எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பேரிடி விழும்: ஈரான் எச்சரிக்கை!
ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை!
அரசு வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களிடம் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை!
எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பேரிடி விழும்: ஈரான் எச்சரிக்கை!
டெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இஸ்ரேல் மீது பேரிடிதான் விழும் என்று அந்நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் அவர் கூறியதாவது:
எங்கள் மீது ஈரான் ஏதாவது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பேரிடி விழுவது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும்
ஈரான் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று ஒரு பொய்யை வைத்துக் கொண்டு எங்களை சர்வதேச சமூகம் சந்தேகிக்கிறது. எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைதான் எங்களது மனத் துணிவை பலப்படுத்தியிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்த அடையாளமோ, ஆதாரமோ இல்லாததால், ஈரானுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக எங்கள் பரம எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் எங்களை அவமதித்து வருகின்றன.
ஈரான் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பேரிடியாக விழும். சர்வதேச அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், ஈரானை ஒரு ஆபத்தான நாடாகவும் சித்தரித்து வருகின்றன. இது ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய பொய்யான தகவல்களால் அவர்கள் ஈரானுக்கு துரோகம் செய்கின்றனர் என்றார் அவர்.
எகிப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை
கெய்ரோ: முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு கெய்ரோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்ற வருடம் கெய்ரோவில் நடைபெற்ற ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிகெதிரான ஆர்பாட்டத்தில் பொது மக்கள் பங்கேற்ற போது சுமார் 850 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் எழுச்சிக்கு பிறகு முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யபட்டு விசாரிக்க்பட்ட அவர் மீது ஆர்பாட்டக்காரர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.மேலும் முபாரக் அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த ஹபில் அல் அத்லிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குற்றம் நிருபிக்கப்படாததால் முபாரகின் இருமகன்களும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளியான உடன், நீதிமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் திரண்டு இருந்த மக்கள் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர்.
கொல்லப்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் ஒருவரின் மனைவி தீர்ப்பு குறித்து பேசுகையில், முபாரக்கிற்கு மரண தண்டனை விதிக்கபட்டிருக்க வேண்டுமென கூறினார். இதற்கிடையே கெய்ரோவின் சில இடங்களில் முபாரக் ஆதரவாளர்களுடன் மக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். தீர்ப்பை தொடர்ந்து கெய்ரோ முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு இருந்தது.துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி எகிப்திலும் பரவி,30 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த ஹோஸ்னிமுபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்று புள்ளி வைத்தது. ஆயுள் தண்டனை பெற்ற முதல் அரேபிய ஆட்சியாளர் என்ற பெயரையும் முபாரக் பெற்றார்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட போது மருத்துவப் படுக்கையில் படுத்து கொண்டு தீர்ப்பை கேட்டார். தீர்ப்புக்கு பிறகு அவர் சோகத்துடன் காணப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களிடம் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை!
புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அவசர உதவி விநியோகத்தில் மத்திய அரசு வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.
ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு கூடுதல் தொகை அளிக்கப்படும் வேளையில் வளைகுடாவின் பணிபுரியும் இந்தியர்களுக்கு துச்சமான உதவித் தொகையே அளிக்கப்படுகிறது.
21.7 கோடி ரூபாய் அவசர உதவி தொகையாக பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் செலவழித்துள்ளன. செலவின் சராசரியை கணக்கிட்டால் இதர நாடுகளுக்கு அளித்து வரும் உதவித்தொகையை விட மிக குறைவான உதவித்தொகையே வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு 6,09,930 ரூபாயும், பிரான்சில் ஒருவருக்கு 1,85,162 ரூபாயும், சீனாவில் ஒருவருக்கு 1,37, 411 ரூபாயும் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் விநியோகம் செய்த உதவித்தொகையும் சராசரியாக ஒருவருக்கு ஒருலட்சம் ரூபாய்க்கு அதிகமாகும். பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஒருவருக்கு ரூ.60 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
அதேவேளையில் வளைகுடா நாடுகளில் விநியோகம் செய்த தொகை மேற்கண்ட நாடுகளில் விநியோகிக்கப்பட்ட தொகைக்கு பத்தில் ஒரு மடங்கை விட குறைவாகும். சராசரியாக ஒருவருக்கு கிடைத்த உதவித்தொகை பஹ்ரைனில் 4880 ரூபாயும், ஒமானில் 4463 ரூபாயும், குவைத்தில் 7916 ரூபாயும், சவூதி அரேபியாவில் 14,736 ரூபாயும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 19862 ரூபாயும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபெயர் ஃபண்ட் என்பது வேலைப் பிரச்சனைகளில் சிக்கியவர்களுக்கு சட்ட உதவி, தாயகம் திரும்புவதற்கான செலவு, மரணித்தவர்களின் உடலை தாயகம் கொண்டுவருவதற்கான செலவு உள்ளிட்ட காரியங்களுக்காக செலவழிக்கப்படும் நிதியாகும்.