பல் துலக்குவது எப்படி…?
நம் அன்றாட வாழ்வில் பல துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம். துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவே கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத பேதமின்றி, அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
ஆகையினால் நாம் இந்த நல்ல பழக்கத்தினை சரியாக அறிந்துகொண்டு, சரிவர கடைப் பிடித்தலை கடமையாகக் கொள்வது கட்டாயம் தானே.
முதற் கோணல் முற்றும் கோணல் என்பது பழமொழி. நாம் காலையில் செய்யும் இம் முதல் காரியமே சரியாக அமைந்தால் அன்றைய அனைத்து காரியங்களுமே சரியாக நடக்கக் கூடுமல்லவா?
பல் துலக்குதலின் சரியான வழிமுறை யினையும், நுட்பத்தினையும் நாம் அறிந்துகொண்டு, நல்ல பலனடைந்து, நம் வழித்தோன்றல்களுக்கும் இந்த நல்ல பழக்கத்தினை படிப்பித்து, பலனடைய வைப்பது நமது கடமை.
பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க வல்லது.
நாம் ஏன் பல் துலக்க வேண்டும்?
பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கை ஆங்கிலத்தில் plaque என்றும் tartar என்றும் கூறுவர். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளே இந்த அழுக்கு (plaque) பல் ஈறுகளில் படியத் துவங்கும். இவைகள் பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும் காரணமாகிவிடுகிறது.
எனவே பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ உபயோகிக்கலாம்.
எப்படி சரியாக பல்லை துலக்குவது?
பல் துலக்குவதற்கு ஒரே ஒரு சரியான முறைதான் உள்ளது என்ற நிலை இல்லை. அந்நுட்பம் ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையினைப் பொருத்து மாறுபடும். பரவலாக, பல் மருத்துவர் பலராலும் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப் படும் அழுக்கினை (plaque) நீக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.
பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறை
பல் துலக்கியின் (plaque) குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி, சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம் முறையை கடைவாய் பற்களில் துவக்கி முன் பற்கள் வரை, மூன்று, மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும், அதே போல் கீழ் தாடையிலும் வலது, இடது, உள் வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.
இச் சுழற்சியினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வொர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.
முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும்.
கடைவாய் பற்களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதிகளில் பல்துலக்கியின் குச்சுகளால் நன்றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்னுமாக தேய்த்து விட வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று முடித்து விடாமல் மறவாது நமது நாக்கின் புற பகுதிகளில் பல் துலக்கியால் முன்னும் பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.
சிறியவர்களுக்கான முறை
சிறார்களை பல் முற்றும் ஈறுகளில் பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும்.
உங்களுக்கு தெரியுமா, பச்சிளம், பல் முளைக்காத பாலகர்களுக்கும் பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுதல் சாலச் சிறந்த முறை. குழந்தைகளை பாசப் பரிவுடன் ஒரு கையில் ஏந்திக்கொண்டு மறு கையில், ஆள்காட்டி விரலில் ஈர துணி (ணுதச்த்ஞு ஞிடூணிtட) சுற்றி ஈறுகளில் இதமாக முழுதாக தடவி துடைத்து விட வேண்டும்.
எத்தகைய பல்துலக்கிகளை உபயோகித்தல் நல்லது.
மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர் முனை குச்சுகளை தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள் கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளை தவிர்த்தல் நலமே.
எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்
பற்சிதைவை தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு . இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.
தவறான பல்துலக்கும் நுட்பம் தரும் பாதிப்புகள் என்ன?
உடலிலேயே மிக மிக கடினமானது, கெட்டியானது எதுவென்றால் அது பல்லின் வெளிப்புறமுள்ள எனாமல்தான். இது எலும்பை விட உறுதியானது. தவறான, முறையற்ற வகையில் பல் துலக்கும் பழக்கமான இந்த உறுதியான எனாமலையும் பாதித்து, செயலிழக்கச் செய்து, பற்சிதைவை உருவாக்கிவிடக் கூடும். அத்தோடு ஈறுகளை சிதைத்து, இரத்தம் வழியவிட்டு, புண்ணாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
எப்பொழுதும் பதமாக, மெதுவாக பல் துலக்கிகளை உபயோகியுங்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கிகளை மாற்றிவிடுவது அவசியம்.
காலை, இரவு பல் துலக்குகின்றவர்கள் மாரடைப்பு பற்றி கவலையே பட வேண்டாம்!
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல் துலக்குவீங்க? காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவீர்கள் என்றால், நீங்கள் மாரடைப்பு பற்றி கவலையே பட வேண்டாம்.
ஆம், ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்குவோருக்கும், குறைந்த பட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வோருக்கும் இதய பாதிப்பு வாய்ப்பு மிகக்குறைவே என்று லண்டன் ஆய்வு கூறுகிறது.
லண்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வாட் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் இது பற்றி சர்வே எடுத்தனர். இளைய வயதினர், நடுத்தர வயதினர் என்று 11 ஆயிரம் பேரிடம் சர்வே நடத்தப்பட்டது தனி மனிதனின் வித்தியாசமான வாழ்க்கை முறை, புகை பிடித்தல், குண்டாக இருப்பது, குடும்ப பாரம்பரிய சுகாதார பின்னணி போன்றவை தான் இதய பாதிப்பு வர காரணம் என்று கருதப்பட்டது. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதும் ஒரு முக்கிய விஷயமாக வாட் கருதினார். சர்வேக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பலரிடமும் இதுபற்றி தகவல்கள் சேகரிக்கச் சொன்னார். பல் துலக்குவது , பல் டாக்டரிடம் காட்டுவது பற்றி முக்கியமாக கேள்வி கேட்கப்பட்டது.
சர்வேயின் முடிவில் வாட் எதிர்பார்த்தபடியே தகவல்கள் கிடைத்தன. இதய பாதிப்பு ஏற்பட, லைப் ஸ்டைல் முதல் உடல் பருமனாக இருப்பது மட்டுமின்றி, பல் ஆரோக்கியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை உறுதி செய்தார். கிடைத்த சில முக்கிய தகவல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை பல் துலக்குவோருக்கு பல் திடத்தன்மை குறைவதுடன், இதய பாதிப்பு&ய்க்ஷள்ல்; ஏற்பட அதுவும் காரணமாக உள்ளது தெரிய வந்தது. இந்த வகையினருக்கு இதய பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு முறை கூட பல் துலக்குவதில்லை என்று தெரிய வந்தது. இவர்களுக்கு இதய பாதிப்புக்கு காரணியாக உள்ள ரியாக்டிவ் ப்ரோட்டீன், பைப்ரினோஜென் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வகையினரும் சேர்த்து 70 சதவீதம் பேர் இருந்தனர். இவர்களுக்கு இதய பாதிப்பு பல வகையில் வருவதற்கான அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சிலருக்கு மாரடைப்பு வந்ததும் தெரியவந்தது. இரண்டு வேளை பல் துலக்குவோருக்கு பல் சுகாதாரம் திடமாக இருப்பதுடன், இதய பாதிப்பு அறவே இல்லாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு தலைவர் வாட் கூறுகையில், ‘இதய பாதிப்புக்குக் காரணமாக பல விஷயங்கள் இருந்தாலும், பல் ஆரோக்கியமும் ஒரு காரணமாக உள்ளது பலருக்கு தெரிவதில்லை. இதை வலியுறுத்தவே நாங்கள் ஆய்வு எடுத்தோம்’ என்று தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்கும் பழக்கமுடையவரைக் கண்டு மாரடைப்பு நடுங்கி ஓடும்போது தினசரி ஐந்து வேளை மிஸ்வாக்கு (பல் துலக்குதல்) செய்பவரிடம் மாரடைப்பு நெருங்குமா? ஸுப்ஹானல்லாஹ்! இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறையை பேணி நடந்தால் நோய்கள் கூட கிட்ட நெருங்க அஞ்சுமே! சிந்திப்போமா?