி பேசுவதாகும். அந்தப் பேச்சை மக்கள் சமூகம் ஏற்றுக்கொள்ளும், அதனை ஊடகங்கள் அனைத்திடங்களுக்கும் பரப்பி விடும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
source: meelparvai.net