முஸ்லிம்களுக்கு உதவுங்கள்; உபத்திரம் செய்யாதீர்கள்!
டாக்டர் ஏ பீ.முஹம்மது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
சமுதாய சொந்தங்களுக்கு சமீப கால நடவடிக்கைகளையும், அதில் நம்மவர் செயல் முறைகளையும், சமீப கால அரசு நடவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகளுக்கும் நமது சமூதாய மக்களுக்கு விளக்கி, எந்த விதத்திலும் உங்கள் நடவடிக்கை முஸ்லிம் மக்கள் சலுகை பெற தடையாக இருக்கக் கூடாது என்பதினை வழியுறித்தி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது:
1) அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 30 படி கல்வி நிறுவனங்களை நிறுவவும், செயலாட்சி செய்யவும், சிறுபான்மையிரின் உரிமை. கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வதில் சமய அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ சிறுபான்மையிரால் உள்ளவர்களின் மேலாண்மையில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி கல்வி நிறுவனம் எதற்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டக் கூடாது.
ஆனால் சிறுபான்மையிரில் கல்வி நிறுவனத்தின் உரிமையானது, மாநில அரசின் ஒழுங்கு முறைப் படுத்தும் வழி முறைகளுக்கு கட்டுப் பட்டதாகும் என்று உச்ச நீதி மன்றம் ஜோசப் டீச்சர் ட்ரைனிங் கல்லூரி மற்றும் மாநில அரசின் வழிக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மைனாரிட்டி அந்தஸ்துக்காக மாநில அரசிடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஒரு வருடத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் தேசிய சிறுபான்மை ஆணையகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்ற முறையினை பல கல்வி நிலையங்கள் அறியாமல் உள்ளன. அப்படி விண்ணப்பிக்கும் போது, கல்வி நிறுவனம் முஸ்லிம் மைனாரிட்டி மாணவர்களுக்காகவும், மற்ற மாணவர்களுக்க்காகவும் நடத்தப் படுகிறது என்று விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
9.5.2012 அன்று பாராளு மன்றம் ஆறு வயதிலிருந்து பதினாறு வயதுள்ள குழைந்தைகளுக்கு கட்டாய கல்வி என்ற சட்டத்தினை நிறைவேற்றி உள்ளது. அதாவது அனைத்துக் குழந்தைகளும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும். அத்துடன் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆகவே சமுதாய மக்கள் இந்தத் தருணத்தினை விட்டுவிடாது அனைத்து முஸ்லிம் குழந்தைகளையும் கல்வி நிலையம் செல்ல வழி வகுக்க வேண்டும்.
சில முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம் அல்லாத நபர்களை தேடிச் சென்று அல்குரானை வழங்கும் பழக்கத்தினையும், அடுத்த மதத்தினவருடன் விவாதங்கள் நடத்துவதினையும் பத்திரிக்கை வாயிலாக பார்க்கின்றோம். சில ஹோட்டல் அறைகளில் இலவசமாக பைபிளை வைத்திருப்பதினை காணலாம். எத்தனை முஸ்லிம் சகோதரர்கள் அதனை எடுத்துப் படித்திருப்பார்கள் என்றால் ஒரு சதவீதம் கூட தேறாது.
நாம் சில சமயங்களில் ரோட்டில் நடந்து செல்லும்போது சில கிருத்துவர்கள் நின்றுகொண்டு மதபோதனை பிட் நோட்டிசுகளை விநியோகித்துக் கொண்டிருப்பதினை காணலாம். உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள். கீழே தூக்கி எறிந்து செல்வீர்கள். அதுபோன்ற நிலை அல்குரானுக்கும் மாற்று மதத்தினரிடமிருந்து வந்து விடக் கூடாது. ‘உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு’ என்ற கொள்கையினை மேற்கொண்டு நமது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியினையும், உலகக் கல்வியினையும் வழங்க இது சிறந்த சமயம், அதனை நழுவ விடக்கூடாது.
2) உச்ச நீதி மன்றம் 8.5.2012 அன்று ஹஜ் பயணச் சலுகைகளை பத்து வருடத்திற்குள் குறைத்து நிறுத்தி விட வேண்டும் என்று மத்திய அரசினை கேட்டுக் கொண்டுள்ளது.
அதனை வரவேற்றும், எதிர்த்தும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அறிக்கையினை விடுவதைப் பார்க்கலாம்.
‘வாகன, தங்கும் இட வசதி உள்ளவர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது’ யாரும் மறுக்க மாட்டார்கள்.
ஆனால் இந்திய திருக் கண்டத்தில் அறுபது சதவீத மக்கள் சமூக, கல்வி, பொருளாதாரத்தில் தலித் மக்களைவிட பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லும்போது தங்கள் வாழ்நாளில் எங்கே பெரும்பாதியான முஸ்லிம்கள் ஹஜ் செல்ல முடியும். அரசு உதவியில்லாமல் அரசு மானியம் பெரும் நவாப்களும், செல்வந்தர்களும், ஸ்டார் ஹோட்டல் முஸ்லிம் முதலாளிகளும் தான் ஹஜ் பலனை அனுபவிக்க முடியும். அனால் அதே மதத் தலைவர்களும், செல்வந்தர்களும், அரசு வழங்கிய மற்ற சலுகைகளையும், டி.வி. காஸ் அடுப்பு, மிக்சி, போன்ற இலவசங்களை வாங்க வில்லை என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று கேளுங்கள்.
குறைந்த பட்சம் நவாப் தனது சொகுசுக் காரில் பறக்கும் கொடியினையும், அரசு சலுகையினையும் விட்டுத் தந்து சாதாரண குடிமகனாக நடமாட தயாரா என்று கேட்டுப் பாருங்கள். முடியாது என்பார்கள்.,
இந்தியாவில் புண்ணியத் தளங்களாக உள்ள இமயமலை திபெத் எல்லையில் இருக்கும் மானசரோவர், மற்றும் காஷ்மீரில் இருக்கும் பத்ரிநாத் கோயிலுக்கும் செல்ல சலுகைகள் இருக்கும்போது மைனாரிட்டி முஸ்லிம்கள் சலுகையினுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு. அதுவும் பணக்கார முஸ்லிம்களிகளிருந்தும், சில காரணங்களுக்காக மக்கா செல்ல இயலாத சமுதாய தலைவர்களிடமிருந்தும் வருவது ஏன் என்று தெரியவில்லை.
ஏற்கனவே அரசு 25 சதவீத வருமானத்தினை மக்கள் சமூக நலன் கருதி செலவழிக்கலாம் என்ற நீதி மன்ற தீர்ப்பு இருக்கும்போது அரசு ஹஜ் பயண செலவிற்கு சலுகைகளை வழங்குவது தவறாகாது என்று அரசிடம் சொல்லி உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு மறு ஆய்வு செய்ய குரல் எழுப்ப வேண்டும். அத்துடன் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் லீகும், மற்ற சமுதாய இயக்கங்களும் அரசிடம் கோரிக்கையினை வைப்பதோடு, மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்ய வேண்டும்.
3) சாதி கணக்கெடுப்பு:
மத்திய அரசு கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறிய சமூகம், பின் தங்கிய சமூகம் என்று அறிந்து சலுகைகளை வழங்குவதிற்காக சாதி வாரி கணக்கு எடுக்கப் படுகிறது. ஏற்கனேவே முஸ்லிம் சமூதாயம் அரசு சலுகைகளுக்காக லெப்பை, தக்கினி,மாப்பிளா, தெலுகு பேசும் வகுப்பினர் என்று கணக்கு எடுத்து அதன்படி கல்விக்காகவும், வேலை வாய்ப்பிலும் சலுகை வழங்கப் படுகிறது. தற்போது எடுக்கப் படும் கணக்குப் படி துல்லிதமாக சலுகைக்கு தகுதியான சமூகம் எது என்று பார்பதிற்காக கணக்கெடுப்பு நடத்தப் படுகிறது.
உடனே ஒரு மேதாவி இமாம், வெள்ளிகிழமை பிரசங்கத்தில் தனது முகம் இரவு டி.வியில் தெரிவதிற்காக அனைவரும் முஸ்லிம் என்று தெரிவியுங்கள், சாதி உட்பிரிவு இல்லை என்று தெயவியுங்கள் என்று கூறியுள்ளார்.
சிலருக்கு தங்களை பஞ்சாபின் தீவிரவாத தலைவர் பிந்தரன் வாலே என்று நினைப்பு. அதுதான் முஸ்லிம் மக்களை எந்த சலுகையும் பெறாமல் படு குழியில் தங்கள் பிரசங்கம் மூலம் தள்ளப் பார்க்கிறார்கள்.
கணக்கெடுப்பில் மதம் என்ற இடத்தில் இஸ்லாத்தினையும், சலுகைக்கான உட்பிரிவில் லெப்பையோ, தக்கினியோ மற்ற இரு பிரிவினையோ சொல்ல வேண்டும். அப்போது தான் நமக்கு சலுகை கிடைக்கும். இஸ்லாம் மதமில்லா மார்க்கமானாலும் கணக்கெடுப்பில் இஸ்லாமிய மதத்தினவர் என்றே சொல்ல வேண்டும்.
அதே போன்று தான் முக்குலத்தோர் பல பிரிவு இருந்தாலும், சலுகைக்காக அகமுடையார் என்று குறிப்பிட வேண்டும் என்று அந்த தலைவர் சொல்லும்போது, நமது இமாமிற்கு மட்டும் எப்படி இந்த ஞானோதயம் வந்தது என்று தெரியவில்லை. ஆகவே சமுதாய இயக்கங்களும், மார்க்க தலைவர்களும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் பெற்றுத் தர உதவ வேண்டுமே தவிர, தடைக்கல்லாக இருக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
4) 7.5,2012 அன்று இந்திய சிவில் செர்விசெஸ் பரீட்சை முடிவுகள் அறிவிக்கப் பட்டன. அந்தப் பரிட்சையினை நாலரை லட்சம் போட்டியாளர்கள் எழுதி உள்ளனர். அதில் முஸ்லிம்கள் 1200 பேர்கள் ஆகும்.
அதில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் 29 பேராகும். அது 15 சதவீதம் கொண்ட இந்திய முஸ்லிம்களில் 2.3 சதவீதமே ஆகும்.
இன்னும் கூட முஸ்லிம் கல்வி நிலையங்களும், சமூதாய அமைப்புகளும் முனைப்பு எடுத்து முஸ்லிம் மாணவர்களை சிவில் செர்விசெஸ் மத்தியிலும், மாநிலத்திலும் எழுத தயார் செய்யவில்லை என்பதே இந்தக் கணக்கு காட்டுகின்றது.
சிலர் பயிற்சி மையம் என்று போலியாக ஆரம்பித்து முஸ்லிம்களை திசை திருப்புகிறார்கள். ஒரு இமாம் I.A.S பயிற்ச்சி மையம் ஆரம்பித்திருப்பதாக சொல்லி, தொழுகை நடத்துவதினை விட்டு விட்டு, ஊரெல்லாம் பவனி வருகிறார். அவர் I.A.S என்று சொல்லுவதிற்கு ‘இஸ்லாமிய அட்மிநிச்ற்றேடிவ் சர்வீஸ்’ என்று விளக்கம் தருகிறார் என்றால் பாருங்களேன். அவர் எப்படி அறிவு ஜீவியாக இருப்பார் என்று. வீணான விளக்கங்களைத் தராது வழி தெரியாத முஸ்லிம் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க கல்வி நிலையங்களில் பயிற்ச்சி மையம் நடத்தி வழி காட்ட வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்களை, சமூதாய மக்களை நம்மால் இயன்ற அளவு நல்வழி காட்ட வேண்டும். அவ்வாறு முடிய வில்லை என்றால் அவர்கள் முன்னேற எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருக்ககூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
AP,Mohamed Ali