Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வார்த்தையில் மட்டும் பேணப்படும் ‘சமத்துவம்..!’

Posted on May 24, 2012 by admin

          வார்த்தையில் மட்டும் பேணப்படும் ‘சமத்துவம்..!’             

வாகனத்தின் சக்கரம், வீட்டின் மின்விசிறி! இரண்டும் சுழலும் தன்மையுடையது, தேவைக்கேற்ப அதன் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். மனிதனின் அடிப்படை வசதிக்கு இன்றியமையாத பயன்பாட்டை தருகிறது.

இப்படி இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள ஒரு சில பொதுவான விசயங்களை எடுத்துக்கொண்டு வாகனத்தின் சக்கரமும், வீட்டின் மின்விசிறியும் அடிப்படையில் சமமானது என உங்களிடம் ஒருவர் வாதிட்டால் அவரை என்ன சொல்வீர்கள்ஸ.?

இதைப்போலதான் சமூகத்தின் சில தவறான புரிதல்களால் ஆணும் -பெண்ணும் சமம் என்ற பேச்சு நடைமுறையில் இருக்கிறது., ஆணும் பெண்ணும் சமமா -சமமில்லையா என பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும் அதற்கு முன்பு இவர்களை ஓப்பிட்டு பார்க்க முனைவது அறிவுப்பூர்வமானதா..?

பொதுவாக, ஒப்பிடப்படும் இருப்பொருட்கள் அல்லது இரு நிலைகள் ஒரே அளவு, தன்மை, மற்றும் இயல்பியல் பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவற்றிற்கிடையே ஒப்பிட்டு அதனை சமன் செய்ய முடியும்.

அஃதில்லாமல் இரண்டிற்கு மத்தியில் இருக்கும் ஒரு சில பொதுவான ஒற்றுமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டையும் சமன் செய்ய முற்பட்டால் நமக்கு தெளிவான முடிவுகள் கிடைக்காது.

மேலும், ஒப்பிடப்படும் இரண்டு நிலைகளின் உண்மை நிலையை அறிய அவை இரண்டும் அல்லாத மூன்றாம் மூலத்திலிருந்து இவற்றை அணுகினால் மட்டுமே நம்பகதன்மை வாய்ந்த விடை நமக்கு கிடைக்ககூடும். ஆனால் இங்கே ஆணையும் பெண்ணையும் ஒப்பிடுவது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோவாக தான் இருக்க முடியும்.

அதனால் சமம் என்று சொன்னாலோ சமமில்லை என்று சொன்னாலோ அது சந்தர்ப்பவாத சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும். ஆக இரண்டு விடைகளில் எந்த ஒன்று உண்மையாக இருக்க முடியும் என்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் எதில் இருக்கிறது என்று ஆராய்வதே இங்கே அறிவுப்பூர்வமானது.

ஆணையும் பெண்ணையும் ஒப்பிட வேண்டுமானால் இருவரும் அடிப்படையில் ஒரே தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் பேச்சு, செயல், நகைச்சுவை, உணர்வுகள், அறிவுத்திறன் போன்ற பொதுவான படைப்பியல் ஒற்றுமைகளை தவிர உடலியல் ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் பல வேற்றுமைகள் இருவருக்குமிடையே இருக்கிறது. அதிலும் இருக்கும் ஒற்றுமைகளில் கூட நிலையான சமன்பாடு கிடையாது. இடத்திற்கு கால சூழ் நிலைக்கு தகுந்தார்போல் இருவருக்குமிடையே திறன்கள் மாறுபடும்.

உடலியல் அமைப்பை எடுத்துக்கொண்டால் இருவரும் சமமான நிலையை பெற்றிருக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் எளிதாக அறிவோம். ஏனெனில் நீண்ட தூர பயணம், அதிகப்படியான வேலைப்பளு, விரைவான ஓட்டம் இப்படி அதிகமாக அல்லது வேகமாக செயல்படும் நிலையில் ஆண்களை விட பெண்கள் முன்னமே களைப்படைந்து விடுகிறார்கள்.

குணாதிசயங்களை எடுத்துக்கொண்டாலும் இருவருக்குமிடையே தெளிவான வேறுபாடு. ஆண்களை காட்டிலும் பெண்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், அதிக இரக்க மனப்பான்மை கொண்டவர்கள். பொறுமை அதிகம் கொண்டவர்கள். வெட்கம் எனும் பண்பு அவர்களிடத்தில் மிக மிக அதிகம். இதற்கு அடையாளமாக தான் ஆண்கள் அணியும் ஆடைகளை விட கூடுதலாகவே பெண்கள் உடை அணிந்தே உலா வருகிறார்கள்.

அடுத்து முக்கியமாக பொது வாழ்க்கையில் இருவரும் ஒரே மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அடுத்தவருக்கு உதவுதல், பிறரை மதித்தல் போன்ற நன்மையான விசயங்களில் இருவருக்குமிடையே ஒரளவு சமமான நிலை நிலவினாலும், சிகரெட், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். வன்முறை, கலவரம் போன்ற தகாத செயல்களில் ஆண்களை காட்டிலும் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவே.,

உடலியல்க்கூறுகள், பண்பியல் மற்றும் சமூகரீதியான செய்கைகளில் பெண்களும் ஆண்களும் சமமான நிலையில் இல்லவே இல்லை. இப்படி சமமற்று இயங்கும் இரு நிலைகளை பொதுவில் வைத்து சமம் என்று வர்ணித்தால் அது எப்படி அறிவார்ந்த வாதமாகும்? வார்த்தையில் மட்டும் பேணப்படும் சமத்துவம் என்பதாக தான் பொருள்படும்.

இருவரும் அடிப்படையில் சமமானவர்கள் இல்லை என்பதை நடைமுறைகளில் காணப்படும் சாத்தியங்களை வைத்து தர்க்கரீதியாகவும் நிருபிக்கலாம்.

இன்றும் சென்னைப்போன்ற பெருநகரங்களில் பெண்கள் மட்டும் தனியாக பயணம் செய்யும் பொருட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுப்போலவே இரயில்களிலும் இரண்டு கம்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. இது எதற்காக…? பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காகதான் என சொல்வீர்களேயானால்.. அதே சிரமம் ஆண்களுக்கும் இருக்க தானே செய்கிறது. ஆனால் எங்கும் பிரத்தியேகமாக ஆண்களுக்கென்று எந்த பேருந்தோ, ரயில்களோ இயக்கபடுவதில்லை.

அதுமட்டுமா, இன்று விவாகரத்து கோரும் தம்பதியரில் தீர்ப்புக்கு பிறகு பெண்களுக்கே ஜீவானம்சம் வழங்கப்படுகிறது, மாறாக ஆண்களுக்கு எந்த பெண்ணிடம் இருந்தும் வாழ்வாதரம் வாங்கி தரப்படுவதில்லை.

பொதுவாக, பெண்களின் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரையோ அல்லது கணவனின் பெயரையோ இணைத்து கூறும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. எந்த ஆணின் பெயரோடும் தம் தாய் அல்லது மனைவியின் பெயர் இணைத்து முன்மொழியப்படுவதில்லை. ( சில மேலை நாடுகளில் வேண்டுமானால் இந்நிலைக்கு மாற்றமாக இருக்கலாம். ஆனால் எதற்க்கெடுத்தாலும் ஆணும்-பெண்ணும் சமம் என வாதிடும் இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது)

இதைப்போன்ற செயல்கள் சமூகத்தில் ஆண்களும் பெண்ணுகளும் சமமற்ற நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது. மேற்கண்ட செயல்கள் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதியாக எந்த ஒரு சமூக நல ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் சமம் என சமத்துவம் பேசும் மனிதர்கள் கூட இந்நிலையே பொது வாழ்வில் ஏற்றுத்தான் கொள்கிறார்கள்.

ஆணோ பெண்ணோ அவர்கள் படைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு தகுந்தாற்போல சிற்சில செயல்களில் ஒருவரைக்காட்டிலும் ஒருவர் ஏற்ற இறக்க வாழ்வியல் நிலைகளை கொண்டு தான் இருக்கின்றனர். அதைத்தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகின்றன.

அதுமட்டுமல்ல, ஒரு செயலின் விளைவில் ஏற்படும் இழப்பு இருவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கே எந்த பிரச்சனைகளின் முடிவிலும் பாதிப்பு அதிகம். அதை நிதர்சனமாக விளக்கும் எத்தனையோ செய்திகளை அன்றாடம் நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம்.

ஆணும் பெண்ணும் சமம் என வாதிடுவோர்களின் அடிப்படை நோக்கம் அவர்களின் வாழ்வு வீட்டு சமையலறையோடு மட்டுமே முடங்கி விடக்கூடாது அவர்களுக்கும் இந்த சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதில் அந்த அங்கிகாரம் கிடைக்க போவதில்லை.சுதந்திரம் எனும் பெயரில் போலியாய் சமத்துவத்தை நிலை நாட்டுவதில்(?) எந்த பயனும் இல்லை.

சமம் எனும் பெயரில் பெண்கள் காட்சி பொருளாகத்தான் இன்று மேலை நாடுகளில் காட்டப்பபடுகின்றனர். இதில் அவர்கள் கண்ணியம் கேவலப்படுத்தப்படுவது தான் நிதர்சனமான உண்மை. அப்படியானால் சமமும், சமத்துவமும் உண்மையில் எங்கேதான் இருக்கிறது..?

அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்…

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

source: http://www.naanmuslim.com/2012/05/blog-post.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb